Word |
English & Tamil Meaning |
---|---|
செய்யாள் | ceyyāḷ, n. <>செம்-மை. 1. Lakṣmī, as being red ; [செந்நிற முடையவள்] இலக்குமி. செய்யாட் கிழைத்த திலகம்போல் (பரிபா. 22, 4, பக். 175). 2. Mother's sister ; |
செய்யான் | ceyyāṉ, n. <>id. 1. See செய்யவன், 1 செய்யானை வெண்ணீ றணிந்தானை (திருவாச. 8, 13). . 2. Red, venomous centipede; |
செய்யுட்கணம் | ceyyuṭ-kaṇam, n. <>செய்யுள் +. (Pros.) The eight varieties of trisyllabic feet, viz., nila-k-kaṇam, nīr-k-kaṇam, mati-k-kaṇam or cantira-kaṇam, iyamāṉa-kaṇam or intira-kaṇam, cūriya-kaṇam, tī-k-kaṇam, vāyu-kaṇam , or māruta-kaṇam, antara-kaṇam or ākāya-kaṇam, பிரபந்தத்தை இயற்றத் தொடங்கும்போது செய்யுண்முதற்கண் வருதற்குரிய நிலக்கணம், நீர்க்கணம், மதிக்கணம் அல்லது சந்திரகணம், இயமானகணம் அல்லது இந்திரகணம் என்ற நற்கணம் நான்கும், சூரியகணம், தீக்கணம், வாயுகணம் அல்லது மாருதகணம், அந்தரகணம் அல்லது ஆகாய கணம் என்ற தீக்கணம் . |
செய்யுட்கலம்பகம் | ceyyuṭ-kalampakam, n. <>id. +. Anthology ; பலவகைப் பாடற்றிரட்டு . |
செய்யுட்கிழமை | ceyyuṭ-kiḻamai, n. <>id. +. (Gram.) The relation of an author to his work, denoted by the possessive case ; ஆறாம் வேற்றுமைப்பொருள்களுள் இன்னாரது பாட்டு என ஆக்கியோனுக்கும் அவன் பாட்டுக்கும் உள்ள உரிமையாகிய பொருள் (குறள், 6, உரை) . |
செய்யுட்கோவை | ceyyuṭ-kōvai, n. <>id. +. See செய்யுட்கலம்பகம். சிதம்பரச்செய்யுட் கோவை . . |
செய்யுட்சொல் | ceyyuṭ-col, n. <>id. +. Word used only in poetry ; செய்யுளில் மாத்திரம் வழங்கும் சொல். இது செய்யுட்சொல் லாதலால் வந்தது (திருக்கோ. 1, உரை) . |
செய்யுட்பாடு | ceyyuṭ-pāṭu, n. <>id. +. Expletive particle ; அசைநிலை. (ஈடு) . |
செய்யுட்பொருத்தம் | ceyyuṭ-poruttam, n. <>id. +. See செய்யுண்முதன்மொழிப்பொருத்தம் . . |
செய்யுட்போலி | ceyyuṭ-pōli, n. <>id. +. One of the two divisions of kattiyam , dist. fr. kaṭṭurai-p-pōli ; கத்தியவகை இரண்டனுள் ஒன்று. (வீரசோ. யாப். 6, உரை) . |
செய்யுண்முடிபு | ceyyuṇ-muṭipu, n. <>id. +. Peculiar forms which words assume in poetry ; செய்யுளில் மட்டும் வழங்குஞ் சொல்வழக்கு என்மனாரென்பது செய்யுண்முடிபெய்தி நின்றதோர் . . . சொல். (தொல். சொல். 1, சேனா) . |
செய்யுண்முதன்மொழிப்பொருத்தம் | ceyyuṇ-mutaṉ,moḻi-p-poruttam, n. <>id. +. (Poet.) Rules of propriety regarding the initial word or letter of a poem, ten in number, viz., maṅkala-p-poruttam, coṟ-poruttam, eḻuttu-p-poruttam, tāṉa-p-poruttam, pāṟ-poruttam, uṇṭi-p-poruttam, மங்கலப் பொருத்தம், சொற்பொருத்தம், எழுத்துப்பொருத்தம், தானப்பொருத்தம், பாற்பொருத்தம், உண்டிப்பொருத்தம், வருணப்பொருத்தம், நாட்பொருத்தம், கதிப்பொருத்தம், கணப்பொருத்தம் என்று பத்துவகையாய்க் காவியத்தின் முதற் செய்யுள் முதன்மொழியிற் பார்த்தற்குரிய பொருத்தம். |
செய்யுணடை | ceyyuṇaṭai, n. <>id. +. Poetic style ; செய்யுளில் வழங்கும் நடை . |
செய்யும்படி | ceyyum-paṭi, n. <>செய்- +. Order, instruction ; உத்தரவு. பிரசாதஞ் செய்தருளி வந்த செய்யும்படிப் படி . (S. I. I. iii, 211). |
செய்யுள் | ceyyuḷ, n. <>id. +. 1. Action; செய்கை. பாய்த்துள் விக்குள் என்றாற் போலச் செய்யுள் என்பதூஉம் தொழிற்பெயர் (தொல். பொ. 439, உரை). 2. Stanza, verse; 3. Poetic composition, poem; 4. Commentary; 5. Cultivated field; |
செய்யுள்வழக்கு | ceyyuḷ-vaḻakku, n. <>செய்யுள் +. Poetic or literary usage, opp. to ulaka-vaḻakku ; செய்யுளில் வழங்குஞ் சொல். திரிசொல் திசைச்சொல் வடசொல்லாகிய செய்யுள் வழக்கையும். (நன். 267, உரை) . |
செய்யுள்வழு | ceyyuḷ-vaḻu, n. <>id. +. Defect in versification ; யாப்பிலக்கணத்தோடு பொருந்தாத இயல்பினையுடைய குற்றம். (தண்டி. 112) . |
செய்யுள்விகாரம் | ceyyuḻ-vikāram, n. <>id. +. Changes in words allowed as poetic licence, nine in number, viz., valittal, melittal, nīṭṭal, kuṟukkal, virittal, tokuttal, mutaṟ-kuṟai, iṭai-k-kuṟai, kaṭai-k-kuṟai ; வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை எனச் செய்யுளிற் சொற்கள் பெறும் ஒன்பதுவகை மாறுபாடு. (நன். 155, உரை). |