Word |
English & Tamil Meaning |
---|---|
செய்யுளியல் | ceyyuḷ-iyal, n. <>id. +. A section in grammatical works, dealing with prosody ; இலக்கணநூல்களில் யாப்பிலக்கணங் கூறும் பகுதி . |
செய்யுளுறுப்பு | ceyyuḷ-uṟuppu, n. <>id. +. Constituent elements of a stanza, viz., eḻuttu, acai, cīr, taḷai, aṭi, toṭai ; எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற செய்யுளின் அங்கங்கள். |
செய்யோள் | ceyyōḷ, n. <>செம்-மை. 1. Ruddy or fair-complexioned woman; செந்நிற முள்ளவள். எய்யா விளஞ்சூற் செய்யோள் (பொருந. 6). 2. See செய்யாள், 1. செய்யோள் சேர்ந்தநின் மாசி லகலம் (பரிபா. 2, 31). |
செய்யோன் | ceyyōṉ, n. <>id. 1. Ruddy, fair-complexioned person ; செந்நிறமுள்ளவன். செய்யோ னகளங்கன் (பெருந்தொ. 817). 2. Mars ; 3. Arhat ; |
செய்வகை | cey-vakai, n. <>செய்- +. Method ; செய்யுமுறை . |
செய்வது | ceyvatu, n. <>id. 1. That which ought to be done ; செய்யத்தக்கது. செய்வது தெரிந்திசிற் றோழி (அகநா. 281). 2. (Gram.) Agent, doer of an action ; |
செய்வினை | cey-viṉai, n. <>id. +. 1. Work, undertaking; செய்யுந் தொழில். செய்வினை தூய்மை (குறள், 455). 2. Karma; 3. (Gram.) Verb in active voice; 4. Witchcraft, sorcery; |
செய்வினைமடி - தல் | cey-viṉai-maṭi-, v. intr. <>id. +. To shirk or delay one's appointed work, to fail in one's duty ; உரியதொழிலிற் சோம்புதல். செய்வினை மடிந்தோற் சேர்ந்துறை விலளே. . . மலர்மகள் (பெருங். இலாவாண. 17, 39) . |
செய | ceya, <> jaya. int. An exclamation of victory ; --n. The 28th year of the Jupiter cycle; வெற்றிக்குறிப்பான சொல். துந்துமியுடனே செயசத்தஞ் சேர்ந்தன வன்றே (சிவரக. தேவி. நாட். 3). ஆண்டு அறுபதனுள் 28-ஆம் வருஷம். |
செயகோஷம் | ceya-kōṣam, n. <>id. +. Shouts of victory ; வெற்றியார்ப்பு . |
செயசூறை | ceya-cūṟai, n. <>id. +. 1. Plunder following victory in a battle ; வென்ற பின் அடிக்குங் கொள்ளை. (சங். அக.) 2. Spoils of victory ; |
செயசேதி | ceya-cēti, n. prob. kṣaya + chēdin. Salt; உப்பு. (மூ. அ.) |
செயடால் | ceyaṭāl, n. <>U. chauṭāl. Foppery ; See சவடால். சிங்கார வெள்ளைச் செயடாலும் (விறலிவிடு. 29) . |
செயதிவசம் | ceya-tivacam, n. <>jaya +. 360th day from one's birthday, considered auspicious ; பிறந்த தினத்திலிருந்து 360 -ஆம் நாளாகிய சுபதினம். (விதான. குணாகுண. 79, உரை) . |
செயந்தன் | ceyantaṉ, n. See சயந்தன். செயந்தன் மாபெருந் துணைவன். (பாரத. ஏழாம்போர். 5) . |
செயந்தி | ceyanti, n. <>jayantī. Birthday of gods and great personages ; See ஜயந்தி . . |
செயந்திபுரம் | ceyanti-puram, n. <>Jayantipura. Tiru-c-centūr; திருச்செந்தூர். (திருச்செந். பு. செயந்திபு. 3) . |
செயநீர் | ceya-nīr, n. prob. செய்- +. A medicinal preparation of lime and sal-ammoniac ; சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர். (பதார்த்த. 1488) . |
செயநீர்க்கருத்தன் | ceya-nīr-k-karuttaṉ, n. <>செயநீர் +. Sal-ammoniac ; நவச்சாரம். (மூ. அ.) |
செயப்படுபொருள் | ceya-p-paṭu-poruḷ, n. <>செய்- +. 1. (Gram.) Object of a verb; வினை முதலது தொழிலின்பயனை அடைவது. வினையே செய்வது செயப்படுபொருளே (தொல். சொல். 112). 2. Subject of a treatise required to be mentioned by its author at the commencement; |
செயப்படுபொருள்குன்றாதவினை | ceya-p-paṭu-poruḷ-kuṉṟāta-viṉai, n. <>செயப்படுபொருள் +. (Gram.) Transitive verb ; செயப்படுபொருளைப் பெறவல்ல வினைச்சொல். (நன். 320, சடகோப.) |
செயப்படுபொருள்குன்றியவினை | ceya-p-paṭu-poruḷ-kuṉṟiya-viṉai, n. <>id. +. (Gram.) Intransitive verb ; செய்யப்படுபொருளைப் பெறமாட்டாத வினைச்சொல். (நன். 320, சடகோப.) |
செயப்பாட்டுவினை | ceya-p-pāṭṭu-viṉai, n. <>செய்- + படு- +. 1. (Gram.) Verb in the passive voice ; படுவிகுதிபுணர்ந்த முதனிலையுடைய தாய்ச் செயப்படுபொருளை எழுவாயாகக் கொண்ட வினை. (இலக். கொத். 67.) 2. Karma ; |
செயப்பூர்ப்பச்சை | ceyappūr-p-paccai, n. <>Jaya-pura +. True emerald, as brought from jeypore, opp. to vaḷaiyaṟ-paccai ; [செயபுரியினின்றும் வருவது] உயர்ந்த மரகதமணி. |