Word |
English & Tamil Meaning |
---|---|
செருக்கு - தல் | cerukku-, 5 v. intr <>செருகு-. To be chocked, as by a bone or a piece of areca-nut; பாக்கு முதலியன தொண்டையில் அடைத்துக் கொள்ளுதல். (W.) |
செருக்கு | cerukku, n. <>id. See செருகு கொண்டை. Loc. . |
செருக்கொடு - த்தல் | ceru-k-koṭu-, v. intr. <>செரு +. To give battle ; எதிர்த்து யுத்தஞ்செய்தல். தூதனு மெதிரே செருக்கொடுத்தான் (கம்பரா. அதிகாய. 177) . |
செருகு - தல் | ceruku-, 5 v. [T. ceruvu, K. serku.] tr. To insert, to slide into; இடை நுழைத்தல். திருகிச்செருகுங் குழன்மடவீர் (கலிங். 30). --intr. 1. To roll sideways, as eyeballs; 2. To get held up in stomach, as indigestible matter; 3. To have colic pains; |
செருகுகொண்டை | ceruku-koṇṭai, n. <>செருகு- +. A mode of dressing the hair ; முடிக்குங் கொண்டைவகை. (யாழ். அக.) |
செருகுபூ | ceruku-pū, n. <>id. +. Flowers inserted singly in making wreaths ; இடையிடையே வைத்துத் தொடுக்கப்பட்ட பூ. (யாழ். அக.) |
செருகொடி | cerukoṭi, n. Red creeper ; See பப்பிளி. (A.) |
செருத்தணி | ceru-t-taṇi, n. <>செரு + தணி-. Tiruttaṇikai; திருத்தணிகை. (கந்தபு. வள்ளி. 216.) |
செருத்தல் | ceruttal, n. perh. செறு-. [K. keccal.] Udder, as of a cow ; மாட்டுமடி. குடம்புரை செருத்தல். . . எருமை. (சீவக. 2102) . |
செருத்தி | cerutti, n. perh. id. Banner of victory; badge of distinction ; வெற்றிக்கொடி . (W.) |
செருத்துணைநாயனார் | ceruttuṇai-nāyaṉār, n. A canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
செருத்தொழிலோர் | ceru-t-toḻilōr, n. <>செரு +. See செருநர், 1. (உரி. நி.) . |
செருந்தி | cerunti, n. 1. A kind of sedge; வாட்கோரை. களிறுமாய் செருந்தியொடு (மதுரைக். 172). 2. Panicled golden-blossomed pear tree. See சிலந்தி, 1. செருந்தி காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே (தேவா. 40, 9). 3. Indian houndsberry. See மணித்தக்காளி. (மலை.) 4. (Mus.) A secondary melody-type of the kuṟici class; |
செருந்து | ceruntu, n. 1. Petal ; பூ முதலியவற்றின் இதழ். செருந்தவிழ் துளபமாலை (பாரத. எட்டாம். 15). 2. See செருந்தி, 2 பரிமளப்பூஞ் செருந்தொன்று சோலை (தஞ்சைவா. 9). |
செருநர் | cerunar, n. <>செரு-. 1. Soldiers, warriors ; படைவீரர். (பிங்.) 2. Enemies ; |
செருப்படி | ceruppaṭi, n. See செருப்படை. (W.) . |
செருப்படிநாயன் | ceruppaṭi-nāyaṉ, n. See செருப்படை. . |
செருப்படை 1 | ceru-p-paṭai, n. <>செரு +. Army of tried soldiers ; சிறந்த போர்வீரர்களைக் கொண்ட சேனை. செருப்படையான் பல்புகழ் பாடி (பு. வெ. 9, 31) . |
செருப்படை 2 | ceruppaṭai, n. A diffuse prostrate herb, Glinus latoides ; படர்கொடிவகை . (A.) |
செருப்பளிச்சம்பா | ceruppaḷi-c-campā, n. See சரப்புளிச்சம்பா. . |
செருப்பு | ceruppu n. [T. ceppu, K. kerpu, M. cerippu.] 1. Leather sandals, slippers, shoe ; பாதரட்சை. மணியழுத்திச் செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம் (நாலடி, 347). 2.A mountain in pūḻi-nāṭu ; |
செருப்புக்கட்டை | ceruppu-k-kaṭṭai, n. <>செருப்பு +. Worn-out sandals ; தேய்ந்தசெருப்பு . (W.) |
செருப்புக்கடி | ceruppu-k-kaṭi, n. <>id. +. Shoe-bite ; செருப்பு அழுத்துதலால் உண்டாய புண். |
செருப்புத்தின்னி | ceruppu-t-tiṉṉi, n. <>id. +. Dog, as sandals-eater ; [தோற் செருப்பைத் தின்னுவது] நாய் . (J.) |
செருப்புநெருஞ்சி | ceruppu-neruci, n. perh. சிவப்பு +. Red cow-thorn ; See செப்பு நெருஞ்சி . (W.) . |
செருப்பூசி | ceruppūci, n. <>செருப்பு + ஊசி. Shoemaker's awl ; செருப்புத் தைக்கும் ஊசி . (W.) |
செருமகள் | ceru-makaḷ, n. <>செரு +. Durgā, as the war Goddess ; [போர்க்குரிய பெண்தெய்வம்] துர்க்கை. (இலக். அக). |