Word |
English & Tamil Meaning |
---|---|
செருமல் | cerumal, n. <>செருமு-. [K. kemmu.] Hemming, clearing the throat ; தொண்டையைச் சுத்தஞ்செய்யக் கனைக்கை . |
செருமலையரியன் | cerumalai-y-ariyaṉ, n. A kind of paddy ; ஒருவகை நெல். |
செருமு - தல் | cerumu-, 5 v. intr. 1. To be full, replete; நிரம்புதல். கருனை வாசமும் . . . அகிற்புகை வாசமுந் செருமி (சீவக. 130). 2. To be crowded; 3. To sink; to pierce through; 4. [K. kemmu.] To hem, cough; 5. To get choked;--tr. To crowd in, stuff or cram in, fill up; |
செருமுனை | ceru-muṉai, n. <>செரு +. 1. Field of battle ; போர்க்களம். செருமுனையுள் வைகி (பு. வெ. 1, 6). 2. Fighting army ; |
செருவஞ்செய் - தல் | ceruva-cey-, v. intr. <>id. +. To attack ; மாறுபடுதல். செருவஞ்செய்தற்கு (பரிபா. 8, 87) . |
செருவிடைவீழ்தல் | ceru-v-iṭai-vīḻtal, n. <>id. +. (Puṟap.) Theme celebrating the heroic death of the warriors who defended the moat round a city and the adjoining forest ; அகழினையும் காவற்காட்டையுங் காத்துப் பட்டவீரரது வெற்றியைப் புகழும் புறத்துறை. (பு. வெ. 5, 4) . |
செருவிளை | ceru-viḷai, n. perh. செறு + விளை-. White-flowered mussel-shell creeper ; வெள்ளைக்காக்கணம். (குறிஞ்சிப். 68) . |
செருவுறு - தல் | ceru-v-uṟu-, v. intr. <>செரு +. To quarrel; to sulk ; ஊடுதல். தீர்விலதாகச் செருவுற்றாள் (பரிபா. 7, 75) . |
செல்(லு) - தல் | cel-, 3 v. cf. cal. [T. cellu, K. sal, M. celka.] intr. 1. To go, flow, pass; to traverse, as the eye, mind; போதல். சென்ற தேஎத்து (தொல். பொ. 146). 2. To occur; 3. To fall, as on the ground; 4. To become, form; 5. To spread, as fame; 6. To be effective; to have influence; 7. To last, endure, exist; 8. To pass, as coin; 9. To be required; to cost; 10. To be suitable; to be acceptable; 11. To be acceptable to the system; 12. To be due, as money; to appertain to, as a right; 13. To pass away, lapse, expire, as time; 14. To disappear, diminish, as anger; 15. To perish; to be ruined; 16. To die; 1. To approach; 2. To become, turn into, attain; |
செல் 1 | cel, n. <>செல்-. [K. sale.] 1. Career, swift course; போகை. செல்லொன்றுகணையால் (கம்பரா. இராவணன்வதை. 15). 2. Payment of loan; 3. Loab, debt; 4. Note of payment; 5. Period that has elapsed; 6. Cloud; 7. Sky; 8. Thunder-bolt; 9. Javelin; |
செல் 2 | cel, n. cf. சிதல். White ant ; கறையான். (பிங்.) செல்லரித்திடவு மாண்டெழாதாள் (கம்பரா. காட்சி. 15). |
செல்கதி | cel-kati, n. <>செல்-+. 1. The ultimate or last refuge ; எங்கள் செல்கதி வந்தது (கம்பரா. கங்கை. 10). 2. Salvation ; |
செல்காரியம் | cel-kāriyam, n. <>id. +. The matter on hand ; நடத்தப்பெறுங் காரியம். (W.) |
செல்காலம் | cel-kālam, n. <>id. +. 1. Time of one's influence ; செல்வாக்குள்ள காலம். 2. Past time ; |
செல்கை | celkai, n. <>id. See செல்வாக்கு. Loc. . |