Word |
English & Tamil Meaning |
---|---|
செல்லம் | cellam, n. <>செல்வம். 1.Opulence, prosperity, fortune; ஐசுவரியம். செல்லஞ் செருக்குகிறது, வாசற்படி வழுக்குகிறது. (W.) 2. Private treasury, as of a king; 3. See செல்லப்பேச்சு, 2. இந்தச் செல்வமெல்லாம் இங்கே நடவாது. 4. Amusement, pastime; 5. [M. callam.] See செல்லப்பெட்டி. Tj. 6. Indulgence; |
செல்லம்பொழி - தல் | cellam-poḻi-, v. intr. <>செல்லம்+. 1. To be happy and prosperous; செல்வமாய் இருத்தல். அந்த ஊர் செல்லம்பொழிகிறது. Loc. 2. To play merrily; to be frolicsome, jovial; |
செல்லமடி | cella-maṭi, n. <>id. +. Premature udder of a heifer; இளமையிற்பெருத்த கன்றுமடி . (J.) |
செல்லமடிப்பு | cela-maṭippu, n. <>id. +. Folds of the abdomen, due to luxurious living ; செல்வச் செழிப்பில் விழும் வயிற்றுமடிப்பு . |
செல்லரி - த்தல் | cel-l-ari-, v. intr. <>செல் +. To be eaten by white ants ; கறையானால் தின்னப்படுதல். செல்லரித்தவோலை செல்லுமோ (அஷ்டப். திருவரங். கலம். 53) . |
செல்லல் | cellal, n. <>செல்-. 1. Sorrow, suffering, affliction; துன்பம். (தொல். சொல். 302.) 2. Disgust; 3. [T. jella.] Fresh-water fish, yellowish, attaining 3 in. in length, Etroplus maculatus; |
செல்லவண்டி | cella-vaṇṭi, n. <>செல்லம் + பண்டி. See செல்லத்தொந்தி . . |
செல்லவயிறு | cella-vayiṟu, n. <>id. +. See செல்லத்தொந்தி. . |
செல்லவை - த்தல் | cell-vai-, v. tr. <>செல்- +. To pass, as a base coin; செல்லாத நாணயத்தைச் செலாவணியாக்குதல். |
செல்லன | cellaṉ, n. <>செல்லம். 1. See செல்லப்பிள்ளை, 1, 2. . 2. Wealthy person; |
செல்லா - தல் | cel-l-ā-, v. intr. <>செல் + ஆ-. 1. To be paid or discharged, as loan; கடன் தொகை செலுத்தப்படுதல். 2. To be dead and gone; |
செல்லாக்காசு | cellā-k-kācu, n. <>செல்- + ஆ neg. +. [K. sallada-kāsu.] 1. Coin that will not pass; base coin; செலாவணியாகாத பணம். 2. One who has lost credit or influence; 3. See செல்லல், 3. 4. A medicinal herb; |
செல்லாக்காலம் | cellā-k-kālam, n. <>id. + id. +. 1. Time when one's influence is gone, as by loss of office, reputation, etc.; செல்வாக்கு நீங்கின காலம். 2. Decrepit, old age; |
செல்லாநெறி | cellā-neṟi, n. <>id. + id. +. Aerial region, as impassable; [செல்லுதற்கரிய வழி] ஆகாயம். செல்லாநெறி யேறினர் (அரிச். பு. விவாக. 59). |
செல்லாமை | cellāmai, n. <>id. + id. 1. Remaining, stopping; பிரிந்துபோகாமை. செல்லாமை யுண்டே லெனக்குரை (குறள், 1151). 2. Poverty; 3. Inability; 4. Unavoidable necessity, inevitability; |
செல்லாய் | cellāy, n. <>U. sellā. A kind of muslin; See சல்லா. Loc. . |
செல்லாயி | cellāyi, n. A village goddess; ஒரு கிராமதேவதை. |
செல்லாவாழ்க்கை | cellā-vāḻkkai, n. <>செல்- + ஆ neg. +. [K. salladabāḻke.] Wretched life, life of poverty; வறுமை வாழ்வு. சில்விலைக்கிடூஉஞ் செல்லா வாழ்க்கையர் (பெருங். உஞ்சைக். 55, 49) . |
செல்லாவிடம் | cellā-v-iṭam, n. <>id. + id. +. Straitened circumstances ; வறுமைக்காலம். செல்லாவிடத்துங் குடிப்பிறந்தார் செய்வன (நாலடி, 149) . |
செல்லாறு | cel-l-āṟu-, n. <>id. +. The proper or advisable course, the correct or the right path ; கைக்கொள்ளும் முறை. இருளற விளங்குஞ் செல்லா றிதுவென (பெருங். நரவாண. 7, 90-91) . |
செல்லான் | cellāṉ, n. See செலான். Loc. . |
செல்லானகணக்கு | cel-l-āṉa-kaṇakku, n. <>செல் + ஆ- +. Paid-off account; தீர்ந்துபோன கணக்கு . |
செல்லி | celli, n. <>செல்லம். 1. See செல்லப் பெண். தங்கையான செல்லி மங்கையர்க்குள் நல்லி (இராமநா. ஆரணி. 12). . 2. See செல்லாயி. |
செல்லிடம் | cel-l-iṭam, n. <>செல்- +. Prosperous circumstances; பொருளுள்ள காலம். செல்லிடத்துஞ் செய்யார் சிறியவர் (நாலடி, 149). |