Word |
English & Tamil Meaning |
---|---|
செல்சார் | cel-cār, n. <>id. +. Support; பற்றுக்கோடு. இரப்பவர்க்குச் செல்சாரொன்றீவோர் (நான்மணி. 39) . |
செல்சார்வு | cel-cārvu, n. <>id. +. See செல்சார். சிறைகொளப் பட்டியான் செல்சார் வுறுத்த பின் (பெருங். இலாவாண. 10, 126) . . |
செல்சுடர் | cel-cuṭar, n. <>id. +. Declining sun ; அஸ்தமிக்குஞ் சூரியன். செல்சுடர் நோக்கி (நாலடி, 394). |
செல்பாக்கி | cel-pākki, n. <>id. +. Statement of demand, collection and balance of revenue in a village; வரவு செலவுப் பாக்கிக் கணக்கு. |
செல்ல | cella, adv. <>id. +. 1. At a distance, out of the way ; அகல. செல்லப் போய் நிற்பாள் திரு (அபி. சிந். 277: தனிப்பா). 2. After some time ; 3. To the very end ; |
செல்லக்கட்டு - தல் | cella-k-kaṭṭu-, v. tr. <>id. +. 1. To accomplish ; திட்டமாய் முடித்தல். 2. To bring round, as a person; 3. To liquidate, pay up arrears; |
செல்லக்கலியாணம் | cella-k-kaliyāṇam, n. <>செல்லம் +. Child-marriage; மணமகனும் மண மகளும் சிறுகுழந்தைகளாக இருக்குபோதே செய்யும் விவாகம். |
செல்லக்குடை | cella-k-kuṭai, n. <>id. +. Immense wealth; மிகுசெல்வம். Loc. |
செல்லக்குந்தாணி | cella-k-kuntāṇi, n. <>id. +. Boy or girl very indulgently brought up, used in contempt ; மிகச் செல்வமாக வளர்க்கப்பட்ட பிள்ளை. Loc. |
செல்லங்கொஞ்சு - தல் | cellaṅ-kocu-, v. intr. <>id. +. To prattle; to use gestures, as a humoured child or woman; to fondle, dally with a woman ; குழந்தை பெண்டிர் முதலியவருடன் கொஞ்சிப் பேசுதல். |
செல்லங்கொடு - த்தல் | cellaṅ-koṭu-, v. intr. <>id. +. To be indulgent, as to a child ; அன்பு மேல¦ட்டால் குழந்தைகட்கு அதிக இடங்கொடுத்தல். |
செல்லச்சிரிப்பு | cella-c-cirippu, n. <>id. +. Delicate, gentle smile ; புன்சிரிப்பு. (W.) |
செல்லச்சோறு | cella-c-cōṟu, n. <>id. +. Food repeatedly given in small quantities, as to children brought up indulgently; dainties ; செல்வத்தால் சிறிதுசிறிதாக அடிக்கடி கொடுக்கும் உணவு. (W.) |
செல்லடி 1 - த்தல் | cel-l-aṭi-, v. tr. <>செல் +. See செல்லரி-. Loc. . |
செல்லடி 2 - த்தல் | cel-l-aṭi-, v. tr. <>செல் +. See செல்வை-.Tinn. . |
செல்லத்தனம் | cella-t-taṉam, n. <>செல்லம் +. See செல்லம். (J.) . |
செல்லத்தீனி | cell-t-tīṉi, n. <>id. +. See செல்லச்சோறு. (யாழ். அக.) . |
செல்லத்தொந்தி | cella-t-tonti, n. <>id. +. Paunch belly due to luxurious living; செல்வச்செழிப்பில் இளமையிற் பெருத்த வயிறு. |
செல்லத்தொப்பை | cella-t-toppai, n. <>id. +. See செல்லத்தொந்தி. . |
செல்லநடை | cella-naṭai, n. <>id. +. 1. Gentle, graceful gait, as of children; குழந்தை முதலியோரின் தளர்நடை. 2. Slow, loitering walk ; |
செல்லநரை | cella-narai, n. <>id. +. Premature grey hairs, supposed to result from luxurious living ; செல்வமாக வளர்வதால் இளமையில் உண்டாம் நரை . (J.) |
செல்லப்பசி | cella-p-paci, n. <>id.+. Frequent hunger, as of children ; குழந்தைகட்கு அடிக்கடி உண்டாம் பசி. (W.) |
செல்லப்பிள்ளை | cella-p-piḷḷai, n. <>id. +. 1. Child brought up delicately, petted child; அருமைக் குழந்தை. 2. Person living in luxury and ease; 3. (Dram.) The second character in comedy, supposed to have been originally a representation of Skanda; |
செல்லப்பிள்ளைக்காய்ச்சல் | cella-p-piḷḷai-k-kāyccal, n. <>செல்லப்பிள்ளை+. A kind of fever ; ஒருவகைச் சுரநோய். (யாழ். அக.) |
செல்லப்பிள்ளைவிளையாட்டு | cella-p-piḷḷai-viḷaiyāṭṭu-, n. <>id. +. Thoughtless, extravagant conduct of a person given to luxurious and easy life ; சுகவாழ்விலிருப்பவனது சருதலற்ற நடத்தை . Colloq. |
செல்லப்பிள்ளைவேட்டி | cella-p-piḷḷai-vēṭṭi, n. <>id. +. A small cloth usually worn by children ; சிறுவர் அணியும் சிற்றுடை. Tj. |
செல்லப்பெட்டி | cella-p-peṭṭi, n. <>செல்லம் +. [M. cellappeṭṭi.] Metallic box for keeping betel leaves and areca-nut ; வெற்றிலை பாக்கு வைக்கும் பெட்டி . |
செல்லப்பெண் | cella-p-peṇ, n. <>id. +. Female child or girl brought up delicately; petted girl ; அருமைப்பெண். |
செல்லப்பேச்சு | cella-p-pēccu, n. <>id. +. 1. Child's prattle or lisp ; மழலைச்சொல். 2. Soft, winning talk, as of a woman; |