Word |
English & Tamil Meaning |
---|---|
செவ்வழி | cev-vaḻi, n. <>id. +. 1. Good way, path of virtue; நல்லமார்க்கம். கைதவந் திருப்பாச் செவ்வழி நிறீஇ (பெருங். மகத. 15, 19). 2. (Mus.) A primary melody-type of the mullai class; |
செவ்வழிப்பாலை | cev-vaḻi-p-pālai, n. <>id. +. (Mus.) A secondary melody-type of the pālai class ; பாலையாழ்த்திறத்தொன்று. தீந்தொடைச் செவ்வழிப்பாலை. (சிலப். 7, 47, பக். 218). |
செவ்வழிபாடு | cev-vaḻi-pāṭu, n. <>id. +. Absolute obedience, as of pupil towards his teacher ; முற்றும் அடங்கியொழுகுகை. செவ்வழிபாடராகிச் சிலைத்தொழில் சிறுவர் கற்ப (சீவக. 1758). |
செவ்வழியாழ் | cevvaḻi-yāl, n. <>செவ்வழி +. See செவ்வழி, 2. வண்டுகள் செவ்வழியாழ்ப் பண்ணினைப் பாடும் (சிலப்.11, 88, உரை) . . |
செவ்வள்ளி | cev-vaḷḷi, n. <>செம்-மை +. [M. cevvaḷḷi.] Purple yam, m. cl., Dioscorea purpurea ; வள்ளிக்கொடிவகை. (தைலவ. தைல. 94, 24) . |
செவ்வன் | cevvaṉ, adv. See செவ்வனம். செவ்வனிறைகாக்கு மிவ்வுலகில் (பு. வெ. 10, முல்லைப். 9). . |
செவ்வனம் | cevvaṉam, adv. <>செம்-மை. Rightly, properly, correctly, directly, completely ; செவ்வையாக. செவ்வனஞ் செல்லுஞ் செம்மை தானிலள் (மணி. 3, 81) . |
செவ்வனார் | cevvaṉār, n. <>id. + ஆர்-. See செவ்வாம்பல். (மலை.) . |
செவ்வனிறை | cevvaṉ-iṟai, n. <>செவ்வன் +. (Gram.) Direct answer; நேர்விடை. உயிர் எத்தன்மைத்து என்று வினாயவழி உணர்தற்றன் மைத்து என்றல் செவ்வனிறையாம் (தொல். சொல். 13, சேனா) . |
செவ்வாப்பு | cevvāppu, n. <>செம்-மை +. 1. See செவ்வாப்புக்கட்டி. . 2. Cyanosis; |
செவ்வாப்புக்கட்டி | cevvāppu-k-kaṭṭi, n. <>செவ்வாப்பு +. A kind of erysipelas affecting the head, especially of children ; குழந்தைகளுக்குத் தலையிலுண்டாகும் சிவப்புக் கட்டி . |
செவ்வாப்பெண்ணெய் | cevvāppeṇṇey, n. <>id. +. A medicinal oil; மருந்தெண்ணெய் வகை. |
செவ்வாம்பல் | cev-v-āmpal, n. <>செம்-மை +. [K. kempāval.] Red Indian water-lily, Nymphaea lotus-rubra; செந்நிறமான அல்லிவகை. (பிங்.) |
செவ்வாமணக்கு | cev-v-āmaṇakku, n. <>id. +. A variety of castor-plant; சிவப்பாமணக்கு. (பதார்த்த. 531.) |
செவ்வாய் | cev-vāy-, n. <>id. + வாய்-. [M. cevvāyi.] 1. The planet Mars, as red, one of nava-k-kirakam, q.v. ; நவக்கிரகங்களுள் ஒன்று. (விதான. நட்பா. 1). 2. See செவ்வாய்க்கிழமை. ஞாயிறு திங்கள் செவ்வாய் (தேவா. 1171, 1). |
செவ்வாய்க்கிழமை | cevvāy-k-kiḻamai, n. <>செவ்வாய் +. Tuesday, the third day of the week; வாரமேழனுள் மூன்றாவது. |
செவ்வாய்தோஷம் | cevvāy-tōṣam, n. <>id. +. (Astrol.) Inauspicious position of Mars when occupying the 1st, 7th and 8th houses from the ascendant ; இலக்கினம், ஏழு, எட்டாமிடங்களில் செவ்வாயிருப்பதாகிய தோஷம் . |
செவ்வாய்நோன்பு | cevvāy-nōṉpu, n. <>id. +. Ceremony performed in secret by Vēḷāḷa women twice a year on Tuesday midnights when no male, not even a babe in arms, is allowed to be present ; வருஷம் இருமுறை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் புருஷரும் ஆண்குழந்தைகளும் அறியாவகை வேளாளமகளிரால் மிக இரகசியமாக அனுட்டிக்கப்படும் விரதம் . |
செவ்வாய்ப்பிள்ளையார் | cevvāy-p-piḷḷaiyār, n. <>id. +. See செவ்வாய்நோன்பு. Loc. . |
செவ்வாயாட்சி | cevvāy-āṭci, n. <>id. +. (Astrol.) Aries and Scorpio, the signs of the zodiac belonging to Mars ; செவ்வாயின் சொந்த ராசிகளான மேஷவிருச்சிகங்கள். (விதான.) |
செவ்வாரம் | cev-vāram, n. <>செம்-மை +. [M. cevvāram.] Equal division of the produce of a field between the owner and the cultivator ; நிலச்சுவான்தாரும் பயிரிடுவோனும் பிரித்துக்கொள்ளும் சரிவாரம் . Loc. |
செவ்வாரை | cev-v-ārai, n. <>id. +. A red pseudo fern, Marselea ; ஆரைப்பூடுவகை . (W.) |
செவ்வாலிக்கெண்டை | cevvāli-k-keṇṭai, n. Sea-fish, silvery, attaining 6 in. in length, Barbus filamentosus; ஆறங்குல நீளமும் வெண்ணிறமுள்ள கடல்மீன்வகை . |
செவ்வாவிரை | cev-v-āvirai, n. <>செம்-மை +. Red cassia; ஆவிரை வகை . |
செவ்வாழை | cev-vāḻai, n. <>id. +. [K. kempubāḷe.] A kind of plantain tree yielding red fruits of delicate flavour once in three years in large bunches of 60 to 120 ; மூன்று வருஷத்துக்கொருமுறை 60-முதல் 120-வரை செந்நிறமும் மணமுமுள்ள காய்கள்கொண்ட தாற்றைவிடும் வாழைவகை. (G. Sm. D. I, 215). |