Word |
English & Tamil Meaning |
---|---|
அழற்புண் | aḻaṟ-puṇ n. <>அழல்+. Inflamed ulcer; சிவந்து இரத்தம் வடியும் புண். (இங்.வை.) |
அழற்புற்று | aḻaṟ-puṟṟu n. <>id.+. Disease creating an outgrowth in the white of the eye which causes burning sensation; வெள்ளை விழியில் எரிசதையை உண்டாக்கும் ஒரு நோய். (ஜீவரட்.266.) |
அழற்றடம் | aḻaṟṟaṭam n. <>id.+. Vessel containing fire for warming; தீக்காய் கலம். அழற்றடம் புரையு மருஞ்சுரம். (திருக்கோ.202, கொளு.) |
அழற்றி | aḻaṟṟi n. <>அழற்று-. That which cause burning; அழலச்செய்வது. |
அழற்று - தல் | aḻaṟṟu- 5 v.tr. caus. of அழல்-. To burn, scorch, heat, cauterise, cause smarting as a burn, or a caustic or a poison, to inflame, irritate; வெம்மைசெய்தல். அழற்றிய பல்கதிர் (கந்தபு.திருப்பர.6.) |
அழறு | aḻaṟu n. <>அளறு. Mire; சேறு. அழறலர் தாமரை. (திவ்.இயற்.திருவிருத்.58). |
அழன் | aḻaṉ prob. அழி1-. 1. Corpse, carcase; பிணம். (தொல்.எழுத்.354). 2. Evil spirit; |
அழனம் 1 | aḻaṉam n. <>அழன். Corpse; பிணம். (பிங்.) |
அழனம் 2 | aḻaṉam n. <>அழல்-. 1. Heat; வெம்மை. (பிங்). 2. Fire; |
அழனாகம் | aḻaṉākam n. <>id.+nāga. A poisonous snake whose lick is said to cause burning sensation; ஒருவகை விடப்பாம்பு. (W.) |
அழனிறக்கடவுள் | aḻaṉiṟa-k-kaṭavuḷ n. <>அழல்+நிறம்+. Siva, having the hue of fire; சிவபிரான். ஆலவாயி னழனிறக் கடவுள் (இறை, 1, பக்.6.) |
அழாக்கு | aḻākku prob. ஆழ்-. n. Ollock, a dry or liquid measure. See ஆழாக்கு. வீரிய மழாக்குடற் பித்த முழக்கு (தணிகைப்பு.அகத்திய.308). |
அழாந்தை | aḻāntai n. <>அழான்தந்தை. Father of Aḻān; அழானுக்குத் தந்தை. (தொல்.எழுத்.348, உரை.) |
அழாஅல் | aḻāal n. <>அழு-. Weeping, crying; அழுகை. அழாஅன் மறந்த புன்றலைச் சிறாஅர் (புறநா.46.) |
அழி 1 - தல் | aḻi- 4 v.intr. [K. M. aḻi.] 1. To perish, to be ruined; நாசமாதல். 2. To decay, to be mutilated; 3. To fail, to be frustrated; 4. To become unsettled, to lose standing; 5. To be defeated; 6. To melt with love; 7. To suffer, to be troubled; 8. To be disheartened; 9. To swell, increase; 10. To sympathise with; 11. To be spent, used up, sold out, exhausted; |
அழி 2 - த்தல் | aḻi- 11 v.tr. caus. of அழி1-. 1. To destroy, exterminate; சங்கரித்தல். (கந்தபு.நகரழி.6). 2. To spend; 3. To ruin, damage; 4. To efface, obliterate; 5. To disarrange; 6. To change the form or mode of; 7.To cause to forget; 8. To smear; 9. To leave off; bring to a close; |
அழி 3 | aḻi n. <>அழி1-. 1. Ruin, destruction; கேடு. அழிவந்த செய்யினும் (குறள்.807). 2. Straw; 3. Crib for straw; 4. Lattice; 5. Pity; |
அழிகட்டு | aḻi-kaṭṭu n. <>id.+. 1. Fabrication to deprive another of his right, forgery; பொய்ச்சீட்டு. (W.) 2. Excuse, pretence; 3. Obstacle, impediment, hindrance; 4. Antidote, means of counteracting magic; |
அழிகடை | aḻi-kaṭai n. <>id.+. The worst; அறக்கெட்டது. Colloq. |
அழிகண்டி | aḻi-kaṇṭi n. <>id.+ prob. kaṇṭaka. Niggard; உலோபி. Loc. |
அழிகாலி | aḻi-kāli n. <>id.+. Spend-thrift, extravagant person; வீண்செலவு செய்வோன். Colloq. |
அழிகிரந்தி | aḻi-kiranti n. <>அழி2-+. Sloughing venereal ulcer; கிரந்தி நோய் வகை. (W.) |