Word |
English & Tamil Meaning |
---|---|
அழிகுட்டி | aḻi-kuṭṭi n. <>அழி1-+. Aborted foetus in animals; விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்துவிழுங் கரு. (W.) |
அழிகுநன் | aḻikunaṉ n. <>id. Defeated person, one who is ruined; தோற்றவன். அழிகுநர் புறக்கொடை (பு.வெ.3, 20, கொளு). |
அழிச்சாட்டம் | aḻi-c-cāṭṭam n. See அழிச்சாட்டியம். அழிச்சாட்டங் கூடுமோ? (குருபரம்.பன்.பக்.343). |
அழிச்சாட்டியக்காரன் | aḻi-c-cāṭṭiya-k-kāraṉ n. <>அழிச்சாட்டியம்+. 1. Unjust person; தீம்புள்ளவன். 2. One who incites false litigation; |
அழிச்சாட்டியம் | aḻi-c-cāṭṭiyam n. <>அழி2-+ šāṭhya. Persisting in evil ways, unworthy conduct; அழிம்பு. வாங்கின கடனைக் கொடாமல் அழிச்சாட்டியம் பண்ணிவருகிறான். |
அழிசெய் - தல் | aḻi-cey- v.tr. <>id.+. To spoil, deflower; கெடுத்தல். கன்னியை யழிசெயக் கருதினோன். (கம்பரா.பள்ளி.109). |
அழிசெலவு | aḻi-celavu n. <>id.+. Expense incurred in improving gardens; தோட்டவிருத்தி முதலியவற்றிற்குச் செல்லுஞ்செலவு. Loc. |
அழிஞ்சில் | aḻicil n. [M. aḻiil.] Sage-leaved alangium, s.tr., Alangium lamarckii; மரவகை. (பதார்த்த.217.) |
அழிஞ்சு | aḻicu n. See அழிஞ்சில் (தைலவ.தைல.72.) |
அழிஞ்சுக்காடு | aḻicu-k-kāṭu n. <>அழிஞ்சு+. Desert covered with aḻicil; பாலைநிலம். பெருவிடாயனானவன் அழிஞ்சுக்கா டேறப்போக (ஈடு, 6, 2, ப்ர). |
அழித்தழித்து | aḻittaḻittu adv. <>அழி2-+அழி3-. Again and again; திரும்பத்திருப்ப. அழித்தழித்து விவாகம் பண்ணுமாபோலேயும் (திவ்.திருநெடுந்.16, வ்யா). |
அழித்து | aḻittu adv. <>id. 1. Again; மீட்டும் .அழித்துப் பிறந்தனனாகி (புறநா.383). 2. Contrarily; |
அழிதகவு | aḻi-takavu n. <>அழி1-+. Grief; துக்கம். அழிதக வுள்ளமொ டரற்றின னாகி (மணி.12, 43). |
அழிதகன் | aḻi-takaṉ n. <>id.+ தகு-. Man of depraved character, wicked person; துன்மார்க்கன். அறத்தைக் காயு மழிதகன் (கந்தபு.தருமகோ.78). |
அழிதலை | aḻi-talai n. <>id.+. 1. Skull; தலையோடு. அழிதலை யங்கையி லேந்தி (தேவ.198, 7). 2. Garland of skulls, worn by siva; |
அழிதூஉ | aḻitūu n. <>id. Hermaphrodite human being; அலி. (நன்.263, மயிலை.) |
அழிந்தவள் | aḻintavaḷ n. <>id. Fallen woman; கற்பழிந்தவள். |
அழிந்தோரைநிறுத்தல் | aḻintōrai-niṟuttal n. <>id.+. Re-establishing ruined men, a characteristic of the Vēḷāḷa; வேளாண்மாந்தரியல்புகளுளொன்று. (திவா.) |
அழிப்படு - த்தல் | aḻi-p-paṭu- v.tr. <>அழி3+. To thresh the grain with cattle; நெற்கதிரைக் கடாவிட்டுழக்குதல். ஆளழிப்படுத்த வாளேருழவ (புறநா.368). |
அழிப்பன் | aḻippaṉ n. <>அழி2-. The destroyer; சங்கரிப்பவன். (திவ்.பெரியாழ்.4, 8, 6.) |
அழிப்பாளன் | aḻippāḷaṉ n. <>id.+. ஆள்-. Goldsmith; தட்டான். (ஈடு, 5, 8, 1.) |
அழிப்பாளி | aḻippāḷi n. <>id.+. Spend-thrift, squanderer; வீண்செலவு செய்வோன். Colloq. |
அழிப்பு | aḻippu n. <>id. 1. Destruction; சங்காரம். கரும மழிப்பளிப்பு (திவ்.இயற்.முதற்.5). 2. Fault; |
அழிபடு - தல் | aḻi-paṭu- v.intr. <>அழி1-+. 1. To be erased; சிதைதல். 2. To be spent; |
அழிபயல் | aḻi-payal n. <>id.+. Good-for-nothing fellow; துன்மார்க்கப் பையன். Loc. |
அழிபாடு | aḻi-pāṭu n. <>id.+. Destruction; அழிவு. அழிபா டிலாத கடலின் (தேவா.212. 8). |
அழிபு | aḻipu n. <>id. 1. Destruction; நாசம். ஒன்னார்நா டழிபிரங்கின்று (பு.வெ.3, 8, கொளு). 2. Defeat; |
அழிபுண் | aḻi-puṇ n. <>id.+. Sloughing ulcer; அழகு விரணம். (இங்.வை.302.) |
அழிபெயல் | aḻi-peyal n. <>அழி2-+. Heavy rain; மிக்க மழை. அழிபெயல்காலை (பரிபா.10. 1.) |
அழிம்பன் | aḻimpaṉ n. <>அழிம்பு. One who does evil; தீம்புசெய்பவன். |
அழிம்பு | aḻimpu n. <>அழி2-. Evil deed, gross neglect; தீம்பு. |
அழிமதி | aḻimati n. <>அழி1-+. Folly leading to ruin; கெடுமதி. |
அழிமானம் | aḻi-māṉam n. <>id.+. That which is wasted, spent; அழிந்தது. |
அழிமுதல் | aḻi-mutal n. <>id.+. Waste of property, of capital; மூலதனக் கேடு. Colloq. |
அழியமாறு - தல் | aḻiya-māṟu- v.tr. <>id.+. To so change as to obliterate one's identification; தன் நிலையை யழித்து வேறாதல். தன்னையழிய மாறியும் உதவினவனுடைய (ஈடு, 4, 2, 6). |