Word |
English & Tamil Meaning |
---|---|
சேரிடு - தல் | cēr-iṭu-, v. intr. <>சேர்1- +. To tie or fasten together, bind up; பிணைத்தல். (சங்.அக.) |
சேரிடையாக | cēr-iṭai-y-āka, adv. id. + இடை + ஆ-. Continuously, without break; இடையீடின்றித் தொடர்ச்சியாக. அவனுக்கு நான்கு கோட்டை நிலம் சேரிடையாக இருக்கிறது. Nā. |
சேரிப்பரத்தை | cēri-p-parattai, n. <>சேரி +. (Akap.) Prostitute, courtesan, living in the quarters set apart for her class ; ஊர்ப்புறச் சேரியில் வாழும் பரத்தை. (தொல்.பொ.151, உரை.) |
சேரிமடை | cēri-maṭai, n. prob. id. +. Sluice carrying off surplus water; கழிவுவாய்க்கால். (R. T.) |
சேருகம் | cērukam. n. prob. šārikā. Common myna; நாகணவாய்ப்புள். (சது.) |
சேரும்பாடும் | cērum-pāṭum, n. <>சேர்1- + படு-. Promiscuously, in confusion, topsyturvy; கூட்டாக் குழப்பமாய். (J.) |
சேருவைகாரன் | cēruvai-kāraṉ, n. See சேர்வைகாரன். தேடுங்கன சேருவைகாரர் (விறலிவிடு.1001). |
சேரை 1 | cērai, n. <>சாரை. [K.Tu. kēre, M. cēra.] Rat snake. See சாரைப்பாம்பு. சேரையென்று புலம்புவ தேரையே (கம்பரா.ஆறுசெல்.43). |
சேரை 2 | cērai, n. [T. cēra, K. sēre.] See சேரங்கை. உப்பு . . . ஒரு சேரை போடு (பாலவா.874). |
சேல் | cēl, n. perh. செல்-. Carnatic carp; கெண்டைமீன்வகை. (சூடா.) சேலனைய சில்லரிய (சீவக.167). |
சேலகம் | cēlakam, n. of. kašēruka. Tuber of sedge; கோரைக்கிழங்கு. (மலை.) |
சேலம் 1 | cēlam, n. <>cēla. Cloth; ஆடை. அவள் சேலந்திருத்தி (பெருங்.வத்தவ.12, 97). |
சேலம் 2 | cēlam, n. prob. சேரலன்1. Salem town; ஓர் ஊர். சேலங்கைக் கொண்டு (ஒருதுறைக்.2). |
சேலவன் | cēl-avaṉ, n. <>சேல் +. Viṣṇu, as fish-avatar; [மீனாக அவதரித்தவன்] திருமால். (அக.நி.) |
சேலா | cēlā, n. Fragrant cherry. See நெடுநாரை. . |
சேலியால் | cēliyāl, n. Cuscuss. See இலாமிச்சை. (மலை.) . |
சேலேகம் | cēlēkam, n. perh. šailēya. 1. [M. cēlēkam.] Vermilion; சிந்தூதம். (சூடா.) 2. Sandalwood tree. See சந்தனம். (மலை.) |
சேலை 1 | cēlai, n. <>cēlā. 1. Cloth ; ஆடை. (பிங்.) 2. Saree; 3. Half a piece of cloth, measuring 36 to 40 cubits; 4. Parchment bark cutch, m. cl., Acacia suma; |
சேலை 2 | cēlai n. <>செயலை. Mast tree. See அசோகு. (மலை.) . |
சேலைக்கலிச்சி | cēlai-k-kal-icci, n. Jointed ovate-leaved fig. See இச்சி. (L.) . |
சேலைபோடு - தல் | cēlai-pōṭu-. v. intr. <>சேலை1 +. T offer a new cloth to a widow in mourning; கைப்பெண்ணானவட்குக் கோடிபோடுதல். Nā. |
சேலையுஞ்சை | cēlaiyucai, n. Fragrant sirissa. See கருவாகை. (L.) . |
சேலைவாகை | cēlaivākai, n. [K. cēlabāge.] Silken rose tree, l.tr., Albizzia julibrissin; வாகைவகை. |
சேலோதம் | cēlōtam, n. perh. šaila-ja. Sandalwood tree. See சந்தனம். (மூ.அ.) . |
சேவகம் 1 | cēvakam, n. proh. சே2- + அகம். 1. Elephant's stall யானைக்கூடம். சேவக மமைந் சிறுகட்கரி (கம்பரா. தைலவ. 12). 2. Sleep; 3. A common bulb on sandy shores. See பேயுள்ளி. (மலை.) |
சேவகம் 2 | cēvakam, n. <>sēvaka. 1. Service, as of soldier, peon; ஊழியம். சிலதியராகிச் சூழ்ந்து சேவகஞ் செய்ய (திருவிளை. அட்டமா. 7). 2. Valour, bravery; |
சேவகமெழுது - தல் | cēvakam-eḻutu-, v. intr. <>சேவகம்2 +. To enlist or enrol soldiers; படையில் அமர்த்துதல். (W.) |
சேவகமோடி | cēvaka-mōṭi, n. <>id. + மோடி. (w.) 1. Accoutrements of a soldier ; போர்வீரனுக்குரிய கருவிகள். 2. Bravery of a soldier; 3. Manner or style of a soldier; |
சேவகன் 1 | cēvakaṉ, n. <>sēvaka. 1. Soldier, warrior; veteran; வீரன். சேவகனாகித் திண்சிலை யேந்தி (திருவாச. 2, 81). 2. [M. cēvakan, Tu. sēvake.] Servant, peon, attendant; |
சேவகன் 2 | cēvakaṉ, n. prob. செம-¢மை+அகம். See சேவகன்பூடு. (மலை.) . |