Word |
English & Tamil Meaning |
---|---|
சைத்திரகம் | caittirakam, n. <>caitraka. See சைத்திரம். (W.) . |
சைத்திரம் | caittiram, n. <>caitra. (சங். அக.) 1. First lunar month extending from the day following the new moon in Paṅkuṉi to the new moon day in Cittirai; பங்குனி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் சித்திரை அமாவாசை முடிவு வரையுள்ள சாந்திரமான மாதம். 2. Artistic work; |
சைத்திரரதம் | caittira-ratam, n. <>caitraratha. Garden of Kubēra; குபேரனது நந்தவனம். |
சைத்திரவிரதம் | caittira-v-iratam, n. See சைத்திரரதம். பானுவுஞ் செல்கலாச் சைத்திர விரதம் (இராகு. நகர.9). |
சைத்திராவலி | caittirāvali, n. perh. caitra + āvali. Full moon in the month of Cittirai; சித்திராபூரணை. (யாழ்.அக) |
சைத்திரி | caittiri, n. <>caitrī. Sacrifice offered on the full moon day in Cittirai; சித்திரா பூரணையில் நடத்தப்பெறும் யாகம். (திவா.) |
சைத்திரியஞானம் | caittiriya-āam, n. <>kṣaitraja +. Spiritual knowledge, the knowledge of nature of the god or the soul; கடவுள் உயிர்களைப் பற்றிய அறிவு. (சங்.அக.) |
சைத்திரியம் | caittiriyam, n.<> sthairya. Steadfastness, stability, courage; மனோதிடம். (W.) |
சைத்திரோற்சவம் | caittirōṟcavam, n. <>caitra + utsava. Temple festival celebrated in Cittirai; சித்திரையில் நிகழும் கோயிற்றிருவிழா. |
சைதனம் | caitaiṉam, n. <>cētana. Individual soul; சீவான்மா. நுண்ணிய பிறப்பிறப்பினுடங்கு சைதனங்கட் கெல்லாம். (த.நி.போ.157). |
சைதனியம் | caitaṉiyam, n. <>caitanya. 1. Intelligence; அறிவு. சுத்தான்ம சைதனியமே தனக்குச் சொரூபமாகக்கொண்டு (சி. போ. 8, 2). 2. Individual soull; jīva; 3. Universal soul; |
சைதனியவான் | caitaṉiyavāṉ, n. <>caitanya-vān nom. sing. of caitanya-vat. Sentient being; அறிவுள்ளவன். ஆன்மாச் சைதனியவாணினென்றால் (மநி.29, 176). |
சைதூண் | caitūṇ, n. <>U. zaitūn. European olive. See ஓலிவு. . |
சைந்தவம் | caintavam, n. <>saindhava. 1. See சயிந்தவம்1. (சூடா.) . 2. Sind; |
சைந்தவி | caintavi, n. <>saindhavi. (Mus.) A specific melody-type. See சயிந்தவி. (சங்.அக.) . |
சைந்தியலவணம் | caintiya-lavaṇam, n. <>saindhava +. Rock-salt; இந்துப்பு. |
சைமானம் | caimāṉam, n. <>sam-māna. Present, reward; சம்மானம். (R.) |
சைமினி 1 | caimiṉi, n. <>samyaminī. See சையமினி. சைமினி நகரோன் (பிங்.197). |
சைமினி 2 | caimiṉi, n. <>Jaimini. A sage-philosopher, the author of Pūrva-Mīmāmsā-Sūtra; பூருவமீமாஞ்சையின் ஆசிரியரான ஒரு முனிவர். அக்கபாதன் கணாதன் சைமினி. (மணி.27. 82). |
சைமினிசூத்திரம் | caimiṉi-cūttiram, n. <>id. +. Aphoristic treatise on the Pūrva-Mīmāmsā by Jaimini; சைமினியாற் சூத்திரரூபமாயியற்றப்பெற்ற பூருவமீமாஞ்சை நூல். சாற்றியவச் சைமினி சூத்திரத்திற்கு (வேதா.சூ.சிறப்பு.4) . |
சையகம் | caiyakam, n. <>šayyā. Bed; படுக்கை. (அக.நி.) |
சையத்திரு - த்தல் | caiyattiru-, v. intr. prob. id. +. To be in prosperous circumstances; நன்னிலையிலிருத்தல். (W.) |
சையம் 1 | caiyam, n. <>Sahya. 1. A mountain. See சகியம்2. புரைகெழு சையம் பொழிமழை (பரிபா. 11, 14). 2. Hill, mountain; 3. Stone, rock; |
சையம் 2 | caiyam, n. <>sam-yama. Self-control; நியமம். சையமே லேற்றினான். (மேருமந்.544). |
சையமினி | caiyāmuṉimī, n. <>samyaminī. City of Yama; யமனது நகரம். சையமினி யீது கொல் (காசிக.சிவசன்.இயம.18). |
சையானம் | caiyāṉam, n. See சையகம். (அக.நி.) . |
சையுத்தசமவாயம் | caiyutta-camavāyam, n. <>sam-yukta + samavāya. (Log.) The relation of inherence in that which is in conjunction, as of the sense of sight with the colour of an object in perception, one of six Caṉṉikariṭam, q.v. ; காட்சியில் ஏற்படும் அறுவகைச் சன்னிகரிடத்துள் இந்திரியத்திற்கும் ஒரு பொருளின் குணம் முதலியவற்றிற்குமுள்ள சம்பந்தம். (தருக்கசங்.31). |