Word |
English & Tamil Meaning |
---|---|
சொண்டுக்காரன் | coṇṭu-k-kāṟaṉ, n. <>id. +. Blubber-lipped person; தடித்த உதடன். (W.) |
சொண்டுகூட்டு - தல் | coṇṭu-kūṭṭu-, n. <>id. +. To protrude the lips as a child when beginning to talk; பேசுதற்குக் குழந்தைகள் இதழ் கூட்டுதல். (W.) |
சொண்டுச்சாடை | coṇṭu-c-cāṭai, n. <>சொண்டு3 +. Telling a person what another has said to his discredit, a kind of tale-bearing; ஒருவனைபபிறன் இழித்துக் கூறியதாக அவனிடமே கூறும் புறங்கூற்று. (W.) |
சொண்டுசொல் | coṇṭu-col, n. <>id. +. Caustic remarks; துன்புறுத்தும் மொழி. Loc. |
சொண்டுத்தீன் | coṇṭu-t-tīṉ, n. <>சொண்டு2 +. Delicious food taken frequently; அடிக்கடி கொள்ளுஞ் சுவையுணவு. (W.) |
சொண்டுப்பானை | coṇṭu-p-pāṉai, n. <>id. +. Thick-brimmed pot; கனத்த விளிம்புடைய பானை. (W.) |
சொண்டுபண்ணு - தல் | coṇṭu-paṇṇu-, v. tr. <>சொண்டு3 +. To scorn, treat with contempt; இகழ்ச்சிபண்ணுதல். (யாழ்.அக.) |
சொண்டுபேசு - தல் | coṇṭu-pēcu-, v. tr. <>id. +. To abuse; நிந்தித்தல். (J.) |
சொண்டுவில் - தல் [சொண்டுவிற்றல்] | coṇṭu-vil-, v. intr. <>id. +. To backbite; புறங்கூறுதல். (W.) |
சொணை | coṇai, n. See சுணை. . |
சொணைப்பு | coṇaippu, n. See சுணை. . |
சொத்தட்டை | cottaṭṭai, n. prob. சொத்தை+ கட்டை. Rotten piece of wood; உளுத்த மரக்கட்டை. Nā. |
சொத்தம் | cottam, n. <>sva-stha. 1.Convalesoence, health; சுகம். (சங். அக.) 2. Life of ease and comfort. See சுகவாசசீவனம். |
சொத்தல் | cottal, n. See சொத்தை1, 1, 4. . |
சொத்தலி | cottali, n. <>சொத்தல். Stoneless palmyra fruit; கொட்டையில்லாப் பனங்காய். (J.) |
சொத்தி | cotti, n. <>சொத்தை. [K. sotta.] 1. Lameness, crippledom, deformity ; அங்கவீனம். 2. Lame person; 3. Fault, negligence; |
சொத்தியன் | cottiyaṉ, n. <>id. Lame person, cripple; நொண்டி. (W.) |
சொத்திலை | cottilai, n. Lac tree. See பூமரம். Kāṭar. . |
சொத்திவாசகம் | cotti-vācakam, n. <>svasti-vācaka. See சுவஸ்திவாசனம். சொத்திவாசகம் படர்ந்து விம்ம (விநாயகபு.15, 117). |
சொத்திவாசனம் | cotti-vācaṉam, n. See சுவஸ்திவாசனம். . |
சொத்து 1 | cottu, n. <>svam neut. nom. sing. of sva. [T.K. sottu.] 1. Property, possessions, being of two kinds, viz., tāvaram and caṅkamam; தாவர சங்கமங்களாகிய உடைமை. 2. Gold; |
சொத்து 2 | cottu, n. <>சொத்தை. See சொத்தை1, 2. உலக்கைப்பட்டு வலக்கை சொத்தானவும் (கலிங்.133). |
சொத்து 3 | cottu, T. tjottu. [K. sottu.] Blood-like red paste; உடலிற்பூசும் இரத்தம் போன்ற செம்பசை. சொத்துப் பூசிக்கொண்டன். (W.) |
சொத்துக்காரன் | cottu-k-kāraṉ, n. <>சொத்து1+. colloq. 1. Owner; பொருளுக்கு உரியவன். 2. Rich man; |
சொத்துப்பூசு - தல் | cottu-p-pūcu-, v. intr. <>சொத்து3 +. To daub one's body with blood-like red paste with a view to excite compassion; பிறர் இரங்கிக் கொடுக்கும்படி உடலிற் செஞ்சாந்து பூசிக் கொள்ளுதல். (W.) |
சொத்துப்பொத்தெனல் | cottu-p-pot-teṉal, n. Onom. expr. signifying the repeated sound, as of coconuts falling on the ground one after another; தேங்காய் முதலியன ஒன்றின்பின் ஒன்றாய் விழுதல் முதலியவற்றால் உண்டாகும் அடுக்கொலிக்குறிப்பு. (W.) |
சொத்துவம் | cottuvam, n. <>sva-tva. 1. Right, proprietorship, title, claim பொருளுரிமை. (சங்.அக.) 2. Self-existence. independent condition; |
சொத்துவை - த்தல் | cottu-vai-, v. intr. <>சொத்து1 +. To collect; தொகுத்துவைத்தல். நெடுங்கயிறெல்லா மிசைசொத்து வைத்தும் (அஷ்டப். திருவரங். மா. 52). 2. To leave properties to heirs; |
சொத்தெனல் | cotteṉal, n. See சொத்துப்பொத்தெனல். . |
சொத்தை 1 | cottai, n. <>கொத்தை. [T. sotta, K.M.Tu. cotta.] 1. That which is decayed, worm-eaten, injured by insects; புழுவண்டு முதலியன அரித்தது. 2. Defect, as in limbs, teeth, fruits, etc.; 3. Being ruined in circumstances or character; 4. Emaciated person or animal; 5. See சொத்தைக்களா. (W.) |