Word |
English & Tamil Meaning |
---|---|
சொத்தை 2 | cottai, n. prob. šrōtra. Cheek; கன்னம். (J.) |
சொத்தைக்களா | cottai-k-kaḷā, n. perh. சொத்தை1+. 1. Bushy roundish-leaved sweet thorn, m.sh. Flacourtia sepiaria ; செடிவகை. 2. Ceylon plum, s. tr., Flaourtia ramontchisapida; 3. Lovilovi of Ceylon, s. tr., Flacourtia inermis; |
சொத்தைப்பல் | cottai-p-pal, n. <>id. +. Carious tooth; கெட்டுப்போன பல். Colloq. |
சொத்தையிற்போடு - தல் | cottaiyiṟ-pōtu-, v. intr. <>சொத்தை2 +. To give one slap on the cheek; கன்னத்திலடித்தல். (J.) |
சொதசொதெனல் | cota-coteṉal, n. Expr. signifying the state of being mashy, as overboiled rice, or of being soaked, as with oil or other fluid; கசிதங்குறிப்பு. |
சொதி | coti, n. Vegetable soup prepared from coconut; தேங்காய்ப்பா லவியல். (J.) |
சொதை 1 | cotai, n. See சொத்து1. (யாழ்.அக.) . |
சொதை 2 | cotai, n. cf. சதை6. A pair. See ஜதை. Loc. . |
சொதைகாரன் | cotai-kāraṉ, n. <>சொதை1 +. See சொத்துக்காரன். . |
சொந்தக்கம்பத்தம் | conta-k-kampattam, n. <>சொந்தம்+. Cultivation carried on by one's own plough and cattle; பண்ணைவைத்துச் செய்யும் விவசாயம். |
சொந்தக்காரன் | conta-k-kāraṉ, n. <>id. +. 1. Owner; உரியவன். 2. Close relation; |
சொந்தம் | contam, n. of. svatantra. [T. sontamu, K. sonta.] 1. One's own peculiar right, exclusive property, that which belongs to oneself ; தனக்குரியது. சொந்தமா யாண்ட நீ. (தாயு.சுகவாரி.11). 2. Near relationship; |
சொப்பட | coppata, adv. perh. செப்பம்+படு-. [T. tcoppadu.] Well, neatly, fully; நன்றாக. சொப்பட நீராட வேண்டும் (திவ்.பெரியாழ்.2, 4, 5). |
சொப்பம் | coppam, n. perh. svalpa. [K. soppu.] Dullness, lack of brilliancy; ஒளியின்மை. ஹீனரோட்டை ஸம்ஸர்க்கத்திலிறே . . . சொப்பமும் பிறப்பது (திவ்.திருநெடுந்.21. வயா.பக்.175). |
சொப்பனகற்பிதன் | coppaṉa-kaṟpitaṉ, n. <>சொப்பனம்+. Soul in dream-state; சொப்பனாவத்தையிலுள்ள தைசதன் ஆகிய ஆன்மா. சொப்பன கற்பிதனே (வேதா.சூ.38). |
சொப்பனத்தானம் | coppaṉa-t-tāṉam, n. <>id.+. Neck, as the seat of the soul in the dream-state; சொப்பனாவத்தையில் ஆன்மாவின் இருப்பிடமாயுள்ள கழுத்து. சொப்பனத்தானம் எனப்படுங் கண்டத்தின் (சி.போ.சிற்.4, 3, பக்.99). |
சொப்பனம் | coppaṉam, n. <>svapna. 1. Dream; கனா. ஏட்டுக்கடங்காச் சொப்பனம்போல் (தாயு. சொல்லற்.10). 2. See சொப்பனாவத்தை. (சி. போ. பா. 277, புதுப்.) 3. Illusion, transience; |
சொப்பனஸ்கலிதம் | coppaṉa-skalitam, n. <> id. + skhalita. Spermatorrhea during dream; கனவில் நேரும் இந்திரிய வெளிப்பாடு. |
சொப்பனாவத்தை | coppaṉāvattai, n. <>id. + avasthā. (Phil.) Dream-state in which the soul is in the neck, the mind is working and sense organs are at rest; ஆன்மா கண்டத்தில் நிற்க, மனம் வேலைசெய்து கொண்டும், இந்திரியங்கள் பத்தும் தொழிலின்றியும் உள்ள நிலை. (சி.சி.4, 33, நிரம்ப.) |
சொப்பனேந்திரியம் | coppaṉēntiriyam, n. <>id. + indriya. See சொப்பனஸ்கலிதம். . |
சொப்பிரகாசம் | coppirakācam, n. <>svaprakāša. Self-luminosity, self-radiance; சுயம்பிரகாசம். சொப்பிரகாசமாய் விளங்குஞ் சந்திரனிடத்தில் (வேதா.சூ.56, உரை.) |
சொப்பு | coppu, n. Corr. of See செப்பு3. . |
சொம் | com. n. <>svam neut. nom. sing. of sva. Property, wealth, one's own goods; சொத்து. சொம் மனைவைத் தெப்படி நடப்பீர் (குமர.பிர.காசிக்.34). |
சொம்படக்கா | compaṭakkā, n. Sting-ray, dull brown, with disc as broad asl long, Trygon zugei ; நீளமும் அகலமும் ஓரளவினதான கடல்மீன் வகை. |
சொம்பாதி 1 | com-pāti, n. <>செம்பாதி. Exact half; சரிபாதி. சொம்பாதியானான் சுமக்க வெருதானான் (தனிப்ப.i, 62, 123). |
சொம்பாதி 2 | com-pāti, n. <>சொம்+. Owner's share of produce; மேல்வாரம். Loc. |
சொம்பு 1 | compu, n. of. U. cambū. [K.Tu. combu.] Corr. of See செம்பு. . |