Word |
English & Tamil Meaning |
---|---|
சொரிமிப்பு | corimippu, n. <>சொரிமி-. Agreement, cordial relationship; இணக்கம். Nā. |
சொரிவாய் | cori-vāy, n. <>சொரி1-+. Aperture or opening of a receptacle through which paddy can be taken out; குதிரிலிருந்து நெல் சொரிந்துவிழுந் துவாரம். Nā. |
சொருக்கு | corukku, n. <>சொருகு-. See சொருகுகொண்டை. . |
சொருகம்புல் | corukam-pul, n. perh. id.+. A kind of grass; புல்வகை. (சங். அக.) |
சொருகல் | corukal, n. <>id. Sticking in the bowels, as of indigestible food, especially of children; பெரும்பாலுங் குழந்தைகளிடங்காணும் குடற்சிக்கு. |
சொருகு - தல் | coruku-, 5 v. intr. 1. To be entangled, become connected inadvertently; சிக்கிக்கொள்ளுதல். 2. To gripe in the bowels; 3. To disappear, as the pupil of the eye in fainting, etc.; 4. To repose; 1. [K. serku, M. cocrukuka]. To put in, insert, tuck in; 2. To turn the pupil of the eye till it disappears, as in sleep, giddiness; |
சொருகுகதவு | coruku-katavu, n. <>சொருகு-+. Sliding door; சொருகிழுடுங் கதவு. |
சொருகுகொண்டை | coruku-koṇṭai, n. <>id.+. Woman's hair twisted round and tucked in, as in dressing; பெண் மயிர்முடிவகை. |
சொருகுதலைப்பு | coruku-talaippu, n. <>id.+. The end of saree tucked in; சீலையின் உள்ளிடமான தலைப்பு. (W.) |
சொருகுபலகை | coruku-palakai, n. <>id.+. The drawer of a table or box; மேசையின் இழுத்துக்கொள்ளுதற்குரிய அறை. Colloq. |
சொருகுபிடிகத்தி | coruku-piṭi-katti, n. <>id.+. Sword or knife with handle kept in sheath; உறையுள் இட்ட பிடியுள்ள கத்தி. Loc. |
சொருகுமணல் | coruku-maṇal, n. <>id.+. See சொரிமணல். Madr. . |
சொருகுமாந்தம் | coruku-māntam, n. <>id.+. Convulsions affecting children, in which the eyes are turned up under the lids; கண்களை ஒரு பக்கமாகச் சொருகுமாறு செய்யும் குழந்தை நோய்வகை. (சங். அக.) |
சொருகோடு | corukōṭu, n. <>id.+ஒடு. Thick flat insertible tiles; சொருகியடுக்குந் தட்டையோடு. (C. E. M.) |
சொருணை | coruṇai, n. See சுரணை. (J.) . |
சொருவம் | coruvam, n. See சொரூபம், 4. . |
சொருவு | coruvu, n. <>சொருகு-. Sheath; உறை. Loc. |
சொரூபம் 1 | corūpam, n. <>sva-rūpa. 1. Real nature, natural state or condition; இயற்கைத்தன்மை. ஆன்மாவி னிசசொரூப மிதவென வுணர் தல் (தேவா. சூ. 29). 2. Exact likeness, resemblance; 3. Form, shape; 4. Image, idol; 5. (Saiva.) The Supreme Being, as the One, the Indivisible, the Attributeless, etc.; opp. to taṭdtattam; 6. (Advaita.) See சொரூபலட்சணம். மாகனலி விளங்குகதிர் சொரூபனெனல்போலான்மாவி னிசசொரூப மிதுவெனவுணர்தல் சொரூபம் (வேதா. சூ. 29). |
சொரூபம் 2 | corūpam, n. <>su-rūpa. Beauty; அழகு. (W.) |
சொரூபலட்சணம் | corūpa-laṭcanam, n. <>svarūpa-lakṣaṇa. 1. (Advaita.) the real nature of God as the Ever-existing, Ever-knowing and Ever-blissful; பரப்பிரமத்தின் சச்சிதானந்தரூபமான உண்மை யியல்பு. (வேதா. சூ. 29, உரை.) 2. Special, distinguishing attributes; |
சொரூபானந்தம் | corūpāṉantam, n. <>svarūpānanda. 1. Perfect bliss; பூரணவின்பம். (சங். அக.) 2. A treatise on Vēdānta in Tamil; |
சொரூபானந்தர் | corūpāṉantar, n. <>id. An ascetic, author of many treatises in Advaita Vēdānta in Tamil; தமிழில் அத்துவிதநூல்கள் பல இயற்றிய ஒரு பெரியார். (பெருந்திரட்டு.) |
சொரூபானுபூதி | corūpāṉupūti, n. <>svarūpa+anu+bhūti. State of communion with god; பதியுடன் உயிர் ஐக்கியமுற்று நிற்கும் நிலை. சொரூபானுபூதி காட்டி (தாய. சின்மயா. 1). |