Word |
English & Tamil Meaning |
---|---|
சொல்லாட்டி | col-l-āṭṭi, n. <>id.+. Woman of clever or skilful speech; திறமையாய்ப் பேசுபவள். சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்ற கிற்பார் யார் (கலித். 108). |
சொல்லாட்டு | col-l-āṭṭu, n. <>id.+ஆடு-. Conversation, speech; பேச்சு. சொல்லாட்டிடை யுஞ் செல்ல றீர்தலின் (பெருங். வத்தவ. 6, 25). |
சொல்லாடு - தல் | col-l-āṭu-, v. intr. <>id.+. To speak, talk; பேசுதல். சொல்லாடச் சோர்வு படும் (குறள், 405). |
சொல்லாதசொல் | collāta-col, n. <>id.+ ஆ neg.+.(யாழ். அக.) 1. Improper word; தகாதசொல் 2. Obscene or indecent language; 3. Abusive language; |
சொல்லாமற்சொல்(லு) - தல் | collāmaṟ-col-, v. tr. <>id.+. To communicate one's thoughts indirectly or by sly remark or gestures; தன்கருத்தைக் குறிப்பாற் கூறுதல். சொல்லாமற் சொன்னவரை (திருவிளை. பாயி. 13). |
சொல்லாழம் | col-l-āḷam, n. <>id.+. Deep significance of a word; சொல்லின் பொருளாழம். |
சொல்லாளி | col-l-āḷi, n. <>id.+. 1. One faithful to his word; வாக்குறுதியுள்ளவன்(W.) 2. Eloquent person; 3. A person of influence; |
சொல்லானந்தம் | col-l-āṉantam, n. <>id.+. Inauspicious use of a word of evil import in conjuction with the name of the hero of a poem; ரபந்தத் தலைவனது இயற்பெயரையடுத்துக் கேடுபயக்கும் அமங்கலச்சொல்லைப் புணர்த்துப் பாடுவது. (யாப். வி. 96, பக். 519.) |
சொல்லிக்காட்டு - தல் | colli-k-kāṭṭu-, v. tr. <>id.+. 1. [M. collikkāṭṭu.] To repeat a lesson; பாடம் ஒப்பித்தல். 2. To describe, explain, define; 3. To remind one of one's faults; to call to mind one's misdeeds or defects; |
சொல்லிக்கொடு - த்தல் | colli-k-koṭu-, v. <>id.+. tr. [M. collikkoṭu.] 1. To teach, explain; படிப்பித்தல். 2. To infrom, make known; 3. To advise; 4. To instigate; |
சொல்லிக்கொள்(ளு) - தல் | colli-k-koḷ-, v. <>id.+. intr. 1. To take leave; விடைபெறுதல். 2. To recommednd; to speak on one's behalf; 3. To complain, make known; 4. To speak to oneself; 5. To learn from a teacher; |
சொல்லிப்போடு - தல் | colli-p-pōṭu-, v. <>id.+. tr. 1. To give out, publish, as a secret; வெளியிடுதல. 2. To betray; 3. To send through a person, as a message; 4. to send for; |
சொல்லியனுப்பு - தல் | colli-y-aṉuppu-, v. <>id.+. tr. 1. To send through a person, as a message; ஆள்மூலஞ் செய்தியனுப்புதல்.-intr. 2. To send for; |
சொல்லிலக்கணம் | col-l-ilakkaṇam, n. <>id.+. (Gram.) Etymology; சொல்லின் தன்மை பாகுபாடு முதலியவற்றைக் கூறும நூல். |
சொல்லிவிடு - தல் | colli-viṭu-, v. tr. & intr. <>id.+. See சொல்லிப்போடு-. . |
சொல்லிவை - த்தல் | colli-vai-, v. tr. <>id.+. Colloq. 1. To inform beforehand; to forewarn; முன்னறிவித்தல். 2. To teach; |
சொல்லிழுக்கு | col-l-iḻukku, n. <>id.+. Incorrectness in speech; சொற்குற்றம். சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு (குறள், 127). |
சொல்லிற - த்தல் | col-l-iṟa-, v. intr. <>id.+. To transcend description; வாக்கினைக் கடந்து நிற்றல். சொல்லிறந் தார்வநெஞ்சந் தலைத்தலை சிறப்ப (அகநா. 396). |
சொல்லின்பம் | col-l-iṉpam, n. <>id.+. Euphony; சொற்சுவை. (W.) |
சொல்லின்முடிவினப்பொருண்முடித்தல் | colliṉ-muṭiviṉ-apporuṇ-muṭittal, n.<>id. +. (Gram.) To remove, alleviate, put away ; உத்தி முப்பத்திரண்டனுள் சொல் முடிந்தவிடத்து மற்றப் பொருள்களையும் முடியவைக்கும் உத்தி. (நன்.14) . |
சொல்லுதவி | col-l-utavi, n.<>id. +. Word of recommendation or encouragement, dist. fr. poruḷ-utavi ; வாக்குச்சகாயம். |