Word |
English & Tamil Meaning |
---|---|
சொளுசொளு - த்தல் | coḷu-coḷu-, 11 v. intr. (J.) 1. To become muddy, slippery, as the ground by rain; சேறாதல். 2. To be sodden, as overboiled rice; |
சொளையம் | coḷaiyam, n. perh. சூழ்வளையம்.. 1. Stealing, pilfering. See களையம். என்ன சொளையம்போடத் தொடங்கிவிட்டாய்? Loc. 2. Zero ; |
சொளையமாடு - தல் | coḷaiyam-āṭu-, n.<>சொளையம் +. 1. To steal. See சுளையமாடு-. 2. To pry about a house with the intention of stealing; |
சொளையமாறு - தல் | coḷaiya-māṟu-, n.<>id. +. See சொளையமாடு.1 . . |
சொற்கட்டான் | coṟ-kaṭṭāṉ, n. Blackgammon. See சொக்கட்டான் . |
சொற்கட்டு | coṟ-kaṭṭu, n.<>சொல் +. [T. sōlkaṭlu.] 1. Imitative sounds uttered in drumming, etc. ; தாளக்கட்டுரை. 2. Influence ; |
சொற்கப்பனை | coṟka-p-paṉai, n. See சொர்க்கப்பனை. (யாழ்.அக.) . |
சொற்கம் 1 | coṟkam, n. See சொர்க்கம், சொற்கமீயுந் துயரந் துடைத்திடும் (சேதுபு.அசுவ.76). |
சொற்கம் 2 | coṟkam, n. See சொர்க்கம், சொற்க மிப்பாற்படுத்தி. (ஒருதுறைக்) . |
சொற்கா - த்தல் | coṟ-kā-, v. intr. <>சொல் +. 1. To keep one's word; வாக்கை நிறைவேற்றுதல். 2. To speak with due caution; 3. To guard one's reputation; |
சொற்காரி | coṟ-kāri, n. One of seven kinds of clouds ; எழுவகை முகில்களுள் ஒன்று. (சூடா.) |
சொற்குற்றம் | coṟ-kuṟṟam, n.<>சொல் +. 1. (Gram.) Etymological error; சொல்லிலக் கணத்திற்கு மாறான குற்றம். 2. Imporpriety, ofensiveness, in words; |
சொற்குற்றம்வாய்க்குற்றம் | coṟ-kuṟṟam-vāy-k-kuṟṟam, n.<>id. +. Trivial mistakes in words ; சிறு சொற்பிழைகள் . |
சொற்குறி | coṟ-kuṟi, n. A prepared arsenic ; சூதபாஷாணம். (மூ.அ) . |
சொற்கேள் - தல்[சொற்கேட்டல்] | coṟ-kēḷ-, v. intr. <>சொல் +. 1.To be obedient; to listen to, pay regard; ஏவற்படி நடத்தல். சொற்கேளாப் பிள்ளையினாற் குலத்துக்கீனம். 2. To put up with abuse or abusive words; 3. To get abusive words; |
சொற்கோ | coṟ-kō, n.<>id. +. Tirunāvukkaracunāya ār ; See இத்ருநாவுக்கரச்நாயனார். சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும் (சிவானந்தமாலை) . |
சொற்சாதுரியம் | coṟ-cāturiyam, n.<>id. +. 1. Eloquence; நாவன்மை. 2. Ingenuity or artfulness in the use of words, verbal subtlety; |
சொற்சித்திரம் | coṟ-cittiram, n.<>id. +. Picturesqueness ; வாக்குச் சாதுரியம். |
சொற்சிதைவு | coṟ-citaivu, n.<>id. +. Corrupt form of a word ; சொல்லின் மாறுபட்ட உருவம் . |
சொற்சிமிட்டு | coṟ-cimiṭṭu, n.<>id. + சிமிழ்-. (J.) 1. Use of a little word or particle easily overlooked yet materially affecting the meaning; பொடிவைத்துப் பேசுகை. 2. See சொற்சாதுரியம், 2. |
சொற்சீரடி | coṟ-cīr-aṭi, n.<>id. +. One of the component elements of kali verse ; அம்போதரங்கம். (காரிகை, 420, உரை.) |
சொற்சுவை | coṟ-cuvai, n.<>id. +. Verbal sweetness ; சொல்லினிமை. சொற்சுவையும் பொருட்சுவையும் (குறள், 420, உரை). |
சொற்செலவு | coṟ-celavu, n.<>id. +. 1. Influence; fame ; செல்வாக்கு. நிலத்துக் குரிமை, சொற்செலவு, கல்கி . . . எனப்பட்ட (ஆசாரக். 3, உரை). 2. Recommendation ; |
சொற்செறிவு | coṟ-ceṟivu, n. <>id. +. Wealth of words ; சொல்வளம். சொற்செறிவும் இசைச்செறிவு முடைத்தாதலானும் (சிலப்.3, 67, உரை) . |
சொற்சோதனை | coṟ-cōtaṉai, n.<>id. +. Critical examination of words ; சொல்லாராய்ச்சி. பேராசிரியர் சொற்சோதனை காட்டிய (பி.வி.14) . |
சொற்சோர் | coṟ-cōr, n.<>id. +. See சொற்சோர்வு. (யாழ்.அக.) . |
சொற்சோர்வு | coṟ-cōrvu, n.<>id. +. 1. Faltering in speech ; பேச்சில் தடுமாறுகை. 2. See சொற்பிழை. சொற்சோர்வு படேல் (ஆத்திசூ). |