Word |
English & Tamil Meaning |
---|---|
சொற்பசீவனம் | coṟpa-cīvaṉam, n.<>svalpa +. Precarious living, living from hand to mouth ; வறுமைப்பட்ட வாழ்வு . |
சொற்படு - தல் | coṟ-paṭu-, v. intr. <>சொல். To yield in plenty, increase to; to succeed ; பலன் மிகுதல். தானியம் சொற்பட்டிருக்கிறது . (w.) |
சொற்படுத்து - தல் | coṟ-paṭuttu-, v. intr. <>சொல் +. To compose to a particular tune ; இசைக்கு இணங்கப் பதமமைத்தல். உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் அறிந்து (சிலப்.3, 150, உரை) . |
சொற்பத்திலேபார் - த்தல் | coṟpattilē-pār-, v.tr. <>சொற்பம் +. 1. To attempt easy means; காரியங்களை எளிதின் முடிக்க முயலுதல். 2. To obtain a thing at a low price; to go in for cheap things; |
சொற்பதம் | coṟ-patam, n.<>சொல் +. 1. Implication, suggestion; சொல்லளவு. வெற்பன்வினாய சொற்பத நோக்கி (திருக்கோ.61). 2. The state of being described in words; |
சொற்பபுத்தி | coṟpa-putti, n.<>சொற்பம் +. 1. Little knowledge ; அய்பவறிவு. 2. Mean-mindedness ; |
சொற்பம் | coṟpam, n.<>svalpa. 1. Smallness, slightness, meanness; அற்பம். 2. Trifle, that which is small or insignificant; |
சொற்பமனிதன் | coṟpa-maṉitaṉ, n.<>id. +. Poor or insignificant man ; ஏழை . (w.) |
சொற்பவிலை | coṟpa-vilai, n.<>id. +. Low or cheap price ; மலிவான விலை . Loc. |
சொற்பழி | coṟ-paḻi, n.<>சொல் +. Scandal, reproach ; பிறர் கூறும் நிந்தைமொழி. தலையெலாஞ் சொற்பழியஞ்சிவிடும் (நாலடி, 297) . |
சொற்பழுத்தவர் | coṟ-paḻuttavar, n.<>id. +. Persons with great power of speech or command of language, as poets ; நாவன்மையுடையவர். சொற்பழுத்தவர்க்கு மாண்மை சொல்லலாம் (சீவக.435) ; |
சொற்பனம் | coṟpaṉam, n. svapna. See சொப்பனம். சொற்பன நடுமனையை விளக்கியே (வேதா.சூ.107) . . |
சொற்பாடு | coṟ-pāṭu, n.<>சொல் +. 1. Agreement, mutual understanding ; உடன்படிக்கை. தூமொழியாளுட றொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து . . . இலங்கையர்கோன் வரையெடுக்க (தேவா. 67, 7). 2. Stigma ; |
சொற்பானு | coṟpāṉu, n.<>svarbhānu. Moon's ascending node ; இராகு. புகழுஞ் சொற்பானுவென்றும் (மச்சபு.புவனகோ.27) . |
சொற்பிரயோகம் | coṟ-pirayōkam, n.<>சொல் +. Use of words ; பதங்களை ஆளுகை. இயற்சொன் முதலிய நான்கு சொற்கூறாய சொற்பிரயோகமும் (சிலப்.3, 47, உரை) . |
சொற்பிழை | coṟ-piḻai, n.<>id. +. 1. Verbal mistake, lapsus linguae ; சொற்குற்றம். சொற்பிழை வராமலுனைக் கனக்கத் துதித்து (திருப்பு. 779). 2. Spelling mistake ; |
சொற்பின்வருநிலை | coṟ-piṉ-varu-nilai, n.<>id. +. (Rhet.) Repetition of the same word with different meanings, as in verse ; ஒரு சொல் வெவ்வேறுபொருளிற் பலமுறைவரும் அணி. (தண்டி.41, உரை) . |
சொற்பு | coṟpu, n.<>சொல்-. Saying, speaking ; சொல்லுகை. சொற்புறுத்தற் குரியன (கம்பரா.நகர்நீ.16) . |
சொற்புத்தி | coṟ-putti, n.<>சொல் +. Advice; admonition ; புத்திமதி . (w.) |
சொற்புரட்டு | coṟ-puraṭṭu, n.<>id. +. Falsehood, lie; பொய். சொற்புரட்டைந்திடத்தே சொல்லலா மெய்யதாமே (தனிப்பா) . |
சொற்புள் | coṟ-puḷ, n.<>id. +. Crow, as foretelling events like the coming of a guests ; (பின்வருவதைச் சொல்லுதலுடைய பறவை) காக்கை. நற்றாய் நயந்து சொற்புட் பராயது (திருக்கோ.235, கொளு) . |
சொற்பெருக்கு | coṟ-perukku, n.<>id. +. Lecture ; பிரசங்கம். Mod. |
சொற்பொருட்பின்வருநிலை | coṟ-poruḷ-piṉ-varu-nilai, n.<>id. +. (Rhet.) Repetition of a word with the same meaning, as in a verse ; ஒரு சொல் ஒரு பொருளிலேயே பலமுறை வரும் அணி. (தண்டி.41, உரை) . |
சொற்பொருத்தம் | cor-poruttam, n. <>id. +. (Poet.) Rule of propriety which enjoins that the commencing word of a poem must be trisyllabic and auspicious and must not be capable of being split in scanning, inelegant, ambiguous, meaningless, or defective in form, one of the ten See { ceyyuNmuta m செய்யுண்முதன் மொழிப்பொருத்தம் பத்தனு வகையுளி சோந்ததும், சிறப்பில்லதும், பல் பொருட்கேற்பதும், பொருளில்லாததும், திரிதல் கெடுதல் என்னும் விகார முடையதுமாகாது, மூவசையுடைய மங்கலச்சொல் செய்யுளின் முதற்கண் அமைதலாகிய பொருத்தம். (வெண்பாப்.முதன்.3) |
சொற்பொருள்விரித்தல் | coṟ-poruḷ-virittal, n.<>id. +. Elaborating the etymological significance of a word in a treatise, one of 32 utti , q.v. ; உத்திகள் முப்பத்திரண்டனுள் சொல்லின்பொருள் வெளிப்படையாக விளங்கும்படி விரித்துக் கூறும் உத்தி. (நன்.14). |