Word |
English & Tamil Meaning |
---|---|
சொரூபி | corūpi, n. <>sva-rūpin. One who has form; உருவமுள்ளவன். (யாழ். அக.) |
சொரூபிகரி - த்தல் | corūpi-kari-, 11 v. intr. <>svarūpī-kr. To assume form or shape; உருவமுடைத்தாதல். மயில் சொரூபிகரித்துத் தோற்றுகையினும் (சி. சி.1, 22, மறைஞா.). |
சொல்(லு) 1 - தல் | col-, v. tr. [K. sol, M. colluka.] 1. To say, speak, tell, mention, utter, express; பேசுதல். சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல் (குறள், 664). 2. To recite, repeat, relate, quote; 3. [M. colluka.] To dictate, command; 4. To advise; 5. To inform; 6. To praise; |
சொல்(லு) 2 - தல் | col-, v. tr. perh. kṣur. cf. சொலி-. To remove, alleviate, put away; களைதல். புறவி னல்லல் சொல்லிய . . . துலாஅம் புக்கோன் (புறநா. 39). |
சொல் 1 | col, n. <>சொல்1-. 1. [K. sol, M. col.] Word; term; மொழி. சொல்லினாகு மென்மனார் (தொல். சொல். 158). 2. Saying, speech; 3. Proverb, maxim; 4. Declaration, promise, assurance; 5. [M. col.] Praise, encomium, panegyric; 6. Incantation; 7. Curse; 8. Command, direction; 9. Advice; 10. (Gram.) Part of speech, of which there are four, viz., peyar-c-col, viṉai-c-col, iṭai-c-col, uṟi-c-col; 11. (Gram.) Words in Tamil language, of four classes, viz., iyaṟ-col, tiri-col, ticai-c-col, vaṭa-col; 12. (Nāṭya.) Speech or utterance on the stage, of three kings, viz., uṭ-col, puṟa-c-col, ākāca-c-col; 13. Sound; 14. Sarasvatī, as Goddess of Speech; 15. See சொல் விளம்பி. (அக. நி.) |
சொல் 2 | col, n. perh. சொல்2-. Paddy; நெல். சொல் . . . இறைஞ்சிக் காய்த்தவே (சீவக. 53). |
சொல்தவறு - தல் [சொற்றவறுதல்] | col-tavaṟu-, n. perh. சொல்2-. To break one's word; வார்த்தை பிறழ்தல். |
சொல்லகத்தியம் | col-l-akattiyam, n. <>id.+. An ancient treatise on music, not extant; இறந்துபட்ட ஒர் இசைநூல். (சிலப். 8, 24, அரும்.) |
சொல்லணி | col-l-aṇi, n. <>id.+. Figure of speech depending for its effect on sound alone, opp. to poruḷ-aṇi; சொல்லினோசை முதலியன இன்பம்பட அமைக்கும் அலங்காரம். (தண்டி.) |
சொல்லதிகாரம் | col-l-atikāram, n. <>id.+adhikāra. (Gram.) Section dealing with etymology; சொல்லின் பாகுபாடு செய்கை முதலியவற்றைப்பற்றிக் கூறும் இலக்கணப் பகுதி. (தொல்.) |
சொல்லலங்காரம் | col-l-alaṅkāram, n. <>id.+. See சொல்லணி. . |
சொல்லழுத்தம் | col-l-aḻuttam, n. <>id.+. 1. Emphasis; ஊன்றியுச்சரிக்கை. 2. Word of promise; decisive speech; |
சொல்லற்பாடு | collaṟ-pāṭu, n. <>சொல்1-+. Speaking, mentioning; சொல்லப்படுகை. அவ்விரண்டும் உவமமென்று சொல்லற்பாட்டிற் கடியப்படா (தொல். பொ. 310, உரை). |
சொல்லறிகணை | col-l-aṟi-kaṇai, n. <>சொல்3+. Arrow that is shot at a person or animal when out of sight, the direction being judged by sound; சத்தத்தைக்கேட்டே மறைந்துள்ள இலக்கை அறிந்து எய்யுங் கணை. சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும் (யசோதர. 4, 31). |
சொல்லறுதி | col-l-aṟuti, n. <>id+. Final word, as in striking a bargain; விலை முதலியவற்றை வரையறையாகக் கூறும் உறுதி. (W.) |
சொல்லாக்கம் | col-l-ākkam, n. <>id.+. Formation of words, word-building; சொற் செய்துகொள்ளுகை. |
சொல்லாகுபெயர் | col-l-āku-peyar, n. <>id.+. A species of metonymy in which a term signifying word is used to denote a composition, oral or written, as in நூலுக்கு உரை செய்தான்; 'உரை செய்தான்' என்பதில் உரையென்பது அம்மொழியால் உணரப்படும் பொருளுக்கு ஆவது போன்ற ஆகுபெயர். (நன். 290, உரை.) |