Word |
English & Tamil Meaning |
---|---|
சோமதிசை | cōma-ticai, n.<>sōma + dišā. North, as kubera's quarter ; (குபேரனது திசை) வடதிசை. (திவா.) |
சோமநாதி | cōmanāti, n.<>M. sōmanādikāyam. [Tu. sōmanādhikāyi.] A kind of asafcetida ; ஒருவகைப் பெருங்காயம். (W.) |
சோமபானம் | cōma-pāṉam,. n.<>sōma +. Drinking of the Sōma beverage at the sōma sacrifice ; சோமயாகத்திற் சோமரசம் பருகுகை . |
சோமம் | cōmam, n.<>sōma. 1. Sōma plant, whose juice was offered to gods in vēdic sacrifices and drunk by the priests; யாகங்களில் தேவதைகளுக்கு நிவேதித்துப் பின் யாகஞ் செய்பவர் பருகுதற்குரிய சோமக்கொடியுநீ (காசிக.துருவன்பதம்.4). 2. See சோமயாகம். (பிங்.) 3. Moon creeper; 4. Rue, See அருவதா. 5. Toddy ; |
சோமமணல் | cōma-maṇal, n.<>id. +. Sand containing silver ore ; வெள்ளிமணல் . (W.) |
சோமயாகம் | cōma-yākam, n.<>id. + yāga. A kind of sacrifice at which Soma juice is offered to gods ; தேவர் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்விவகை.பிங். |
சோமயாஜி | cōma-yāji, n.<>id. + yājin. 1. Brahmin who has performed the šoma sacrifice; சோமயாகஞ் செய்தோன். குட்டேறபட்ட சோமயாஜியார். 2. A title among Brahmins whose ancestors have performed Sōma sacrifice; |
சோமர் | cōmar, n.<>sōma-pā. A particular class of manes ; பிதிரர்வகை. (சங்.அக.) |
சோமராகம் | cōma-rākam,. n.<>sōma + rāga. (Mus.) A musical mode of the pālai class ; பாலைப்பண்களுளொன்று. (பிங்.) |
சோமரோகம் | cōma-rōkam, n.<>id. + rōga. A disease of women ; மகளிர்க்குவரும் நோய் வகை. (தைலவ.தைல.97.) |
சோமலதை | cōma-latai, n.<>id. + latā. Soma plant ; சோமக்கொடி. |
சோமவட்டம் | cōma-vaṭṭam, n.<>id. +. (Yōga.) A mystic circle from which nectar is believed to flow, situated between the eyebrows ; அமுதம் பெருகுமிட மென்று கருதப்படும் புருவமத்தி. அங்கியைச் சோமவட்டத்தடைத்தும் (தாயு.சின்மயா.11) . |
சோமவல்லரி | cōma-vallari, n.<>sōmavallarī. A plant .See பொன்னாங்காணி. (மலை.) . |
சோமவல்லி | cōma-valli, n.<>sōma-valli. Gulancha ; See சீந்தில். (மலை.) . |
சோமவாரம் | cōma-vāram, n. a sōma + vāra. Monday ; திங்கட்கிழமை. பதின்மூன்றாம் பக்கமும் சோமவாரமும் பெற்ற அனுடத்தில் (சிலப்.10,2 உரை) . |
சோமவாரவிரதம் | cōma-vāra-viratam, n.<>id. +. A fast observed in honour of Siva on mondays beginning with the first monday of kōrttikai ; கார்த்திகைமாதத்து முதல் திங்கட்கிழமை தொடங்கித் திங்கட்கிழமைதோறும் பட்டினியிலிருந்து பிரதோஷகாலத்தில் சிவபிரானைப் பூசை செய்து அனுஷ்டிக்கும் விரதம் . |
சோமவுலுக்கம் | cōmavulukkam, n.<>sōmavalka. Teak ; தேக்கு. (மூ.அ.) |
சோமன் | cōmaṉ, n.<>sōma. 1.Moon; சந்திரன். சோமன்கலை. (திருவாச.15, 11). 2. See சோமசுந்தரன். கந்தவனச் சோமன் (திருவாலவா.27, 32) 3. . Kubera; 4. A chief noted for his bounty; 5. A Vasu, one of aṣṭa-vacukkaḷ , q.v.; 6. Camphor; 7. Soap; 8. A prapred arsenic; 9. See சோமமணல். 10. Man's cloth; 11. Cloth worn above vēṭṭi and below tuppaṭṭi 12. Decorative cloth worn during festive occasions; |
சோமன்சாம்பு | cōmaṉ-cāmpu, n.<>சோமன் +. A loing piece from the loom before being cut for wear ; பலதுணிகள் கொண்ட தறிவஸ்திரம் . (W.) |
சோமன்சோடி | cōmaṉ-cōṭi, n.<>id. +. A pair of cloths, ten and six cubits in length, worn by men ; பத்தாறு எனவழங்கும் இரட்டை ஆடை. |
சோமன்சோடு | cōmaṉ-cōṭu, n.<>id. +. See சோமன்சோடி. . |
சோமன்புத்திரி | cōmaṉ-puttiri, n.<>Sōma + putrī. The river Narmada, as the Moon's daughter ; [சந்திரன் மகள்] நருமதை. (பிங்.) |
சோமன்மடி | cōmaṉ-maṭi, n.<>id. +. See சோமன்சாம்பு. (W.) . |
சோமனுப்பு | cōmaṉ-uppu, n.<>id. +. 1. Refined camphor; பச்சைக் கற்பூரம். (மூ.அ). 2. A prepared arsenic; 3. Rock-salt, impure chloride of sodium; |