Word |
English & Tamil Meaning |
---|---|
அளகபந்தி | aḷaka-panti n. <>id.+paṅkti. Orderly arrangement of a woman's hair; கூந்தலி னொழுங்கு. நல்லா ரளகபந்தி யெனவிருண்ட (இரகு.திக்கு.12). |
அளகபாரம் | aḷaka-pāram n. <>id.+bhāra. Mass of a woman's hair; கூந்தற் றொகுதி. (திருப்பு.17.) |
அளகம் 1 | aḷakam n. cf. halā. 1. Water; நீர். (பிங்.) 2. Porcupine's quill; |
அளகம் 2 | aḷakam n. <>aḷaka. 1. Woman's hair; பெண்மயிர். (பிங்). 2. Curl; |
அளகவல்லி | aḷaka-valli n. <>id.+vallī. Hair hook, an ornament connecting the ear with the hair; மயிர்மாட்டி. (சூளா.சுயம்.196.) |
அளகாதிபன் | aḷakātipaṉ n. <>alakā+adhipa. Kubēra, the lord of Alakā; குபேரன். அளகாதிபனுரைத்த வாசகம். (உத்தரரா.வரையெடு.26). |
அளகாபுரி | aḷakā-puri n. <>id.+. City of Kubēra; குபேரநகரம். (பாரத.மணிமான்.15.) |
அளகு | aḷaku n. 1. Hen of owl, fowl or peacock; கோட்டான், கோழி, மயில் இவற்றின் பெண். (தொல்.பொ.610. 611). 2. Cock; 3. The third nakṣatra. See கார்த்திகை. |
அளகேசன் | aḷakēcaṉ n. <>alakā+īša. Kubēra, lord of Alakā; குபேரன். (தாயு.பரிபூ.10.) |
அளகை | aḷakai n. <>Alakā. Kubēra's city; அளகாபுரி. (உத்தரரா.வரை.1.) |
அளகையாளி | aḷakaiyāḷi n. <>id.+. Kubēra, ruler of Alakā; குபேரன். (திவா.) |
அளத்தி | aḷatti n. <>அளம். Woman of the maritime tracts; நெய்தனிலப்பெண். (சூடா.) |
அளத்துப்பச்சை | aḷattu-p-paccai n. <>id.+. Sea-blite. See மருக்கொழுந்துச்சக்களத்தி. (மூ.அ.) |
அளத்துப்புல் | aḷattu-p-pul n. <>அளறு+. Kind of grass. See முயிற்றுப்புல் (மூ.அ.) |
அளத்துப்பூளை | aḷattu-p-pūḷai n. Species of wool-plant, Aerua brachiatum; செடிவகை. (W.) |
அளப்பம் | aḷappam n. <>அள-. 1. Measuring; அளக்கை. (W.) 2. Contrivance, stratagem; |
அளப்பள 1 - த்தல் | aḷappaḷa- v.intr. <>அலப்பு+அள-. 1. To repeat needlessly, prate, chatter; அலப்புதல். (W.) 2. To complain, grumble, express dissatisfaction; |
அளப்பள 2 - த்தல் | aḷappaḷa- v.intr. <>அளப்பு+அள-. See அளப்பறி-. Loc. Loc. |
அளப்பறி - தல் | aḷappaṟi- v.intr. <>id.+. To discover another's designs, find out an other's intentions; உட்கருத்தைத் தந்திரமாயறிதல். |
அளப்பன் | aḷappaṉ n. <>அள. Babbler, prater, chatterer; வீணாகப் பேசுவோன். (W.) |
அளப்பு 1 | aḷappu n. <>id. 1. Measuring; அளக்கை. (திவ்.இயற்.திருவிருத்.59). 2. Bounds, limit; 3. Ascertaining after inquiry; |
அளப்பு 2 | aḷappu n. <>அலப்பு. 1. Needless repetition, chatter; அலப்புகை. 2. Grumbling; |
அளப்புக்கு | aḷappukku n. Balloon-vine. See முடக்கொற்றான். (மூ.அ.) |
அளபு | aḷapu n. <>அள-. 1. Measurement; அளவு மேவிய வுயிரளபாய் (நன்.88, மயிலை). 2. Lengthening of the sound of a letter; |
அளபெடு - த்தல் | aḷapeṭu- v.intr. <>அளபு+எடு-. (Gram.) To lengthen the sound of a letter; எழுத்து மாத்திரைமிக்கொலித்தல். |
அளபெடை | aḷapeṭai n. <>id.+id. (Gram.) Lengthening of sound in poetry, etc., உயிரளபெடை, ஒற்றளபெடை. (நன்.61.) |
அளபெடைவண்ணம் | aḷapeṭai-vaṇṇam n. <>id.+. (Pros.) Rhythm produced by using frequently the lengthened letters known as aḷapeṭai; அளபெடை பயின்றுவருஞ் சந்தம். (தொல்.பொ.531.) |
அளம் | aḷam n. prob. அள-. [T.M. aḷam.] 1.Salt-pan; உப்பளம். 2. Density, closeness; 3. Maritime tract; 4. Saline soil; |
அளம்படு - தல் | aḷam-paṭu- v.intr. <>அலம்+. To suffer; வருந்துதல். அளம்பட் டறிவொண்ணா வகை. (தேவா.245, 9). |
அளம்பல் | aḷampal n. Stag's-horn trumpet flower. See வெடங்குறுணி. (L.) |
அளம்பற்று - தல் | aḷam-paṟṟu- v.intr. <>அளம்+. To wear away through the action of salt; உப்புப் பூத்தல். உளுத்து அளம்பற்றின சுவர். (திவ்.திருக்குறுந்.19. வ்யா). |
அளமரு - தல் | aḷamaru- 13 v.intr. To be bewildered. See அலமருதல். அளமரு குயிலினம் (சீவக.49). |
அளர்க்கம் | aḷarkkam n. <>alarka. Three lobed nightshade. See தூதுளை. (தைலவ.தைல.16.) |