Word |
English & Tamil Meaning |
---|---|
அளவுநாழி | aḷavu-nāḻi n. See அளவுபடி. . |
அளவுபடி | aḷavu-paṭi n. <>அளவு+. Standard measure; முத்திரைப்படி. |
அளவுபடுத்து - தல் | aḷavu-paṭuttu- v.tr. <>id.+. To limit; வரையறைசெய்தல். |
அளவுபடை | aḷavu-paṭai n. <>id.+. Small army; சிறுசேனை. அளவுபடைக்குப் பெரும் படை தோற்பது. (ஈடு, 2, 4, 7). |
அளவுவர்க்கம் | aḷavu-varkkam n. <>id.+. An ancient tax on measures of capacity; ஒரு பழையவரி. (S.I.I.ii, 247.) |
அளவெடு - த்தல் | aḷaveṭu- v.tr. <>id.+. எடு-. To take the dimensions of; ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை நிர்ணயித்தல். |
அளவெண் | aḷaveṇ n. <>id.+ எண். Variety of ampōtaraṅkam consisting of lines of four feet each; நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்புவகை. (காரிகை.செய்.10. உரை.) |
அளவை | aḷavai n. <>அள-. 1. Measure of which four kinds are mentioned in ancient literature viz., எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல். (நன். 290.) 2. Standard of measure; 3. Means of acquiring correct knowledge, which are three, viz., 4. Bound, limit; 5. Day; 6. Time, occasion, opportunity; 7. Nature; 8. Sign, indication; |
அளவைக்கால் | aḷavai-k-kāl n. <>அளவை+. A grain measure. See மரக்கால். (திவா). |
அளவைநூல் | aḷavai-nūl n. <>id.+. Logic; தருக்கநூல். அளவைநூல் சொன்னூல் கற்றே கற்கவேண்டுதலின் (குறள்.725, உரை). |
அளவையாகுபெயர் | aḷavai-y-āku-peyar n. <>id.+. Metonymy in which a word and its implied meaning relate to measurement, of which there are four according as the measure is one of computation or weight or capacity or extent; எண்ணல் முதலிய அளவைப்பெயர் பொருளுக்கு ஆகிவருவது. (நன்.290, உரை.) |
அளறு 1 | aḷaṟu n. prob. அள-. 1. Mire, soft mud, slough; குழைசேறு. (பிங்). 2. Liquid of thick consistency; 3. Water; 4. Hell; 5.Red ochre; |
அளறு 2 - தல் | aḷaṟu- 5 v.intr. 1. To be mauled, shattered; சிதறிவெடித்தல். 2. To split in falling; 3. To be fractured by a fall or blow, broken, bruised; |
அளறுபடு - தல் | aḷaṟu-paṭu- c.intr. <>அளறு+. 1. To turn into mire; சேறாதல். 2. To be overthrown; |
அளாய்குளாய் | aḷāy-kuḷāy n. Hasty action; பரப்பரப்பான செய்கை. அளாய்குளாயாய்ப் போகுமது. (ஈடு, 9, 1, 9). |
அளாவன் | aḷāvaṉ n. <>அளாவு-. Mixture; கலப்பு. அளாவனான சத்துவத்தை யுடையராயிருப்பாரும் (ஈடு, 1, 1, 5). |
அளாவு - தல் | aḷāvu- <>அள-. 5 v.intr.; v.tr. To mingle; 1. To converse, hold social intercourse; 2. To stir; 3. To reach, extend up to; கலத்தல். பாலோ டளாய நீர் (நாலடி.177). உசாவுதல். (குறள், 523.) 2. To கையால் அளைதல். சிறுகை யளாவிய கூழ் (குறள், 64). சென்று பொருந்துதல். விசும்பினை யளாவு மன்னவன் கோயிலை (கந்தபு. மூவாயி.1) |
அளி 1 - தல் | aḷi- 4 v.intr. [M. aḷi.] 1. To become mellow; அறக் கனிதல். அளிந்ததோர் கனியே (திருவாச.37. 4). 2. To be overboiled; 3. To be attached; 4. To mix, mingle; |
அளி 2 - த்தல் | aḷi- 11 v.tr. 1. To protect, take care of, nourish; காத்தல். (பிங்.) 2. To give, bestow; 3. To crowd together; 4. To yield, beget; 5. To speak, express; 6. To create; 1. To be gracious, show favour; 2. To create desire; 3. To remove weariness; |
அளி 3 | aḷi n. <>அளி2-. 1. Love; அன்பு. அளி நயந்து (இரகு. நாட்டு. 1). 2. Clemency, grace; 3. Desire; 4. Coolness; 5. Gift, present; 6. Civility, politeness; 7. Poverty, wretchedness; 8. Unripe fruit; |