Word |
English & Tamil Meaning |
---|---|
அளவடி | aḷavaṭi n. <>அளவு+அடி. Line of four metrical feet; நாற்சீரடி. (காரிகை.உறுப்.12, உரை.) |
அளவம் | aḷavam n. prob. அளவு-. Mimicry, ridicule by imitation; ஒருவனைப்போல் நடித்துப் பரிகசிக்கை. என்னை அளவம் காண்பித்தான். Loc. |
அளவர் | aḷavar n. <>அளம். Persons belonging to the caste of salt manufacturers; உப்பமைப்போர். பரதவ ரளவர் வாரிப் படுத்தமீ னுப்பின் குப்பை. (கந்தபு.ஆற்று.30). |
அளவழிச்சந்தம் | aḷavaḻi-c-cantam n. <>அளவு+அழி1-+. A stanza of the viruttam type whose lines are not equally long, but no line of which contains less than 4 and more than 26 syllables; நான்கு முதல் இருபத்தாறெழுத்துவரை வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) |
அளவழித்தாண்டகம் | aḷavaḻi-t-tāṇṭakam n. <>id.+. A stanza in which each line contains not less than 27 syllables without the lines agreeing in quantity with each other; இருபத்தேழெழுத்து முதலாகவந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) |
அளவளாவு 1 - தல் | aḷavaḷāvu- v.intr. <>id.+ அளாவு. To hold intimate intercourse live socially, converse freely; கலந்து பேசுதல். அளவளாய் நட்டாலும் (மூதுரை.4). |
அளவளாவு 2 | aḷavaḷāvu n. <>id.+. Intimacy; மனக்கலப்பு. அலவளா வில்லாதான் வாழ்க்கை. (குறள்.523). |
அளவறு - த்தல் | aḷavaṟu- v.tr. <>id.+. அறு2-. To test by the logical methods of proof; அளந்தறிதல். அளவறுப்பதற் கரியவன் (திருவாச.5, 35). |
அளவன் 1 | aḷavaṉ n. <>id. [M. aḷavan.] One who measures the grain; தானியம் அளப்போன். |
அளவன் 2 | aḷavaṉ n. A prepared arsenic; சோரபாஷாணம். (மூ.அ.) |
அளவி | aḷavi n. <>அள-. Limit; அளவு. அளவியை யார்க்கு மறிவரியோன் (திருக்கோ.10). |
அளவிடு - தல் | aḷaviṭu- v.tr. <>அளவு+இடு-. 1. To measure, explore; அளத்தல். (கந்தபு.அகத்தி.7). 2. To estimate, calculate; 3. To investigate, examine; |
அளவிடை | aḷaviṭai n. <>id.+id. Calculation, estimation; மதிப்பிடுகை. சத்துருவை அளவிடை பார். (W.) |
அளவியல் | aḷaviyal n. <>id.+ இயல். (Pros.) Regulation regarding the number of lines in different kinds of stanzas; பாவின் அடிவரையறை (தொல்.பொ.313.) |
அளவியற்சந்தம் | aḷaviyaṟ-cantam n. <>அளவியல்+. A stanza in which each one of the lines contains the same number of syllables, between 4 and 26; நான்கு முதல் இருபத்தாறெழுத்து வரை அளவொத்துவரும் அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) |
அளவியற்றாண்டகம் | aḷaviyaṟṟāṇṭakam n. <>id.+ தாண்டகம். A stanza in which each one of the lines contains not less than 27 syllables and all contain the same number; இருபத்தேழெழுத்து முதலாகவரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) |
அளவில் | aḷavil adv. <>அளவு. As regards; மட்டில். என் அளவில். |
அளவிற - த்தல் | aḷaviṟa- v.intr. <>id.+ இற-. 1. To exceed all bounds, to be immeasurable; எண்ணிலதாதல். 2. To exceed appointed limits; |
அளவு 1 | aḷavu n. <>அள-. [k. M. aḷavu, Tu. ala.] 1. Measure, size, number; பரிமாணம். அளவில் பூதவெம் படையொடும் (கந்தபு.குமாரபுரி.1). 2. Laws of reasoning, dialectics; 3. Variety of duration of time measure consisting of three mātrās, corresponing to the mod. pulutam; 4. Opportunity favourable, occasion; 5. Quality, nature; 6. Revenue survey; 7. Knowledge, wisdom; adv. Until, only so far, so much; From; |
அளவு 2 - தல் | aḷavu- <>id. 5 v.intr. 1. To blend, mingle; கலப்புறுதல். புறத்திணைக்கண் இயற்பெயர் அளவி வரும் (தொல்.பொ.55, உரை). 2. To mix; To inquire after one's welfare; |
அளவுக்கல் | aḷavu-k-kal n. <>அளவு+. Stone pillar for measuring the height of water in tanks; நீரேற்றங் காட்டுங் கல். (S.I.I.i, 130.) |
அளவுகருவி | aḷavu-karuvi n. <>id.+. Instrument of measurement. . |
அளவுகோல் | aḷavu-kōl n. <>id.+. Measuring rod, foot-rule; அளக்குந் தடி. வியனிலத்தளவுகோல். (பிரபுலிங்.துதி.16). |