Word |
English & Tamil Meaning |
---|---|
சௌந்தரியவதி | cauntariyavati, n. <>saundarya-vatī. Beautiful woman; அழகுள்ளவள். Colloq. |
சௌப்திகம் | caupikam, n. <>sauptika. Night attack and slaughter of sleeping persons; துயில்வோரை எதிர்த்துக் கொல்லுகை. சௌப்திக பருவம். (பாரத.) |
சௌபஞ்சனம் | caupacaṉam, n. <>šaubhājana. Three-leaved indigo. See புனல் முருங்கை. (மலை.) . |
சௌபலன் | caupalaṉ, n. <>saubala. šakuni; சகுனி. கன்னசௌபலர் (பாரத. வாரணா. 5). |
சௌபாக்கியம் | caupākkiyam, n. <>saubhāgya. 1. Auspiciousness, good fortune, prosperity; மிகுபாக்கியம். இகபர சௌபாக்கிய மருள்வாயே (திருப்பு.177). 2. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; 3. An Upaniṣad, one of 108; |
சௌபாக்கியரேகை | caupākkiya-rēkai, n. <>id. +. A kind of distinctive mark on the palm, believed to indicate one's fortune; ஒருவனது அதிருஷ்டத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் கைரேகைவகை. Colloq. |
சௌபாக்கியவதி | caupākkiya-vati, n. <>saubhāgyavatī. A title applied to a girl or woman whose husband is alive; சிறுபெண்கள், மாங்கலியந்தரித்த மகளிர் இவர்களின் பெயர்க்கு முன் வழங்கும் ஒரு மங்கலச்சொல். |
சௌபானம் | caupāṉam, n. <>sōpāna. Steps, as of a staircase; படிக்கட்டு. பண்புறவே சௌபான பட்சங்காட்டி (தாயு. ஆகார.10). |
சௌமம் | caumam, n. <>sauma. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. சிற்பசாத். 3.) |
சௌமன் | caumaṉ, saumya. Mercury, as the Moon's son; [சந்திரன் மகன்] புதன். (w.) |
சௌமியா | caumiya, n. <>saumya. The 43rd year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் நாற்பத்து மூன்றாவது. |
சௌமியம் | caumiyam, n. <>saumya. (w.) 1. Calmness, gentleness, meekness; சாந்தம். 2. Loveliness, beauty; |
சௌமியவாரம் | caumiya-vāram, n. <>id. +. Wednesday; புதன்கிழமை. Colloq. |
சௌமியன் | caumiyaṉ, n. <>saumya. 1. Person of gentle disposition; சாந்தமுள்ளவன். 2. Mercury; 3. A Rudra, or of ekātacaruttirar, q. v.; 4. Jaina ascetic; |
சௌரம் 1 | cauram, n. <>saura. 1. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. 2. The religion of the Sauras who regard the Sun as the Supreme Being and are exclusively devoted to His workship; |
சௌரம் 2 | cauram, n. <>kṣaura. Shaving; மயிமழிக்கை. |
சௌரமாசம் | caura-mācam, n. <>சௌரம் +. Solar month; சூரியகதியினால் ஏற்படும் மாதம். (விதான் குணாகுண. 80, உரை.) |
சௌரமானம் | caura-māṉam, n. <>id. +. (Astron.) System of calculation of months and years based on the sun's course; சூரியகதியைக் கொண்டு மாதவருடங்களை அளவிடும் முறை. சௌரமானபட்சத்தால் மாசித்திங்கள் கொள்ளார் (சீவக. 493, உரை). |
சௌராட்டிரம் | caurāṭṭiram, n. See சௌராஷ்டிரம். . |
சௌராஷ்டிரம் | caurāṣṭiram, n. <>saurāṣṭra. (w.) 1. Surat, modern peninsula of Kathiawar; கத்தியவார் என்று இக்காலத்துக் கூறப்படும் தேசம். 2. A secondary tune; |
சௌராஷ்டிரர் | caurāṣṭirar, n. <>id. A class of silk-weavers, immigrants from Gujarat into the Tamil country in the days of the early Nayak kings, speaking a corrupt dialect of Gujarati; தென்னாட்டு நாயக்கர்களினாட்சியில் கூர்ஜரதேசத்திலிருந்து தமிழ்நாட்டிற் புகுந்தவரும் குஜராத்திக்குச் சம்பந்தப்பட்ட ஒருவகைப் பாஷையைப் பேசுபவருமான பட்டுநூற்காரச் சாதியார். (E. T.) |
சௌரி 1 | cauri n. <> sauri. (பிங்.) 1. Saturn; சனி 2. Yama, the god of Death; 3. Karna; |
சௌரி 2 | cauri, n. <>sauri. The Jumna; யமுனை நதி. (பிங்.) |
சௌரி 3 | cauri, n. <>šauri. Visnu; திருமால். (பிங்.) |