Word |
English & Tamil Meaning |
---|---|
ஞானசமாதி | āṉa-camāti, n. <>id. +. An apright posture assumed by ascetics for silent meditation; துறவிகள் நிட்டையின்பொருட்டு நேராக நிமிர்ந்திருக்கும் நிலை. (W.) |
ஞானசரிதன் | āṉa-caritaṉ, n. <>id. +. Ascetic who follows the path of wisdom; ஞானநெறியிலே ஒழுகுபவன். ஞானசரிதரா நற்றவர்க்கும் (பாரத. வாரணா. 68) . |
ஞானசரீரம் | āṉa-carīram, n. <>id. +. Spiritual body; அறிவு நயமான சரீரம். (W.) |
ஞானசாத்திரம் | āṉ-cāttiram, n. <>id. +. Religious or theological treatise; சமயஞானம் உணர்த்தும் நூல். |
ஞானசாதகன் | āṉa-cātakaṉ, n. <>id. +. Person practising the devotions of the āṉa stage; மோட்சசாதனமுறையில் ஞானநெறி அடையவேண்டி முயல்பவன். (சி. சி. 8, 32, சிவாக்.) |
ஞானசாதனம் | āṉa-cātaṉam, n. id. +. (šaiva.) Practice in the devotions of the āṉa stage; மோட்சசாதனமுறையில் ஞான்நேறி அடைதற்கு வேண்டும் பயிற்சி. |
ஞானசாதனை | āṉa-cātaṉai, n. <>id. +. See ஞானசாதனம். (U.) . |
ஞானசாரம் | āṉa-cāram, n. <>id. +. 1. A treatise on šaiva Siddhanta philosophy; ஒருசைவசித்தாந்த நூல். 2. A vaiṣṇava religious work in Tamil verse by Aruḷāḷa-p-perumāl-emperumāṉār; |
ஞானசித்தன் | āṉa-cittaṉ, n. <>id. + siddha. Ascetic who has attained the āṉa stage; மோட்சசாதனத்தில் ஞானங் கைவரப் பெற்றோன். (சி. சி. 8, 32, சிவாக்.) |
ஞானசுகம் | āṉa-cukam, n. <>id. + sukha. Bliss attained by the advanced devotee, who by meditation is in inseparable union with God; தியானத்தால் இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் ஞானியின் பேரின்பம். (W.) |
ஞானசூரியன் | āṉa-cūriyaṉ, n. <>id. +. God, as the Sun of Wisdom; [அறிவினாற் சூரியன்போன்று விளங்குபவன]¢ இறைவன். 2. Jesus christ; |
ஞானசூனியம் | āṉa-cūṉiyam, n. <>id. +. Devoid of wisdom; அறிவற்றவன்-வள்-து. |
ஞானசூனியன் | āṉa-cūṉiyaṉ, n. <>id. +. One who is devoid of wisdom or sense; அறிவற்றவன். Colloq. |
ஞானசைவம் | āṉa-caivam, n. <>id. +. (šaiva.) A šaiva sect which holds that deliverance consists in the inseparable union of the soul with God, attained by the practice of samādhi, one of sixteen caivam, q.v; சைவம் பதினாறனுள் ஒன்றானதும் நிட்டைகூடி இறைவனோடு இரண்டறக்கலத்தலே மோட்சமென்று கூறுவதுமாகிய சமயம் (த. நி. போ. பக். 255.) |
ஞானத்தகப்பன் | āṉa-t-takappaṉ, n. <>id. +. Godfather; ஞானஸ்தானத்தில் தந்தையாக வரிக்கப்பட்டவன். Chr. |
ஞானத்தாய் | āṉa-t-tāy, n. <>id. + God mother; ஞானஸ்தானத்தில் தாயாக வரிக்கப்பட்டவள். Chr. |
ஞானத்தாளன் | āṉattāḷaṉ, n. <>id. + ஆளன். See ஞானி. ஞானத்தாளர் நல்லொழுக்கன்றென (பெருங். வத்த. 15, 42). . |
ஞானத்தில்ஞானம் | āṉattil-āṉam, n. <>id. +. (šaiva.) Religious contemplation; ஞானநிட்டை கூடுகை. (சி. போ. பா. 8, 1, பக். 358.) |
ஞானத்தில்யோகம் | āṉattil-yōkam, n. <>id. +. (šaiva.) Coming to a clear conclusion about the words of wisdom listened to; ஞானத்தைச் சிந்தித்துத்தெளிகை. (சி. போ. பா. 8, 1, பக். 358.) |
ஞானத்திற்கிரியை | āṉattiṟ-kiriyai, n. <>id. +. (šaiva.) Thinking over the words of wisdom listened to; கேட்ட ஞானநூற்பொருளைச் சிந்திக்கை. (சி. போ. பா. 8, 1, பக். 358.) |
ஞானத்திற்சரியை | āṉattir-cariyai, n. id. +. (šaiva.) Llistening to words of wisdom; ஞானநூற்பொருளைக் கேட்கை. (சி. போ. பா. 8, 1, பக். 358.) |
ஞானத்திறைவி | āṉattiṟaivi, n. <>id. + இறைவி. Sarasvatī, as the Goddess of Learning; [அறிவிற்குரிய பெண் தெய்வம] சரசுவதி. (பிங்.) |
ஞானதசை | āṉa-tacai, n. id. + dašā. The state of the individual soul when it is ripe for emancipation; ஆன்மா மோட்சமடைதற்குரிய பக்குவநிலை. (W.) |
ஞானதிட்டி | āṉa--tiṭṭi, n. <>id. +. See ஞானதிருட்டி. (W.) . |
ஞானதிருட்டி | āṉa-tiruṭṭi, n. <>id. +. 1. Spiritual light or illumination; occult vision; கட்பார்வையாலன்றி ஞானத்தால் உணருகை. 2. Second sight, knowledge of the past, present and future; 3. Guru's look of grace on a disciple dispelling malam and imparting illumination; |