Word |
English & Tamil Meaning |
---|---|
ஞானன் | āṉaṉ, n. <>id. Brahmā, as wise; [அறிவில் முதிர்ந்தவன்] பிரமன். (திவா.) |
ஞானஸ்நானங்கொடு - த்தல் | āṉa-snāṉaṅ-koṭu-, v. intr. <>ஞானஸ்நாநம் +. To administer baptism; ஞானஸ்நானத்தைப் பண்ணுவித்தல். (W.) |
ஞானஸ்நாநத்தொட்டி | āṉa-snāna-t-toṭṭi, n. <>id. +. Baptismal font; ஞானஸ்நானஞ் செய்யும் நீர்த்தொட்டி. Chr. |
ஞானஸ்நானம் | āṉa-snāṉam, n. <>jāna +. Baptism; கிறிஸ்துவ சமயத்திற் புகுதற்காகச் செய்யப்பெறும் சுத்தீகரணச் சடங்கு. Chr. |
ஞானாகமம் | āṉakamam, n. <>id. + āgama. Wisdom literature; விவிலியநூலுள் ஒரு பகுதி. Chr. |
ஞானாகரன் | āṉakaraṉ, n. <>id. + ā-kara. Wise person, as the abode of wisdom; [ஞானத்திற்கு இருப்பிடமானவன்] விவேகி. |
ஞானாகாசம் | āṉākācam, n. <>id. +. Spiritual atmosphere of the āṉi in which he is believed to have universal knowledge; ஞானி அனைத்தையும் ஒருங்குணர்தற்குரிய பரவெளி. (W.) |
ஞானாசத்தி | āṉ-catti, n. <>id. + šakti. See ஞானசத்தி. (W.) . |
ஞானாசாரம் | āṉacāram, n. <>id. +. (šaiva.) Religious practice of a āṉi adopting the most advanced of the fourfold means of salvation; முத்திமார்க்கத்திற் சிறந்ததாகிய ஞானபாதத்திற்குரிய வொழுக்கம். (W.) |
ஞானாசாரியன் | āṉacāriyaṉ, n. <>id. +. See ஞானகுரு. . |
ஞானாத்துமா | āṉāttumā, n. <>id. +. 1. See ஞானி, 1. (W.) . 2. The supreme Being, as the embodiment of wisdom; |
ஞானாதிக்கர் | āṉātikkar, n. <>id. + adhika. Cherubim, as a heavenly order; தெய்வசாதியினருள் ஒருவகையார். R. C. |
ஞானாந்தம் | āṉantam, n. <>id. +. Supreme spiritual knowledge; ஞானத்தின் கடையான முடிவு. அவன் அறுப்பது தாலி. பேசுவது ஞானாந்தம். |
ஞானாமிருதம் | āṉamirutam, n. <>id. +. (šaiva.) A treatise on šaiva Siddhānta philosophy by Vākīca-muṉivar; வாகீசமுனிவர் இயற்றிய ஒரு சைவசித்தாந்த நூல். |
ஞானார்த்தம் | āṉarttam, n. <>id. +. Spiritual truth; தத்துவப்பொருள். (W.) |
ஞானாவரணீயம் | āṉavaraṇīyam, n. <>id. + ā-varaṇīya. (Jaina.) The karma which is believed to obscure intelligence, one of eṇ-kuṟṟam, q.v.; எண்வகைக் குற்றங்களுள் ஒன்றும் அறிவை மறைப்பதுமான கருமம். (சீவக. 2713, உரை.) |
ஞானானுட்டானம் | āṉāṉuṭṭāṉam, n. <>id. +. See ஞானாசாரம். (W.) . |
ஞானானுபானதிரவியம் | āṉaṉupāṉa-tiraviyam, n. <>ஞானானுபானம் +. Sacraments, means of grace; தேவகிருபை பெறுதற்குச் செய்யுங் கிரியை முதலியன. Chr. |
ஞானானுபானம் | āṉāṉupāṉam, n. <>jāna + anupāna. See ஞானானுபானதிரவியம். Chr. (W.) . |
ஞானி | āṉi, n. <>jānin. 1. Wise person, sage, philosopher, person of sublime religious knowledge; பரஞானமுள்ளோன். 2. (Saiva.) Devotee of advanced type, adopting the highest of the fourfold means of salvation; 3. See ஞானன். (சூடா.) 4. Arhat; 5. Moon's descending node; 6. Cock, as knowing the hours of the night; |
ஞானேந்திரியம் | āṉēntiriyam, n. <>jā-na + indriya. Sensory organs, being five, viz., mcy, vāy, kaṇ, mūkku, cevi, opp. to karum-ēntiriyam; உணர்தற்குரிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள். (பு. வெ. 8, 33, உரை.) |
ஞானோதயம் | āṉōtayam, n. <>id. + udaya. Dawn of spiritual wisdom in the soul; மெய்யறிவு தோன்றுகை. (W.) |
ஞானோபதேசம் | āṉōpatēcam, n. <>id. + upadēša. Spiritual instruction; ஞானபோதனை. |
ஞானோபதேயம் | āṉōpatēyam, n. See ஞானோபதேசம். (W.) . |
ஞி | i. ஞி The compound of ஞ் and இ. . |
ஞிமிர் - தல் | imir-, 4 v. intr. <>நிமிர்-. To be erect; நிமிர்தல். (சங். அக.) |
ஞிமிர் - தல் | imir-, 4. v. intr. <>இமிர்-. [K. nimir.] To sound, buzz, hum as bees; வண்டு முதலியன ஒலித்தல். (சங். அக.) |
ஞிமிர் | imir, n. <>ஞிமிர்-. Sound; ஒலி. (W.) |