Word |
English & Tamil Meaning |
---|---|
டிமம் | ṭimam, n. <>dima. A kind of drama in Sanskrit representing a siege, one of ten rūpakam, q.v.; வடமொழி ரூபகம் பத்தனுள் முற்றுகையிடுதலைப்பற்றி வருவது. (சிலப். பக். 84, கீழ்க்குறிப்பு.) |
டிமிக்கி 1 | ṭimikki, n. <>U. ṭumkī. A kind of tabor, made with an earthen frame; மட்பாண்டத்தாலமைந்த ஒருவகைச் சிறுபறை. |
டிமிக்கி 2 | ṭimikki, n. Trick; தந்திரம். Loc. |
டிமிக்கிகொடு - த்தல் | ṭimikki-koṭu-, v. intr. <>டிமிக்கி +. To abscond; to bolt, give one the slip; தந்திரமாய் மறைதல். Colloq. |
டிமிக்கியடி - த்தல் | ṭimikki-y-aṭi-, v. intr. See டிமிக்கிகொடு-. . |
டிராம்வண்டி | ṭirām-vaṇṭi, n. <>E. tram +. Tram car; மின்சாரவண்டி. Mod. |
டில்லி | ṭilli, n. <>Hind. dilli. Delhi, formerly the capital of the Moghuls and now the capital of India; முற்காலத்தில் மொகலாய சக்கரவர்த்திகளின் இராசதானியாகவும், இப்போது இந்தியாவின் தலைமைநகரகமாகவும் உள்ள பட்டணம். |
டில்லிதர்பார் | ṭilli-tarpār, n. <>டில்லி +. A kind of superior silk saree; ஒருவகை உயர்ந்த பட்டுப்புடைவை. Colloq. |
டில்லிபாச்சா | ṭilli-pāccā, n. <>id. +. The Moghul king; மொகலாய அரசன். |
டில்லிராவடம் | ṭilli-rāvaṭam, n. perh. id. +. A choice ruby; செம்பு. (W.) |
டீ 1 | ṭī. . The compound of ட் and ஈ. . |
டீ 2 | ṭī, n. <>E. tea. 1. Tea leaf; தேயிலை. 2. Tea, the beverage; |
டீக்காப்பதக்கம் | ṭīkkā-p-patakkam, n. <>U. ṭīkā +. A jewel pendant with a top-clasp of gold, set with precious stones, dist. fr. kucci-p-patakkam; மகளிர் அணியும் பதக்கவகை. Colloq. |
டீக்கு | ṭīkku, n. <>Hind. ṭhīk. 1. Spruceness; stiffness, as of manners; மிடுக்கு. 2. Exactness; correctness; fitness; suitability; |
டீக்கொடு - த்தல் | ṭī-k-koṭu-, v. intr. [K. dīkodu.] To butt, as rams in fighting; ஒன்றோடொன்று மோதிக்கொள்ளுதல். Colloq. |
டீகா 1 | ṭīkā. n. A kind of jewel pendant. See டீக்காப்பதக்கம். . |
டீகா 2 | ṭīkā, n. See டீகை. Colloq. . |
டீகாப்பொட்டு | ṭīkā-p-poṭṭu, n. <>டீகா +. A jewel pendant worn by women on the forehead; மகளிர் தலைவகிருக்கு நேரே நெற்றியிலணியும் அணிவகை. Loc. |
டீகை | ṭīkai, n. <>ṭīkā. Commentary, gloss; உரை. |
டீலா 1 | ṭīlā. n. <>Hind. dhīlā. 1. Looseness; நெகிழ்ச்சி. (W.) 2. Weakness; helplessness; |
டீலா 2 | ṭīlā, n. <>K. dīlā. Delay; தாமதம். Loc. |
டீலாவில்விடு - தல் | ṭīlāvil-viṭu-, v. tr. <>டீலா +. To forsake, leave one helpless or destitute; திண்டாடவிடுதல். Loc. |
டீவு | ṭīvu, n. <>T.ṭhīvi. Style, fashion; தளுக்கு. |
டு | tu. . The compound of ட் and உ. . |
டூ 1 | ṭū, . The compound of ட் and ஊ. . |
டூ 2 | ṭū, n. An exclamation declaring breach of friendship, indicated by disjoining the ring formed of the fore and middle fingers; சேர்ந்திருக்கும் சுட்டுவிரலையும் நடுவிரலையும் பிரித்துக் காட்டித் தெரிவிக்கும் சினேகமின்மைக்குறிப்பு. அவன் டூ சொன்னான். Child. |
டூவிடு - தல் | tū-viṭu-, v. intr. <>டூ +. To declare breach of friendship; நட்பைவெட்டிடுதல். Child. |
டெ | ṭe. . The compound of ட் and எ. . |
டெங்கணிக்கோட்டை | ṭeṅkaṇi-k-kōṭṭai, n. <>K. deṅkaṇi +. Fort with a bastion provided with a flag-staff; கொடிமரமைந்த மதிலுடன் கூடிய கோட்டை. Loc. |
டெங்கு | ṭeṅku, n. <>E. dengue. See டிங்கிசுரம். Loc. . |
டெண்டர் | ṭeṇṭar, n. <>E. Tender; ஒரு வேலையைக் குறிப்பிட்ட தொகையிற் செய்து முடிப்பதாக உடன்படுஞ் சீட்டு. Colloq. |
டெலிபோன் | ṭelipōṉ, n. <>E. Telephone; மின்சாரத்தின் உதவியால் கம்பிமூலமாக நேரிற் பேசுவதற்கு உதவுங் கருவி. |