Word |
English & Tamil Meaning |
---|---|
தகரவித்தை | takara-vittai, n.<>id. + vidyā. The mystic contemplation of the deity in takarakacam; இறைவனைத் தகராகாசத்தில் வைத்துத் தியானஞ் செய்யும் முறையை உணர்த்தும் வித்தை. ஏய்ந்த் சீர்த்தகரவித்தை முறைப்படி (காஞ்சிப்பு.நகர.119) . |
தகராகாசம் | takarākācam, n.<>id. + ākāṣa. See தகரம், 3. . |
தகராஞ்சிரம் | takarāciram, n. West Indian bead tree; See பெருந்தகரை.(L.) . |
தகரார் | takarār, n.<>Arab. takrar. Colloq. 1. Altercation, objection; ஆக்ஷேபம். 2. Dispute; |
தகரார்பாக்கி | takarār-pākki, n.<>தகரார் +. Doubtful balance, balance objected to; சந்தேக நிலுவைத்தொகை. (W.) |
தகரால் | takarāl, n. See தகரார். Loc. . |
தகராறு | takarāru-, n. See தகரார். Loc. . |
தகரி | takari, n. Pinnate-leaved honey sweet tree, l.tr., meliosma arnottiana ; ஒருவகை மரம் (L.). |
தகரீர் | takarīr, n.<>Arab. taqlil. Percentage or allowance given in former days to superintendents of public works ; முற்காலத்தில் மராமத்து மேற்பார்ப்பவர்களுக்குக் கொடுத்துவந்த தரகு. (C.G.) |
தகரு | takaru, n. Palas tree; புனமுருக்கு. (மலை). |
தகரை | takarai, n.<>tagara. (L.) 1. Fetidcassia, s.sh., cassia tora ; செடிவகை. 2. West Indian bead tree; See பெருந்தகவரை. |
தகல் 1 | takal, n.<>தகு-. 1. Fitness; தகுதி.துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா (நாலடி, 167). 2. A species of glasswort. 3. cf. தகன் A profusely branching prostrate herb. |
தகல் 2 | takal, n. perh. தகையல். Obstruction; தடை. (இலக்.அக.) |
தகல்பாச்சி | takalpācci, n.<>Persn. dagābāzi. Consummate deceiver, cheat; பெரும்புரட்டன். Loc. |
தகல்பாசி | takalpāci, n. See தகல்பாச்சி. தகல்பாசிப் பார்ப்பான் சதமே (விறவிவிடு.765) . . |
தகலக்கட்டு - தல் | takala-k-kaṭṭu-, v. tr. prob. தகலுப்பு +. To cheat any one, as by selling him a bad article; ஏமாற்றுதல். Loc. |
தகலுப்பு | takaluppu,. n.<>U. tagallub. Pretending; cheating; seducing; ஏமாற்றுகை. (W.) |
தகலுபாசி | takalupāci, n. See தகல்பாச்சி. (W.) . |
தகலோன் | takalōn, n.<>தகு-. One who is eminently fitted, suitable or worthy; தகுதியுடையவன். எவரும் புகலத் தகலோன் (திருக்கோ.188). |
தகவல் | takaval, n.<>Arab. dakhal. 1. Information, intimation; செய்தி. ஒரு தகவலும் எனக்கு வரவில்லை. Loc. 2. Citation; illustration, example; 3. Appropriate answer; |
தகவின்மை | takaviṉmai, n.<>தகவு+. 1. Unworthiness, unsuitability; தகுதியின்மை. 2. Injustice, partiality; 3. Trouble, anxiety; |
தகவு | takavu, n.<>தகு-. 1. Suitability, fitness, worthiness; தகுதி. தகவிலை கொல்லோ சம்பாதியென (மணி.6, 138). 2. Similitude, resemblance, comparison; 3. Quality, state, condition, manner; 4. Eminence, greatness; 5. Mercy, kindness; 6.[T. tagavu] Justice, equity, impartiality; 7. Strength, ability; 8. Knowledge, wisdom; 9. Clarity; 10. Chastity; 11. Good behaviour, morality, virtue; |
தகவுரை | taka-v-urai, n.<>தகவு + உரை. Recommendation; சிபார்சு. தன்மார் பிருப்பாள் தகவுரையாலே (அஷ்டப்.நூற்றெட்.78). |
தகவை | takavai, n. A piece of dye; சாயக்கட்டி. மரகதத் தகவையும் (பெருங்.மகத.1, 96). |
தகழி | takaḻī, n.<>sthāli. (M. takai.) 1. Bowl of a lamp; அகல். (திவா.) 2. Plate from which food is eaten, dish; |
தகழிச்சி | takaḻīcci, n. Camphor; கர்ப்பூரம். (மூ.அ.) |
தகளி | takaḷi, n. See தகழி. வையந் தகளியா (திவ்.இயற்.1, 1) . . |
தகன் | takaṉ, n.<>தகு-. 1. Palmyra nnt planted and rooted; வேர்விட்ட பனக்கொட்டை. 2. White pulpy matter in the palmyra nut; 3. cf. A profusely branching prostrate herb. See திராய். (மலை). |