Word |
English & Tamil Meaning |
---|---|
தங்கஞ்சலமாக்கி | taṅka-calam-ākki, n.<>தங்கம் + சலம் + ஆக்கு. Aqua regia; சுவர்ணபேதி. (யாழ்.அக.) |
தங்கணர் | taṅkaṇar, n.<>ṭaṅkaṇa. People of the country of Tanṅkaṇa; தங்கணதேசத்தார். பல்லவருந் தங்கணரும் (பாரதவெண்.773.) |
தங்கப்பாரை | taṅka-p-pārai, n.<>தங்கம் +. 1. Horse mackerel, bluish-green, attaining 8 in. in length, caranx kalla ; எட்டு அங்குல நீளமும் பசிய நீலநிறமுமுள்ள கன்னப்பாரைமீன். 2. Horse mackerel, bluish green, attaining 20 in. in length, Caranx armatus; |
தங்கப்புகைகாட்டு - தல் | taṅka-p-pukai-kāṭṭu-, v. tr. <>id. +. To gild; தங்கமுலாம் பூசுதல். (W.) |
தங்கப்பூச்சு | taṅka-p-pūccu, n.<>id. +. Gilding, gilt; பொன்முலாம். Colloq. |
தங்கபற்பம் | taṅka-paṟpam, n.<>id. +. Calcinated powder of gold; தங்கத்தினாற்செய்த பற்பம். |
தங்கம் | taṅkam, n. (M. taṅkam.) 1. Pure gold; பசும்பொன். தங்கத்தானை . . . அரங்கனை (அஷ்டப். திருவரங்கத்தந். 11). 2. That which is precious, of great worth; 3. See தங்கக்கட்டி. |
தங்கம்வெள்ளை | taṅkam-veḷḷai, n.<>தங்கான் +. Slang for half a rupee, in use among shroffs in Madras; சென்னையில் அரைரூபாயைக்குறிக்க வழங்கும் குழூக்குறி. |
தங்கமலாம் | taṅka-malām, n.<>தங்கம் +. See தங்கமுலாம். (w.) . |
தங்கமிடு - தல் | taṅkam-iṭu-, v. intr. <>id. +. To chisel gold for insetting gems; இரத்தினங்கள் பதியுநாறு தங்கரேக்கு அழுத்துதல். Nā. |
தங்கமிருதியாதி | taṅka-mirutiyāti, n. prob. id. See தங்கபற்பம்.(J.) . |
தங்கமுலாம் | taṅka-mulām, n.<>id. +. See தங்கப்பூச்சி. Colloq. . |
தங்கரி - த்தல் | taṅkari-, 11 v. tr. of. saṅgrah. (M. taṅkarikka.) Loc. 1. To keep in safe custody; பத்திரமாய் வைத்தல். 2. To make a saving; |
தங்கரியம் | taṅkariyam, n.<>தங்கரி-. Tinn. 1. Safety, safe custody; பத்திரம் 2. Savings; |
தங்கரேக்கு | taṅka-rēkku, n.<>தங்கம் +. Gold leaf; தங்கத்தாலியன்ற மிகமெல்லிய தகடு. தங்கரேக்காற் சமைத்திட்ட (தனிப்பா. i, 378, 21) . |
தங்கல் | taṅkal, n.<>தங்கு-. 1. Stopping, halting, resting; தங்குகை. 2. Delay, procrastination; 3.[M.taṅkal.] Halting place, rest-house; 4. Stage in a journey; 5. Persistence, stability; 6. Precipitate; sediment; |
தங்கலர் | taṅkalar, n.<>id. + அல் neg. +. Enemies; பகைவர். தங்கலரென்னு மச்சூர்க்குலம் வீட்டி (திருப்போ.சந்.குறுங்கழி.8, 8). |
தங்கலரி | taṅkalari, n.<>தங்கம் +. 1. Pagoda tree; See ஈழத்தலரி. 2. Exile oleander; |
தங்கலான் | taṅkalāṉ, n. See தங்களான். (E.T.vii,12.) . |
தங்கவராகன் | taṅka-varākaṉ, n.<>தங்கம் +. Pagoda, a gold coin = 3 1/2 rupee ; 31/2 ரூபாய் பெறுமான வராகன் என்னும் பொன்னாணயம். |
தங்கவாழைப்பூ | taṅka-vāḻai-p-pū, n. A kind of saree; புடைவைவகை . Loc. |
தங்கள் 1 | taṅkaḷ, pron. <>தாம். 1. Yours; உங்களுடைய. 2. See தம். தாயர் தங்கள் (கம்பரா. மீட்சி. 344). 3. Epistolary formula preceding signature; |
தங்கள் 2 | taṅkaḷ, n. Head-priest of a mosque; மகமதியக் குருக்கள். Loc. |
தங்களான் | taṅkaḷāṉ, n. 1. Title of a Marava subsect; மறவருள் ஒரு பிரிவினர்க்குரிய பட்டப்பெயர். Loc. 2. The highest of the three divisions of the paṟaiya; caste; 3. Head-man of the paṟaiyar , who settles caste-dispute; 4. Servant of the paṟaiyar caste; |
தங்காள் | taṅkāl, n.1. cf. தங்கை. 1. Younger sister; தங்கை. 2. A honorific term, meaning madam; |
தங்கான் | taṅkāṉ, n. 1. Slang for half; அரையென்னுங் குழூஉக்குறி. சொந்தலை கருந்தலை தங்கான்றிரிக்கால் (தனிப்பா. i, 87, 171.) 2. Cost price; |