Word |
English & Tamil Meaning |
---|---|
தசகூலி | taca-kūli, n.<>id. +. Ten kinds of wages paid in agricultural operations ; பயிரிடுந் தொழிலிற் கொடுக்கும் பத்துவகையான கூலி. (சங்.அக.) |
தசசீலம் | taca-cīlam, n.<>id. +. (Buddh.) The ten kinds of moral and austere practices prescribed for Buddhist ascetics ; பௌத்தத்துறவிகளுக்குரிய பத்துவகையான ஒழுக்க நியதிகள். (மணி.21, 57, உரை) . |
தசதானம் | taca-tāṉam, n.<>id. +. Gifts to Brahmins made on ceremonial occasions, of ten kinds, viz., pacu, pūmi, eḷ, po ney, aṭai, vellam, nel, veḷḷi, uppu ; பிராமணர்க்கு விசேடகாலங்களிற் கொடுக்கும் பசு, பூமி, எள், பொன், நெய், ஆடை, வெல்லம், நெல், வெள்ளி, உப்பு என்ற பத்துவகைத் தானங்கள் . |
தசதிக்கு | taca-tikku, n.<>id. +. The ten regions of the earth, comprising the eight directions and the upper and the lower regions ; நான்குபெருந்திசைகளும் நான்குகோணத்திசைகளும் மேலுங் கீழும் ஆகிய பத்துத் திக்குகள். |
தசநவம் | tacanavam, n. perh. Dašārṇa. A country; ஒரு தேசம். தசநவப்பெயர். அகணி நாடு . . . . (கம்பரா.ஆறுசெல்.16.) |
தசநாடி | taca-nāṭi, n.<>dašan +. The ten tubular vessels of the human body, believed to be the principal channels of the vital spirit, viz., itai, pinkalai, cuḻumu ṉai, kāntāri, atticiṅkuvai, caṅki ṅi, pūṭā, kuku, kaṉṉi, alampuṭai ; இடை, பிங்கலைபூ, சுழமுனை, காந்தாரி, அத்திசிங்குவை, அசங்கினி, டா, குகு, கன்னி, அலம்புடையெனப் பத்து வகைப்பட்டுப் பிராணவாயு இயங்குதற்குரிய வழியாகிய நாடிகள். (சிலப்.3, 26, உரை.பக்.84) . |
தசப்பிரசாபதி | taca-p-piracāpati, n.<>id. +. Lords of created beings, numbering ten, viz., Marīci, Attiri, Aṅkiracu, pulastiyar, pulakar, kiratu, vacišṭar, Takšar, piruku, Nāratar ; மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், புலகர் கிரது, வசிஷ்டர், தக்ஷர் பிருகு, நாரதர் என்ற பத்து உபப்பிரமர்கள் (சி.சி.2, 29, சிவாக்) . |
தசப்பிராதுற்பவம் | taca-p-pirā tuṟpavam, n.<>id. + prādurbhāva. Poem celebrating the ten avatars of Viṣṇu ; திருமாலின் பத்துவதாரங்களைப்பற்றிக் கூறும் நூல் . |
தசப்பொருத்தம் | taca-p-poruttam, n.<>id. +. (Astrol.) The ten kinds of kaliyāṇa-p-poruttam , q.v. ; பத்துவகைக் கலியாணப் பொருத்தங்கள். (பஞ்சாங்.) |
தசபந்தம் | taca-pantam, n.<>id. + bhandha. 1. Deduction of 1/10 of the land-tax to compensate for some public work, as the construction of a tank; செலுத்தவேண்டும் வரியிற் பத்திலொன்றை குளம்வெட்டல் முதலிய பொதுத்தருமங்களை நடத்தும் பொருட்டு நீக்குகை. (W. G.) 2. See தசபந்தவினாம் . |
தசபந்தவினாம் | taca-panta-v-iṉām, n.<>id. +. Grant of land at a favourable assessment of grant of land-revenue, given on account of some work of public utility rendered by the grantee ; பொதுத்தருமங்களை நடத்தற்காகத் தீர்வை குறைத்து விடப்பட்ட மானியம். (C. G.) |
தசபலன் | taca-palaṉ, n.<>id. + bala. Buddha, as fortified by taca-pāramitai ; (தசபார மிதையால் வன்மையுடையான்) புத்தன். (மணி.29, 26, உரை.) |
தசபாரம் | taca-pāram, n.<>id. +. See தசபாரமிதை. . |
தசபாரமிதை | taca-pāramitai, n.<>id. +. (Buddh.) The ten transcendental virtues necessary for Buddhahood, viz., tā ṉam, cīlam, kṣamai, vīriyam, tiyāṉam, piraai, upāyam, tayai, palam, ām; āṉ புத்தபதவிக்குரிய தானம், சீலம், க்ஷமை, வீரியம், தியானம், பிரஞ்ஞை, உபாயம், தயை, பலம் , ஞானம் என்ற பத்துக்குணவிசேடங்கள். (மணி.26, 45, உரை) . |
தசபின்னம் | taca-piṉṉam, n.<>id. +. See தசாமிசம். Mod. . |
தசம் 1 | tacam, n. Palanquin; சிவிகை. (சது.) |
தசம் 2 | tacam, n.<>dašan. Ten; பத்து தசநான் செய்திய பணைமரு ணோன்றோள் (நெடுநல்.115). |