Word |
English & Tamil Meaning |
---|---|
அற்றூரம் | aṟṟūram n. Tree turmeric. See மரமஞ்சள். . |
அற்றேல் | aṟṟēl conj <>அற்று+ஏல். If so; அப்படியானால். |
அற்றை | aṟṟai <>அன்று. adv.; On that day; அன்றைத்தினத்தில். அற்றை வெஞ்சமரில் (பாரத. பதினேழா. 2 ) 1. Of that day; 2. Daily; 3. Little, trifling; |
அற்றைக்கூலி | aṟṟai-k-kūli n. <>id.+. Daily wages; நாட்கூலி. |
அற்றைநாள் | aṟṟai-nāḷ n. <>id.+. That day; அன்று. யான் காவல்பூண்ட வற்றைநாண் முதலா (அரிச். பு. விவாக. 29). |
அற்றைப்பரிசம் | aṟṟai-p-paricam n. <>id.+. Daily hire of a harlot; விலைமாதர் அன்றன்று பெறுங் கூஈலி. (சிலப். 5, 51. உரை.) |
அற்றைப்பிழைப்பு | aṟṟai-p-piḻaippu n. <>id.+. Living from hand to mouth, poor living; அன்றன்று செய்யும் சீவனம். |
அற | aṟa adv. <>அறு1-. 1. Wholly, entirely, quite; முழுதும். வகையறச் சூழாது (குறள். 465). 2. Intensely, excessively; 3. Clearly; 4. Thoroughly; |
அறக்கடவுள் | aṟa-k-kaṭavuḷ n. <>அறம்+. 1. Yama, the Judge; யமன். (பாரத. நாடுகரந். 3.) 2. The God of virtue personified; |
அறக்கடை | aṟa-k-kaṭai n. <>id.+. Sin; பாவம். அறக்கடை தணப்ப (காஞ்சிப்பு. பதிக. 4). |
அறக்கப்பறக்க | aṟakka-p-paṟakka adv. redupl. of பற-. 1. With flurry, with might and main; விழுந்து விழுந்து. அறக்கப்பறக்கப் பாடுபட்டும் படுக்கப் பாயில்லை. 2. In great haste; |
அறக்கருணை | aṟa-k-karuṇai n. <>அறம்+. Divine grace, opp. to மறக்கருணை; அனுக்கிரக ரூபமான கருணை. |
அறக்கழிவு | aṟa-k-kaḻivu n. <>id.+. Inconsistency with the practice of the world; உலக வழக்கத்திற்குப் பொருத்த மில்லாமை. அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின் (தொல். பொ. 218). |
அறக்களவழி | aṟa-k-kaḷa-vaḻi n. <>id.+. (Puṟap.) Theme of agriculture; வேளாண்டொழிலைக் கூறும் புறத்துறை. (மாறன. 120, உரை.) |
அறக்களவேள்வி | aṟa-k-kaḷa-vēḷvi n. <>id.+. Vedic sacrifice, opp. to மறக்களவேள்வி; யாகச்செயல். (சிலப். 28, 131.) |
அறக்கற்பு | aṟa-k-kaṟpu n. <>id.+. Chastity unobtrusive, opp. to மறக்கற்பு; சாந்த நிலையமைந்த கற்பு. (சிலப். பதி. 42. உரை.) |
அறக்காடு | aṟa-k-kāṭu n. <>id.+. Burning ground; சுடுகாடு. (W.) |
அறக்குளாமீன் | aṟakkuḷā-mīṉ n. See அர்க்குளா. (W.) |
அறக்கூர்மை | aṟa-k-kūrmai n. <>அற+. Excessive sharpness; மிக்க கூர். அறகூர்மை முழுமொட்டை. |
அறக்கொள்(ளு) - தல் | aṟa-k-koḷ- v. tr. <>id.+. To receive in full; முழுதும் பெறுதல். விலைத்திரவியமும் இறைத்திரவியமும் அறக்கொண்டு (S.I.I.iii, 16). |
அறங்கடை | aṟaṅ-kaṭai n. <>அறம்+. Sin; பாவம். அறங்கடை நில்லாது (மணி. 11, 113). |
அறங்கூறவையம் | aṟaṅ-kūṟavaiyam n. <>id.+ கூறு+அவையம். Place where justice is administered; நியாயசபை. அறங்கூ றவையத் துரை நீல் கோடி (சீலப். 5, 135). |
அறங்கை | aṟaṅkai n. <>அகங்கை. Palm of hand; உள்ளங்கை. அறங்கையும் புறங்கையும் நக்குகிறது. (W.) |
அறச்சாலை | aṟa-c-cālai n. <>அறம்+. Alms-house, feeding house; தருமசாலை. (தணிகைப்பு. அகத். 340.) |
அறச்செட்டு | aṟa-c-ceṭṭu n. <>அற+. Excessive frugality, parsimony; கடுஞ்செட்டு. அறச்செட்டு முழுநஷ்டம். |
அறணை | aṟaṇai n. Purple-stalked dragon. See காட்டுக்கருணை. (மூ.அ.) |
அறத்தவிசு | aṟa-t-tavicu n. <>அறம்+. Judge's seat in court; நியாயாதிகாரியின் பீடம் அறத்தவி சிருப்போ ரேவலாடவ ரோடும் போந்து (திருவிளை. மாமனா. 17). |
அறத்தின்செல்வி | aṟattiṉ-celvi n. <>id.+. Goddess of virtue; தருமதேவதை. (பிங்.) |
அறத்தின்சேய் | aṟattiṉ-cēy n. <>id.+. Dharmaputra, the son of Dharma; தருமன். (சூடா.) |
அறத்துணைவி | aṟa-t-tuṇaivi n. <>id.+ Wife, virtuous helpmate; தருமபத்தினி. |
அறத்துறுப்பு | aṟattuṟuppu n. <>id.+ உறுப்பு. Constituent parts of virtue of which the principal are eight, viz., ஐப்படாமை, விருப்பின்மை, வெறுப்பின்மை, மயக்கமின்மை, பழியை நீக்கல், அழிந்தோரை நிறுத்தல், அறம்விளக்கல், பேரன்புடைமை. (சூடா.) |
அறத்துறை | aṟa-t-tuṟai n. <>id.+. Path of virtue; தருமமார்க்கம். அறத்துறை யறிந்தநீ (பாகவ.1, 8, 40). |