Word |
English & Tamil Meaning |
---|---|
அறத்தைக்காப்போன் | aṟattai-k-kāppōṉ n. <>id.+. Aiyanār, protector of virtue; ஐயனார். (பிங்.) |
அறத்தொடுநிலை | aṟattoṭu-nilai n. See அறத்தொடு நிற்றல் (நம்பியகப். 47.) |
அறத்தொடுநிற்றல் | aṟattoṭu-niṟṟal n. <>அறம்+. (Akap.) Revealing by successive steps to the parents of the heroine her secret union; களவினைத் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை. (தொல். பொ. 206.) |
அறநிலை | aṟa-nilai n. <>id.+. A form of marriage. See பிரமம். (இறை, 1. 21.) |
அறநிலைப்பொருள் | aṟa-nilai-p-poruḷ n. <>id.+. Proper assessment claimed by the sovereign; நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள். (திவா.) |
அறநிலையறம் | aṟa-nilai-y-aṟam n. <>id.+. Maintenance by the king of the observance of caste rules by the four castes; நால்வகை வருணத்தாரும் தத்தம் நெறியிற் பிழையாது அரசன் பாதுகாக்கை. (பிங்.) |
அறநிலையின்பம் | aṟa-nilai-y-iṉpam n. <>id.+. Domestic happiness secured by marrying a suitable woman; ஒத்தகன்னியை மணந்து இல்லறத்தினின்று அனுபவிக்கும் இன்பம். (பிங்.) |
அறநூல் | aṟa-nūl n. <>id.+. Code of laws, treatise on civil and religious duties; தருமசாத்திரம். (குறள். 338, உரை.) |
அறநெறி | aṟa-neṟi n. <>id.+. Path of virtue; தருமமார்க்கம். (நாலடி. 172.) |
அறநெறிச்சாரம் | aṟa-neṟi-c-cāram n. <>id.+. Name of a poem on the path of virtue, by Muṉaippāṭiyār; ஒரு நீதிநூல். |
அறப்பளீசுரசதகம் | aṟappaḷīcura-catakam n. A poem of 100 stanzas on virtue by Ampala-vāṇa-k-kavirāyar; ஒரு நூல். |
அறப்பாடல் | aṟa-p-pāṭal n. அறு1-+. Verse containing words or letters which bring ruin or death to a person; கேடு விளைக்கும் சொற்பயிலும் பாட்டு. (W.) |
அறப்பார் - த்தல் | aṟa-p-pār- v. tr. <>id.+. 1. To examine thoroughly; தீர ஆராய்தல். 2. To take measures to ruin a person; |
அறப்புறங்காவல் | aṟa-p-puṟaṅ-kāval n. <>அறம்+. Protection of endowments of land for religious and social charities; தருமத்துக்கு விடப்பட்ட பூமிகளைப் பாதுக்காக்கை. அறப்புறங்காவ னாடுகாவலென (நமபியகப். 72). |
அறப்புறம் | aṟa-p-puṟam n. <>id.+. 1. Sin; பாவம். அறப்புறத்தினார் புரம்பொடித்த (திருவிளை. தண்ணீர்ப். 9). 2. Lands endowed for charitable purposes and exempted from assessment, charitable endowments; 3. Alms-house, feeding, house; 4. Place where the Vēdas are taught; |
அறபு | aṟapu n. <>U.arab. Arabic; அறபிபாஷை. Loc. |
அறம் | aṟam n. <>அறு1-. [K.aṟa, M.aṟam.] 1. Moral or religious duty, virtue, performance of good works according to the Sāstras, duties to be practised by each caste; தருமம். (பிங்.) 2. Merit; 3. That which is fitting, excellent; 4. Religious faith; 5. Wisdom; 6. Feeding house; 7. Fasting 8. Letters or words in a verse which cause harm; 9. Goddess of virtue; 10. Yama; |
அறம்பாடு - தல் | aṟam-pāṭu- v. intr. <>id.+. To compose verse which contains letterss or words that cause harm; தீச்சொற்பட்டுத் தீப்பயனுண்டாகப் பாடுதல். Colloq. |
அறல் | aṟal n. <>அறு1-. 1. Becoming detached by cutting; அறுகை. 2. Flowing water; 3. Laving; 4. Water; 5. Wave, ripple; 6. Blacck sand found on the sea-shore; 7. Curl; 8. Low jungle; 9. Happiness, prosperity; |
அறவழக்கம் | aṟa-vaḻakkam n. <>அறம்+. Moral or religious instruction; தருமோபதேசம். அருளிருந்த திருமொழியா லறவழக்கங் கேட்டிலமால் (வீரசோ. யாப். 15, உரை.) |
அறவன் | aṟavaṉ n. <>id. 1. One who is virtuous; தருமவான். அறவனீ யல்லையோ (திருவிளை. தண்ணிர்ப். 36). 2. God; 3. Buddha; 4. Sage, ascetic; 5. Brāhman; |