Word |
English & Tamil Meaning |
---|---|
அறாக்கட்டை | aṟā-k-kaṭṭai n. <>அறு1-+. 1. Fool; மூடன். Madr. 2. Miser; |
அறாட்டுப்பறாட்டு | aṟāṭṭu-p-paṟāṭṭu n. See அராட்டுப் பிராட்டு. (திவ். திருவிருத். 23, வ்யா.) |
அறாமி | aṟāmi n. <>U. harāmī. 1. That which is wicked, vicious, also said of persons; துஷ்டசுபாவமுள்ளது. 2. Restive, ill-tempered horse; |
அறாமை | aṟāmai n. Species of Trichodesma. See கவிழ்தும்பை. (மலை.) |
அறாயிரம் | aṟāyiram n. <>ஆறு+ஆயிரம். The number 6,000; ஆறாயிரம். (தொல். எழுத். 469, உரை.) |
அறாவழக்கு | aṟā-vaḻakku n. <>அறு1-+. Endless dispute; முடிவுக்கு வாராத வாதம். கொட்டை முந்தினதோ பனை முந்தினதோ என்கிற அறாவழக்கிலே (சிவப்பிர. பொது. 23, உரை, பக். 235). |
அறாவிலை | aṟā-vilai n. <>id.+. Exorbitant price; அளவுக்கு மேற்பட்ட விலை. (W.) |
அறாவு - தல் | aṟāvu- 5 v.tr. To strike, beat, whip; அடித்தல். மத்திகையினா லறாவி. (சீவக. 703). |
அறி 1 - தல் | aṟi- 4 v.tr. [T. eṟugu, K. M. aṟi.] 1. To know, understand, comprehend, recognise, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; 3. To prize, esteem; 4. To experience; 5. To know by practice, to be a accustomed to; 6. To ascertain, determine, decide; |
அறி 2 | aṟi n. <>அறி-. Knowledge; அறிவு. அறிகொன் றறியா னெனினும் (குறள், 638). |
அறிக்கை | aṟikkai n. <>அறிவி-. 1. Notice; அறிவிப்பு. தானற வுயர்ந்ததுன்பந் தனைநினக் கறிக்கை செய்ய (வேதாரணி. பரஞ்சோ. மணவாளச். 33). 2. Confession; |
அறிக்கைப்பத்திரம் | aṟikkai-p-pattiram n. <>அறிக்கை+. 1. Advertisement, notification, written notice, proclamation; எழுத்து மூலமான விளம்பரம். (W.) 2. Report; |
அறிக்கைபண்ணு - தல் | aṟikkai-paṇṇu- v. tr <>id.+. 1. To notify, inform; விளம்பரப்படுத்துதல். 2. To confess; |
அறிக்கையிடு - தல் | aṟikkai-y-iṭu- v. tr. See அறிக்கைப்பண்ணு-. . |
அறிக்கையோலை | aṟikkai-y-ōlai n. <>அறிக்கை+ Letter, as written on ōla or palm leaf; சமாசாரக்கடிதம். (குருபரம். 277.) |
அறிக்கைவாசி - த்தல் | aṟikkai-vāci- v. intr. <>id.+. To publish banns of marriage; விவாகவிளம்பரஞ்செய்தல். Chr. |
அறிகரி | aṟi-kari n. <>அறி-+ Eye-witness, one who has personal knowledge; பிரத்தியட்சசாட்சி. அங்கியங் கடவுள் அறிகரி யாக (தொஇல்.பொ.142,உரை.) |
அறிகருவி | aṟi-karuvi n. <>id.+. Organs of sense; ஞானேந்திரியம். அறிகருவி யணையா (சிவப். பிர. பொது. 21). |
அறிகுறி | aṟi-kuṟi n. <>id.+. Mark, token, symbol; அடையாளம். திங்கண்மாட் டறிகுறியொன்று செய்து (காஞ்சிப்பு. நகர. 85). |
அறிஞன் | aṟiaṉ n. <>id. 1. Man of knowledge, wise man; அறிவுடையோன். (கந்தபு. வச்சிரவா. 61). 2. Poet, learned man; 3. Sage; 4. The planet Mercury; |
அறிதுயில் | aṟi-tuyil n. <>id.+. A state of sleep in which the person is conscious of the outer world; யோகநித்திரை. ஆடக மாடத் தறிதுயிலமர்ந்தோன். (சிலப். 26, 62). |
அறிதுயிலமர்ந்தோன் | aṟi-tuyil-amarntōṉ n. <>id.+. Viṣṇu, who during his sleep is conscious of the universe; திருமால். (பிங்.) |
அறிநன் | aṟinaṉ n. <>id. One who knows; அறிபவன். கோடியர் தலைவ கொண்டதறிந (பொருந. 57). |
அறிப்பலம் | aṟippalam n. Long pepper. See திப்பலி. (மலை.) |
அறிப்பு | aṟippu n. <>அறி-. Comprehension; உணர்கை. அறிப்புறும்மமு தாயவன் (தேவா. 1042, 4). |
அறிபொருள்வினா | aṟi-poruḷ-viṉā n. <>id.+. Question of one who knows the answer for eliciting whether the person questioned understands differently or for teaching; அறியப்பட்டபொருளை ஒரு பயன் நோக்கிக் கேட்குங் கேள்வி (தொல். சொல். 13, சேனா.) |
அறிமடம் | aṟi-maṭam n. <>id.+. 1. Assumed ignorance; அறிந்து மறியாதுபோன் றிருக்கை. (சூடா.) 2. Innocence of childhood; |