Word |
English & Tamil Meaning |
---|---|
அறிமுகம் | aṟi-mukam n. <>id.+. 1. Familiar face; தெரிந்தமுகம். அறிமுகம்பிற காண்கிலே னடுத்தவூ ரறியேன் (சேதுபு. விதூம. 99). 2. Acquaintance; |
அறியக்கொடு - த்தல் | aṟiya-k-koṭu- v. tr. <>id.+. 1. To communicate information to, instruct; தெரிவித்தல். 2.To inform against, indict, impeach; |
அறியலுறவு | aṟiyal-uṟavu n. <>id.+. Desire to know; அறிதற்கண் விருப்பம். (தொல். சொல். 13. சேனா.) |
அறியாக்கரி | aṟiyā-k-kari n. <>id.+. False evidence; பொய்ச்சாட்சி. அறியாக்கரி பொய்த்து (சிலப். 15, 78). |
அறியாமை | aṟiyāmai n .<>id. i Ignorance; மடமை. (குறள், 1110.) |
அறியாவினா | aṟiyā-viṉā n. <>id.+. Question for information or knowledge or removal of doubt, as one put by the pupil to the teacher; தெரியாததொன்றைத் தெரிதற்குக் கேட்குங் கேள்வி. (நன். 385, உரை.) |
அறியான்வினா | aṟiyāṉ-viṉā n. See அறியாவினா. (தொல். சொல். 13, சேனா.) |
அறியுநன் | aṟiyunaṉ n. <>அறி-. One who knows or understands; உணருகிறவன். அறியுநராவி போழு மம்பு (சீவக. 1572). |
அறிவர்சிறப்பு | aṟivar-ciṟappu n. <>id.+. Worship of the Wise Ones, as Arhats; இறைவர்பூசனை. நற்றானஞ் சீல நடுங்காத் தவமறிவர் சிறப்பு. (சீவக. 1545) |
அறிவரன் | aṟivaraṉ n. <>id.+. One who excels in wisdom; அறிவிற் சிறந்தவன். (சீவக. 1246.) |
அறிவழி 1 - தல் | aṟivaḻi- v. intr. <>அறிவு+அழி1-. To lose one's reason, to be bereft of sense, be infatuated; மதிமயங்குதல். |
அறிவழி 2 | aṟivaḻi n. <>id.+ அழி2-. 1. Intoxicating liquor which destroys reason; மது. (யாழ். அக.) 2. Devil; |
அறிவறிவாக | aṟivaṟivāka adv. <>id.+ அறிவு+ஆ-. So as to ascertain the minutest details; விவரமாய்த் தெரிந்துகொள்ளும்படி. மரியாதைகளும் அறிவறிவாக விசாரித்து (கோயிலொ. 42). |
அறிவறைபோ - தல் | aṟivaṟai-pō- v. intr. <>id.+ அறைபோ-. To undermine one's knowledge; அறிவு கீழற்றுப்போதல். (சிலப். 20. 25.) |
அறிவன் | aṟivaṉ n. <>id. 1. Man of knowledge, wise man, sage; நல்லறிவுடையான். (கந்தபு. மார்க்கண். 259) 2. Arhat; 3. Buddha; 4. The planet Mercury; 5. The planet Mars; 6. Astrologer and priest; 7. Artisan |
அறிவனார் | aṟivaṉār n. <>அறிவன். The author of the Paca-marapu; பஞ்சமரபு நூலாசிரியர். (சிலப். 6. 35. உரை.) |
அறிவனாள் | aṟivaṉāḷ n. <>id.+ நாள். The 26th nakṣatra; உத்தரட்டாதி. (திவா.) |
அறிவாகரன் | aṟivākaraṉ n. <>அறிவு+ ā-kara. One who is the repository of knowledge, person of profound knowledge; ஞானத்திற்கு இருப்பிடமாக உள்ளவன். (W.) |
அறிவாளி | aṟivāḷi n. <>id.+ ஆள்-. Wise or intelligent person; புத்திசாலி. |
அறிவி - த்தல் | aṟivi- v. tr. caus. of அறி- 1. to make known, relate, communicate; தெரிவித்தல். 2. To publish, announce; |
அறிவிக்கை | aṟivikkai n. See அறிவிப்பு. . |
அறிவிப்பு | aṟivippu n. <>அறிவி-. Notice, publication; விளம்பரம். Colloq. |
அறிவிலி | aṟivili n. <>அறிவு+இல்-மை. Ignorant person, fool; அறிவில்லாதவன். (கம்பரா. மந்தரை. 67.) |
அறிவினா | aṟiviṉā n. <>அறி-+ Question for the purpose of testing, as one put by the teacher to the pupil; அறிந்து கேட்குங் கேள்வி. (நன்.285,உரை.) |
அறிவீனம் | aṟivīṉam n. <>அறிவு+ hīna. Ignorance; மடமை. Colloq. |
அறிவு | aṟivu n. <>அறி-. 1. knowledge, wisdom; ஞானம். 2. Intelligence; 3. Perception by the senses; 4. Soul; 5. Learning, erudition; 6. Things which it is necessary to know; |
அறிவுகேடன் | aṟivu-kēṭaṉ n. <>அறிவு+. Ignorant, unwise person; ஞானமற்றவன். (ஈடு.) |
அறிவுகொளுத்து - தல் | aṟivu-koḷuttu- v. intr. <>id.+. To impart instruction, teach, advise; புத்திபுகட்டுதல். |
அறிவுநூல் | aṟivu-nūl n. <>id.+. Sacred writings, books of true knowledge, dist. fr. உலகநூல்; ஞானசாத்திரம். அறிவுநூல் கல்லா துலகநூலோதுவ தெல்லாம் (நாலடி. 140). |
அறிவுபிற - த்தல் | aṟivu-piṟa- v. intr. <>id.+. 1. To find knowledge dawn in the mind, to become enlightened; ஞானமுண்டாதல். 2. To be restored to consciousness; |