Word |
English & Tamil Meaning |
---|---|
அறுகு | aṟuku n. 1. porb. அறு1-. [T.garika, K.gari, M. kaṟuka.] Harialli grass, flowering all the year round and growing almost everywhere throughout India, used in ceremonies, Cynodon dactylon; அறுகம்புல். அறுகாற் பீடுயர் முடியார் (திருவிளை. பாயி. 30). 2. Lion; 3. An extinct animal. See யானையாளி. 4. Tiger; |
அறுகுணன் | aṟu-kuṇaṉ n. <>அறு3+. The deity, as having six attributes. See பகவன். (W.) |
அறுகுதராசு | aṟuku-tarācu n. <>அறுகு+. Delicate balance for weighing precious metals and medicine; சிறுதராசு. |
அறுகுறை | aṟu-kuṟai n. <>அறு1-+. Headless body; கவந்தம். ஆடின வறுகுறை யலகைகளுடனின்று (பாரத. நிவாத. 141). |
அறுகை | aṟukai n. <>அறுகு. Cynodon grass. See அறுகு. அறுகையு நெருஞ்சியு மடர்ந்து (மணி. 12, 60). |
அறுகோணம் | aṟu-kōṇam n. <>ஆறு3+. Hexagon; ஆறுமூலை கொண்ட வடிவம். (சி.சி.2,67.) |
அறுசமயம் | aṟu-camayam n. <>id.+. The six religious systems which are considered to be Vedic, viz., சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம். |
அறுசரம் | aṟu-caram n. <>id.+sara. Lute, as a six-stringed instrument; யாழ். (திவா.) |
அறுசுவை | aṟu-cuvai n. <>id.+. The six flavours, viz., கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு; ஷட்ரஸம், அறுசுவையுண்டி (நாலடி. 1). |
அறுத்தவள் | aṟuttavaḷ n. <>அறு2-. Widow, as one whose tāli, 'marriage badge', has been removed; விதவை. |
அறுத்திசைப்பு | aṟutticaippu n. <>id.+ இசை2-. (Pros.) Fault which consists in introducing in a verse of one metre the rhythm of other metres; வேற்றிசை கலந்துவரும் ஒருவகை யாப்புவழு. (யாப்.வி. 95, பக்.403.) |
அறுத்திடல் | aṟuttiṭal n. <>id.+. Extirpation of desire; அவாவறுக்கை. (சூடா.) |
அறுத்துக்கட்டு - தல் | aṟuttu-k-kaṭṭu- v. intr. <>id.+. To remarry, in the case of castes that allow remarriage of widows and divorced wives, as removing the tāli, 'marriage badge', tied by a former husband and having a new one tied by another; தாலி நீங்கியபின் மறுதாலி கட்டி மணத்தல். |
அறுத்துப்பேசு - தல் | aṟuttu-p-pēcu- v. tr. <>id.+. To speak conclusively, definitely; தீர்மானமாகச் சொல்லுதல். |
அறுத்துமுறி | aṟuttu-muṟi n. <>id.+. Divorce; மனைவியைத் தள்ளிவிடுகை. Loc. |
அறுத்துரை - த்தல் | aṟutturai- v. tr. <>id.+ உரை2-. 1. To speak positively, definitely; வரையறுத்துச் சொல்லுதல். 2. To interpret by breaking up a sentence and making a sub-ordinate clause a principal one; |
அறுத்துவிட்டவள் | aṟuttu-viṭṭavaḷ n. <>id.+. Widow, who is deprived of her tāli, 'marriage badge'. தையனாயகி நாராயணசாமியினுடைய அறுத்துவிட்டவள். Loc. |
அறுத்தோடி | aṟuttōṭi n. <>id.+ ஒடு-. Gully, as worn by water in a bund; அரித்தோடும் நீரோட்டம். |
அறுதலி | aṟu-tali n.<>id.+ தாலி. Widow as one whose tāli, 'marriage badge', has been removed; விதவை. அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம் சேஷ்டை. |
அறுதி | aṟuti <>அறு1- n. 1. End, close, termination; முடிவு. அறுதி யாகவின் றருஞ்சமர் முடித்தும் (பாரத. பதினெட். 46). 2. Finality, as in a sale. See அறுதிக்கிரயம். 3. Being unconditioned, as a lease; 4. Destruction; 5. Non-existence; 6. Limit; 7. Possession, ownership, right; Until; |
அறுதிக்கரை | aṟuti-k-karai n. <>அறுதி+. Kind of land tenure in which the distribution was final or absolute, and in which all lands once held by a village community jointly were distributed amongst the members permanently, each member receiving a definite share which became his absolute proper நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பெறும் முறை. (C.G.) |
அறுதிக்களநடை | aṟuti-k-kaḷa-naṭai n. <>id.+. Annual account for the income of paddy; வருஷாந்தர நெற்கணக்கு. Loc. |
அறுதிக்கிரயம் | aṟuti-k-kirayam n. <>id.+. Absolute or final sale; முடிவான கிரயம். |
அறுதிச்சாதனம் | aṟuti-c-cātaṉam n. <>id.+. Deed of transfer; கிரயபத்திரம். (W.) |
அறுதிச்சீட்டு | aṟuti-c-cīṭṭu n. See அறுதிச்சாதனம். (W.) |