Word |
English & Tamil Meaning |
---|---|
அறிவுபுகட்டு - தல் | aṟivu-pukaṭṭu- v. intr. <>id.+. To give instruction, impart knowledge, advise; அறிவூட்டுதல். |
அறிவுமடம்படு - தல் | aṟivu-maṭam-paṭu- v. intr. <>id.+. To assume ignorance esp. in the midst of the less enlightened; அறிந்தும் அறியான்போன் றிருத்தல். (சிறுபாண். 216.) |
அறிவுமயங்கு - தல் | aṟivu-mayaṅku- v. intr. <>id.+. 1. To faint, lose consciousness by swooning, by fits, by sleep, by approach of death; பிரஞ்ஞை தவறுதல். 2. To be stunned or bewildered; |
அறிவுறால் | aṟivuṟāl n. <>id.+. Informing, making known; அறிவுறுத்துகை. நாமறிவுறாலிற் பழியு முண்டோ (குறிஞ்சிப். 22). |
அறிவுறு - தல் | aṟivuṟu- <>id.+. உறு-. v.tr.; v.intr. To know; To wake from sleep; அறிதல்.; துயிலெழுதல். கிடந்துறங்குஞ் சீரிய சிங்க மறிவுற்று (தி. திருப்பா. 23). |
அறிவுறுத்து - தல் | aṟivuṟuttu- <>id.+. உறுத்து-. v.tr.; v.intr. To make known, inform; To give instruction; தெரிவித்தல்.; அறிவு புகட்டுதல். |
அறிவை | aṟivai n.. <>aRi-. Wisdom; ஞானம். அறிவையென்னு மமுதவாறு (திவ். பெரியாழ். 5, 4, 2) |
அறிவொப்புக்காண்டல்வினா | aṟivoppu-k-kāṇṭal-viṉā n. <>அறிவு+ஒப்பு+. Question with a view to comparing notes with another; தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்புநோக்கக் கேட்குங் கேள்வி. (நன். 385, விருத்.) |
அறு 1 - தல் | aṟu- 6 and (mod.) 4 v. intr. [M.aṟu.] 1. To be severed, to break, as a rope; கயிறுமுதலியன இறுதல். சாப நாணறு குமிலவோதை (இரகு. யாகப். 87). 2. To cease, become extinct, perish; 3. To be decided, settled; 4. To abide, dwell; 5. To make friends; 6. To go to ruin; |
அறு 2 - த்தல் | aṟu- 11 v. caus. of அறு1-. [M.aṟu.] tr. 1. To part asunder, break off, as a cord, cut off, as with a knife, separate, as with a saw, reap, as with a sickle; அரிதல். 2. To sever, cleave, cut in two; 3. To root out, exterminate; 4. To burrow, from subterraneous passages; 5. To mould, as bricks; 6. To digest; 7. To outdo, excel; 8. To move in jerky rhythm; 9. To determine, resolve, decide, settle; 10. To remove, as obstacles, obviate, as objections, break, as enchantments; 11. To distribute; 12. To tease, worry; To become a widow, as cutting the tāli, 'marriage badge'; |
அறுக்கரிவாள் | aṟukkarivāḷ n. <>அறு2-+அரிவாள். Reaping sickle; கருக்கரிவாள். Loc. |
அறுகடி | aṟukaṭi n. <>அறுகு+அடி. Grass land covered with cynodon grass; அறுகுபற்றிய நிலம். |
அறுகம்புல் | aṟukam-pul n. <>id.+ Harialli grass, Cynodon dactylon; புல்வகை. |
அறுகரிசி | aṟukarici n. <>id.+ அரிசி. Mixture of Cynodon grass and rice, used in benediction or worship; அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி. சென்னி திருத்தமுறு மறுகரிசி யிட்டு (திருவானைக். கோசெங். 93). |
அறுகால் 1 | aṟu-kāl n. <>அறு3+. Beetle which is six-footed; வண்டு. அறுகா னிறைமலர் (திருக்கோ. 126). |
அறுகால் 2 | aṟu-kāl n. <>அறு1-+ Serpent as one without feet; பாம்பு. (திருவிளை.பாயி. 30.) |
அறுகாலன் | aṟu-kālaṉ n. See அறுகால்2. (மருதூரந். 6.) |
அறுகாழி | aṟukāḻi n. prob. அறுகு+ஆழி1. Kind of ring; மோதிரவகை. கையு மறுகாழியு மானவடிவை (ஈடு, 8, 10, 6). |
அறுகாற்பீடம் | aṟu-kāṟ-pīṭam n. <>ஆறு3+. Six-footed stool, used in Siva temples; ஆறுகால்கள் அமைந்த பீடம். அறுகாற்பீடத் திருந்து (திருவிளை. பாயி. 30). |
அறுகிடு - தல் | aṟukiṭu- v. intr. <>அறுகு+இடு-. To bless the bride and the bridegroom by throwing on their heads rice with Cynodon grass; விவாகத்தில் அறுகிட் டாசீர்வதித்தல். மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தரிலே (தமிழ்நா. 50). |
அறுகீரை | aṟu-kīrai n. <>அறு2-+. A potherb. See அறைக்கீரை. அறுகீரையைத் தின்றறி (பதார்த்த. 589). |