Word |
English & Tamil Meaning |
---|---|
தபம் | tapam, n. <> tapas. 1. See தவம். தபநய நட்பிற்றாய தாபதன் (இரகு. இரகுவுற். 40). 2. The Tamil month Māci; |
தபலா | tapalā, n. See தபளா. Loc. . |
தபலை 1 | tapalai, n. [T. tapela, K. tapala.] A kind of metal vessel; பாத்திரவகை. தம்பிக்கை யென்றுந் தவலையென்றும் (விறலிவிடு. 747). |
தபலை 2 | tapalai, n. See தபளா. தபலை திமிலைகள் பூரிகை பம்பை (திருப்பா. 546). . |
தபளா | tapaḷā, n. <> Arab. tabal. A kind of tabret; மத்தளவகை. Loc. |
தபன் | tapaṉ, n. <> tapa. Sun; சூரியன். (யாழ். அக.) |
தபனம் | tapaṉam, n. <> tapana. 1. Heat; வெப்பம். 2. Hot season; 3. Thirst; 4. A hell; |
தபனற்கஞ்சி | tapaṉaṟkaci, n. <> தபனன்+அஞ்சு-. Saffron, Curtcuma longa, as losing its colour in the sun; [வெயிலில் நிறமிழப்பது] மஞ்சள். (தைலவ. தைல.) |
தபனன் | tapaṉan, n. <> tapana. 1. Sun; சூரியன். தங்கள்குலக் கலைமதியைத் தபனனென்னும் (பாரத. அருச்சுனன்றீர். 32). 2. Agni, the God of Fire; 3. Leadwort.See கொடுவேலி. (மலை.) |
தபனியம் | tapaṉiyam, n. <> tapanīya. Gold; பொன். தபனியப்பொது (கந்தபு. சூரனரசி. 2). |
தபனீயகம் | tapaṉīyakam, n. See தபனியம். (யாழ். அக.) . |
தபா | tapā, n. <> Arab. dafa. Time, occasion, turn; தடவை. இரண்டு தபா வந்துபோனான். |
தபாக்கினி | tapākkiṉi, n. <> tapas + agni. See தபோக்கினி. (w.) . |
தபாது | tapātu, n. 1. See தபாவந்து. (w.) . 2. Mistake; |
தபாய் - த்தல் | tapāy-, 11 v. [K. dabāyisu.] Colloq. intr. To escape; தப்பிவிடுதல்.--tr. 1. To deceive; 2. To ridicule, mock at.See சதாய்-. Loc. |
தபால் | tapāl, n. <> Hind. ṭippāl. 1. Post, mail, tapal; அஞ்சல். 2. Regular stopping-place in route, stage; |
தபால்மாடு | tapāl-māṭu, n. <> தபால்+. Relay of bullocks, as in journey by stage; பிரயாணவண்டிக்குரிய கெடிமாடு. |
தபால்வண்டி | tapāl-vaṇṭi, n. <> id. +. Stage-coach; கெடிவைத்துச்செல்லும் பிரயாண வண்டி. Loc. |
தபாவத்து | tapāvattu, n. <> Arab. tafāvat. Cheating, defrauding; ஏமாற்றுகை. (C. G.) |
தபாற்காரன் | tapāṟ-kāraṉ, n. <> தபால்+. 1. Mail runner; தபாலை அஞ்சலிற்கொண்டு செல்லுவோன். 2. Postman; |
தபி - த்தல் | tapi-, 11 v. intr. <> tap. 1. To be hot, as the sun; காய்தல். சூரியன் தபிக்கிறான். 2. To be distressed; |
தபிலா | tapilā, n. See தபளா. Loc. . |
தபிலை | tapilai, n. See தபலை, (யாழ். அக.) . |
தபு 1 - தல் | tapu-, prob. 11 v. intr. cf. dabh. [K. tavu.] 1. To perish, come to an end; கெடுதல். (சூடா.) புரைதபு நாளொடு (கம்பரா.மந்தரை.86). 2. To die; |
தபு 2 - த்தல் | tapu-, 11 v. tr. To destroy; கெடுத்தல். உள்ளமழிய வூக்குநர் மிடறபுத்து (பதிற்றுப். 13, 18). |
தபுக்கெனல் | tapukkeṉal, n. [K. tapakkane.] 1. Expr. signifying haste, rashness, etc., as in falling; விழுதல் முதலியவற்றின் விரைவுக் குறிப்பு. 2. Onom. expr. of sharp sound; |
தபுத்து - தல் | taputtu-, 5 v. tr. prob. tap. To warm; ஈரம் புலர்த்துதல். முழுக்கியுந் தபுத்தியும் (கல்லா.53, 16). |
தபுதாரநிலை | tapu-tāra-nilai, n. <>தபு1- +. [Puṟap.] Theme describing the grief of a husband at the death of his wife; கணவன் தன் தாரமிழந்து துயரம் நிலையைக் கூறும் புறத்துறை. காதலி யிழந்த தபுதார நிலையும் (தொல்.பொ.79). |
தபுதி | taputi, n. <>id. [K. tavudi.] Ruin, death; அழிவு. தலைவர் தபுதிப் பக்கமும் (தொல்.பொ.72). |
தபேதார் | tapētār, n. <>Persn. daftardār. Head peon. See டபேதார். . |
தபேலா | tapēlā, n. See தபளா. Loc. . |
தபோக்கினி | tapōkkiṉi, n. <>tapōgni. 1. Fire of austere penance; தவத்தால் தோன்றும்கனல். 2. Fires kindled for doing penance; |
தபோதன் | tapōtaṉ, n. See தபோதனன். தபோதரிற் பெரியோன். (கமபரா.மீட்சிப்.189). . |
தபோதனன் | tapō-taṉaṉ, n. <>tapō-dhana. Hermit, ascetic; முனிவன். தங்கி வைகுந் தபோதனர் (கம்பரா.கங்கை.10). |