Word |
English & Tamil Meaning |
---|---|
தபேர்நிதி | tapō-niti, n. <>tapō-nidhi. See தபோதனன். . |
தபோபலம் 1 | tapō-palam, n. <>tapas + phala. Fruits of penance or religious a usterities; தவப்பயன். மணிதன்னை யணிந்த தபோபலத்தின் நன்மையான் (பிரமோத்.20, 71). |
தபோபலம் 2 | tapō-palam, n. <>tapō-bala. Power resulting from penance or religious austerities; தவத்தால் உண்டாம் வல்லமை. தபோபலத்தால் எதனையும் சாதிக்கலாம். |
தபோலோகம் | tapō-lōkam, n. <>tapō-lōka. See தவலோகம். . |
தபோவனம் | tapō-vanam. n. <>tapō-vana. Forest where ascetics perform penance; தவம்புரியும் வனம். அம்முனிப்பெருங் கடவுளுந் தபோவன மடைந்தனன். (பாரத.சம்ப.30). |
தம் 1 | tam, part. <>தாம். Flexional increment generally used along with nouns of third person pl .; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை. தம்மிடை வரூஉம் படர்க்கை மேன (தொல்.எழுத்.191). |
தம் 2 | tam, n. <>Persn. dam. Colloq. 1. Holding the breath; மூச்சடக்குகை. 2. Breath; |
தம்பட்டங்காய் | tampaṭṭaṅ-kāy, n. <>தம்பட்டம்2 +. Sword-bean. See வாளவரை. (W.) . |
தம்பட்டம் 1 | tampaṭṭam, n. [T. tammaṭamu.] A small drum, tomtom; ஒருவகைப் பறை. (பிங்.) பறை திமிலை திமிர்தமிகு தம்பட்டம் (திருப்பு.18). |
தம்பட்டம் 2 | tampaṭṭam, n. <>தம்பட்டை. Sword-bean.See வாளவரை. (W.) . |
தம்பட்டை | tampaṭṭai, n. Sword-bean. See வாளவரை. (W.) . |
தம்படி | tampaṭi, n. <> Hind. damri. Cash, a small coin=1/12 anna; அணாவில் பன்னிரண்டில் ஒன்றாகிய பை. |
தம்பதி | tampati, n. <>dampatī. Wedded couple, husband and wife; கணவனும் மனைவியும். (சூடா.) |
தம்பதிபூசை | tampati-pūcai, n. <>id. + pūjā. Ceremony in which a wedded couple is worshipped as representing Pārvatī and Paramēšvara; பார்வதி பரமேசுவரராக வரித்துத் தம்பதிகளுக்குச் செய்யும் பூசை. |
தம்பநிறுத்து - தல் | tampa-niṟuttu-,. v. intr. <>தம்பம்1 +. To set up a post or pillar in celebration of a victory or as a memorial of a munificent deed; வெற்றி கொடை முதலியவற்றை விளக்குமாறு அடையாளத்தம்பம் நாட்டுதல். |
தம்பம் 1 | tampam, n. <>Pkt. tamba <> sthambha. 1. Pillar, column ; தூண். தம்பத்தி னனக மாநர மடங்கலா யவதரித்து (பாகவத.1, 1, 31). 2. Post to which elephants, etc. are tied; 3. Lamp-post; 4. Flagstaff, mast, temple flag pole; 5. Support ; 6. See தம்புகை. (L.) 7. See தம்பனம். அக்கினித்தம்பம். |
தம்பம் 2 | tampam, n. cf. damšana. Armour, coat of mail; கவசம். (பிங்.) |
தம்பம் 3 | tampam, n. cf. udanvat. Pond, tank, natural spring; ஊருணி. Rd. |
தம்பர் | tampar, n. cf. தம்பல்1. See தம்பலம், 2 (மாறனலங்.470, உதா.) . |
தம்பல் 1 | tampal, n. <>tāmbūla. See தம்பலம், 2 வெள்ளிலைத் தம்பல் (கம்பரா.வரைக்கா.49). . |
தம்பல் 2 | tampal, n. perh. stambh. [T. dammu.] Hardening of rice-fields after heavy rain; மழையால் வயல் இறுகுகை. (J.) |
தம்பலங்காய் | tampalaṅ-kāy, n. Seed pod of Portia tree; பூவரசுமரத்தின் காய். Nā. |
தம்பலடி - த்தல் | tampal-aṭi-, v. intr. <>தம்பல்2 +. (J.) 1. To plough a field after it has been hardened by rain; கனத்தமழையால் இறுகின வயலை உழுதல். 2. To become even and hardened, as a field after rain; |
தம்பலப்பூச்சி | tampala-p-pūcci, n. <>தம்பலம்+. 1. Scarlet moth, Mutilla occidentalis ; பூச்சிவகை. 2. Cochineal, Coccus cacti; |
தம்பலம் | tampalam, n. <>tāmbūla. 1. Betel with areca-nut; வெற்றிலைப்பாக்கு. தையா றம் பலந் தின்றியோ (கலித்.65). 2. Red spittle caused by chewing betel; refuse of chewed betel; 3. See தம்பலப்பூச்சி. |
தம்பலாடு - தல் | tampal-āṭu-, v. intr. <>தம்பல்2 +. To water a field and turn it soft and muddy by trampling; வயலில் நீர்பாய்ச்சி மிதித்துச் சேறாக்குதல். (J.) |
தம்பலை | tampalai, n. A small shrub.See நிலவிலந்தை. (மலை.) . |
தம்பனகாரன் | tampalai, n. <>தப்பனம்+. Magician, conjurer exercising magic powers to arrest or control Nature's forces. பொருள்களின் இயற்கையைக் கட்டுப்படுத்தும் மந்திரவாதி. |