Word |
English & Tamil Meaning |
---|---|
தமம் 3 | tamam, n. <>dama. See தமை. 2. தமம்புறக் கரணதண்டம் (கைவல். தத்துவ. 9). . |
தமயந்தி | tamayanti, n. <>Damayantī. 1. Damayantī, wife of Naḷa and heroine of Naiṭatam; நளன்மனைவியாகிய நைடத கதாநாயகி நள. 2. A kind of jasmine; |
தமயந்திவிசிறி | tamayanti-viciṟi, n. <>தமயந்தி +. A kind of saree; சீலை வகை. Loc. |
தமயன் | tamayaṉ, n. See தமையன். . |
தமர் 1 | tamar, n. <>தம். [K. M. tamar.] 1. Relations, kindred; சுற்றத்தார். தமருட் டலையாதல் (பு. வெ. 3, 6). 2. Friends, well-wishers; 3. Counsellors, men guiding one's affairs; 4. Servants; |
தமர் 2 | tamar, n. [M. tamar.] 1. Hole, as in a plank, commonly bored or cut; கருவியால் அமைத்த துளை. தமரிடு கருவியாம் (திருவிளை. மாணிக்க. 61). 2. Gimlet, spring awl, boring instrument; |
தமர்மை | tamarmai, n. <>தமர். Friendship; நட்பு. கல்வியில்லாத புரவிபோல்வாரது தமர்மையில் (குறள். 814, உரை). |
தமர்வாயு | tamar-vāyu, n. prob. தமரகம் +. Heart disease, heart affections, whether organic or functional; இருதய வாதநோய்வகை. |
தமரகம் 1 | tamarakam, n. cf. tamaka. Windpipe, trachea; சுவாசக்குழல். |
தமரகம் 2 | tamarakam, n. See தமருகம். (யாழ்.அக.) . |
தமரகவாதம் | tamaraka-vātam, n. <>தமரகம் +. See தமரகவாயு. (பைஷஜ. 196.) . |
தமரகவாயு | tamaraka-vāyu, n. <>id. +. 1. Angina pectoris; மாரடைப்பு நோய். 2. Asthma; |
தமரகவொலி | tamaraka-v-oli, n. <>damaruka +. Rattlewort. See கிலுகிலுப்பை. (மலை.) |
தமரத்தை | tamarattai, n. [M. tamaratta.] Carambola tree, s. tr., Averrhoea carambola; மரவகை. (பதார்த்த. 743.) |
தமரம் 1 | tamaram, n. perh. damaru. Noise, din, sound; ஒலி. (பிங்.) தமரம துடன்வளர் சதுமறை. (கம்பரா. திருவவ. 126). |
தமரம் 2 | tamaram, n. cf. தமரத்தை. 1. See தமரத்தை. . 2. Lac, gum-lac, sealing-wax; |
தமராணி | tamar-āṇi, n. <>தமர் +. 1. See தமர். . 2. See தமருசி, 2. |
தமரி - த்தல் | tamari-, 11 v. intr. <>தமரம். To sound; ஒலித்தல். சங்கமன்பர் வந்தாரென்று ... தமரித்து (குலோத். கோ. 320). |
தமரிப்பு | tamarippu, n. <>தமரி-. 1. Sound; ஒலி. வேழுத் தமரிப்பும் (கோயிற்பு. இரணிய. 121). 2. Desire; |
தமரு | tamaru, n. <>damaru. See தமருகம். . |
தமருகம் | tamarukam, n. <>damaruka. Kettle-drum; உடுக்கை. மொகுமொகென்றொவிமிகுந் தமருகங்கள் பலவே (கலிங். 100). |
தமரூசி | tamar-ūci, n. <>தமர் +. 1. See தமர், . 2. Bits of a brace; |
தமரோசை | tamar -ōcai, n. <>samaruka +. Rattlewort. See கிலுகிலுப்பை, 2. (மலை.) |
தமலி | tamali, n. Ladle; சட்டுவம். (அக. நி.) |
தமள் | tamaḷ, n. <>தம். A female relative or friend; உற்றாள். (நன். 276, உரை.) |
தமன் | tamaṉ, n. <>id. A male relative or friend; உற்றான் ஆழிப்படை யுடையான்றமன் (சூளா. அரசி. 182). |
தமனகக்கொழுந்து | tamaṉaka-k-koḻuntu, n. <>தமனகம். See தமனகம். (சீவக. 827, உரை.) . |
தமனகம் | tamaṉakam, n. <>damanaka. Southernwood. See மருக்கொழுந்து. பச்சைத் தமனகத்தோடு பாதிரிப்பூச் சூட்டவாராய். (திவ். பெரியாழ். 2, 7, 3). |
தமனி | tamaṉi, n. cf. tapana-tanayā. Indian mesquit. See வன்னி. (அக. நி.) |
தமனியக்கூடம் | tamaṉiya-k-kūṭam, n. <>தமனியம் +. See தமனியப்பொதியில். இணையற வகுத்த தமனியக்கூடத்து (பெருங். உஞ்சைக். 33, 101). . |
தமனியப்பொதியில் | tamaṉiya-p-potiyil, n. <>id. +. Public hall roofed with gold; பலர் கூடுதற்குரிய பொன்வேய்ந்த அம்பலம். சாலையுங்கூடமுந் தமனியப் பொதியிலும் (மணி. 28, 66). |
தமனியம் | tamaṉiyam, n. <>tapanīya. Gold; பொன். (திவா.) |