Word |
English & Tamil Meaning |
---|---|
தமனியன் 1 | tamaṉiyan, n. <>tapanīya. (யாழ். அக.) 1. cf. Hiraṉya-garbha. Brahmā; பிரமன். 2. cf. Hiraṇya. Iraṇyaṉ, an Asura; |
தமனியன் 2 | tamaṉiyaṉ, n. cf. tapana. Saturn; சனி. (யாழ். அக.) |
தமாசு | tamācu, n. See தமாஷ். . |
தமாசை | tamācai, n. See தமாஷ். Loc. . |
தமாம் | tamām, n. <>U. tamām. Whole, entireness, completeness; முழுவதும். (w.) |
தமார்க்கவம் | tamārkkavam, n. <>dhāmārgava. Common luffa. See பீர்க்கு. (மலை.) |
தமாலகி | tamālaki, n. <>tāmalakī. Forest small-leaved featherfoil. See கீழாநெல்லி. (தைலவ. தைல.) |
தமாலகிரி | tamālakiri, n. See தமாலகி. (சங். அக.) . |
தமாலம் | tamālam, n. <>tamāla. 1. Mysore gamboge. See பச்சிலை. சம்பக மாதவி தமாலங் கருமுகை (சிலப். 8, 45). 2. Leaf; |
தமான் | tamāṉ, n. <>U. tamān. 1. Long trousers; காற்சட்டை. 2. A kind of cloak worn by Moors; |
தமாஷ் | tamāṣ, n. <>U. tamāshā. Colloq. 1. Show, pomp; உல்லாசம். 2. Spectacle, sight; 3. Sport, fun; |
தமாஷா | tamāṣā, n. See தமாஷ். Colloq. . |
தமி | tami, n. <>தம். 1. Solitude, loneliness; தனிமை. தமிநின்று (திருக்கோ. 167). 2. Inequality; 3. Destitution, helplessness; |
தமி 1 - த்தல் | tami-, 11 v. intr. <>தமி. To be alone, lonely; தனியாதல் நூறுசெறுவாயினுந் தமித்துப்புக் குணினே (புறநா. 184, 3). |
தமி 2 - த்தல் | tami-, 11 v. tr. <>dam. To punish; தண்டித்தல் என் குற்றத்தைப் பார்த்துத் தமிக்க நினைத்தாராகில் (ஈடு, 1, 4, 7). |
தமி | tami, n. perh. tamisrā. Night; இரவு. (அக. நி.) |
தமிசிரம் | tamiciram, n. <>tamisra. 1. Darkness; இருள். 2. Deficiency; |
தமிசு | tamicu, n. cf. தமி. East Indian kino. See வேங்கை. (அக. நி.) |
தமிட்டம் | tamiṭṭam, n. See தம்பட்டம். தமிட்டராணுவம் பெருக்கி (தனிப்பா.i, 318, 9). . |
தமியம் | tamiyam, n. cf. madya. Toddy, spirituous liquor; கள். (மூ. அ.) |
தமியள் | tamiyaḷ, n. <>தமி. Solitary, lonely woman; தனியாயிருப்பவள். தமியளாய சீதைக்கும் (கம்பரா. மாயாசீதை. 80). |
தமியன் | tamiyaṉ, n. <>id. 1. Solitary, lonely person; தனித்திருப்பவன். தானேதமியன் வந்தன னளியன் (மணி. 16, 58). 2. Destitute person; |
தமியாட்டி | tami-y-āṭṭi, n. <>தமி +. See தமியள். தமியாட்டி தளர்ந்ததுவே (திவ். இயற். திருவிருத். 73). . |
தமிழ் | tamiḻ, n. perh. தமி. dramida. 1. Sweetness, melodiousness; இனிமை. (பிங்.) 2. Refined quality; 3. Tamil language, being divided into iyaṟ-ṟamiḻ, icai-t-tamiḻ, nāṭaka-t-tamiḻ; 4. Tamil literature, Tamil work; 5. The Tamils, 6. The Tamil country; |
தமிழ்க்குச்சரி | tamiḻ-k-kuccari, n. <>தமிழு + gurjarī. (Mus.) A secondary melody-type of the kuṟici class; குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.) |
தமிழ்க்கூத்தர் | tamiḻ-k-kūttar, n. <>id. +. Tamilian dancers; தமிழ்க்கூத்து ஆடுபவர். (திவா.) |
தமிழ்நதி | tamiḻ-nati, n. <>id. +. The Vaikai, as the river in the Cen-Tamiḻ country; [சொந்தமிழ்நாட்டிற்குரிய யாறு] வைகை நதி. புதுநீர்த் தமிழ்நதிப்பால் (திருவாலவா. திருநாட்.7). |
தமிழ்நர் | tamiḻnar, n. <>id. The Tamils; தமிழர். தீந்தமிழ்நர் கோமான் (இறை. 3, 49). |
தமிழ்நாடன் | tamiḻ-n¢āṭaṉ, n. <>id. +. 1. King of the Tamil country; தமிழ்நாட்டு வேந்தன். குரங்கிளநீர் தனைக்கொண்டெறியுந் தமிழ்நாடா (தனிச்செய்யுட். 59, 7). 2. King of the Pāṇdya family; |
தமிழ்நாவலர்சரிதை | tamiḻ-nāvalar-caritai, n. <>id. +. A history of the Tamil poets, being a collection of occasional verses by a few poets with notes explaining the occasion; புலவர் பலர் பாடிய தனிச்செய்யுட்களை அவை பாடப்பெற்ற சரித்திரக்குறிப்புடன் கூறும் ஒரு தொகைநூல். |