Word |
English & Tamil Meaning |
---|---|
தமிழ்ப்படுத்து - த்தல் | tamiḻ-p-paṭuttu-, v. tr. <>id. +. To translate into Tamil; பிறமொழியிலுள்ளதனைத் தமிழில் மொழிபெயர்த்தல். |
தமிழ்மருந்து | tamiḻ-maruntu, n. <>id. +. Medicine prepared according to the tamil medical system, dist. fr. ciṅkaḷa-maruntu; தமிழ்மருத்துவநூல்களிற் கூறியவாறு செய்யப்பட்ட மருந்து. |
தமிழ்மலை | tamiḻ-malai, n. <>id. +. Mount Potiyam in Tinnevelly, District; திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள பொதியமலை. (சங்.அக.) |
தமிழ்மறை | tamiḻ-maṟai, n. <>id. +. See தமிழ்வேதம். பன்னு தமிழ்மறையாம் பதிகம் பாடி (பெரியபு. திருஞான. 319). . |
தமிழ்முத்தரையர்கோவை | tamiḻ-mut-taraiyar-kōvai, n. <>id. +. A kōvai poem on certain tamil chiefs called Muttaraiyar; முத்தரையர் என்ற தமிழ்த்தலைவர்மேல் இயற்றப்பெற்ற கோவை நூல். (யாப். வி. 486.) |
தமிழ்முனிவன் | tamiḻ-muṉivan, n. <>id. +. Agastya, as the sage who wrote the first tamil grammar; [தமிழ் மொழியை இலக்கணத்தாற் செப்பஞ்செய்த முனிவன்] அகத்தியன். ஒண்டமிழ் முனிவனுண்ண (கந்தபு. சூரபன். வதை. 289). |
தமிழ்வாணன் | tamiḻ-vāṇaṉ, n. <>id. +. Tamil poet or scholar; தமிழ்ப்புலவன். தெள்ளு தமிழ்வாண ரிசைவாணர் சூழ (திருவாலவா.57, 22). |
தமிழ்விரகன் | tamiḻ-virakaṉ, n. <>id. +. Saint Sambandha, as proficient in Tamil; [தமிழ் வல்லவன்] See திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். தமிழ்விரகன மொழிகள் (தேவா. 132, 11). |
தமிழ்வேதம் | tamiḻ-vētam, n. <>id. +. 1. The Kuṟaḷ of Tiruvaḷḷuvar; திருவள்ளுவர் திருக்குறள். 2. Tēvāram and other sacred hymns of the šaivas; 3. Tivya-p-pirapantam by Nammāḻvār; |
தமிழ்வேளர்கொல்லி | tamiḻ-vēḷar-kolli, n. <>id. +. (Mus.) A secondary melody-type of the marutam class; மருதயாழ்த்திறவகை. (பிங்.) |
தமிழக்கூத்து | tamiḻa-k-kūttu, n. <>id. +. Tamilian system of dance; தமிழ் நாட்டுக்குரிய கூத்து (தொல். எழுத். 385, உரை.) |
தமிழகம் | tamiḻ-akam, n. <>id. +. The Tamil country; தமிழ்நாடு. வையக வரைப்பிற் றமிழகங் கேட்ப (புறநா. 168, 18). |
தமிழப்பல்லவதரையர் | tamiḻa-p-palla-va-taraiyar, n. <>id. +. The Pallavas of the Tamil country; தமிழ்நாட்டுப் பல்லவவரசர். (நன். 164, மயிலை.) |
தமிழர் | tamiḻar, n. <>E. Tumbler, drinking cup; விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம். Loc. |
தமிழவண்ணான் | tamiḻa-vaṇṇāṉ, n. <>தமிழ் +. Washerman of caste people; உயர்சாதியார்க்கு வெளுக்கும் வண்ணான். (E. T. vii, 317.) |
தமிழறியும்பெருமாள்கதை | tamiḻ-aṟiyum-perumāḷ-katai, n. <>id. +. A prose work in Tamil; ஒரு தமிழ் வசனநூல் |
தமிழன் | tamiḻaṉ, n. <>id. 1. One whose mother-tongue in Tamil; தமிழைத் தாய்மொழியாக உடையவன். 2. Tamilian, as dist. fr. āriyaṉ; 3. Caste man, as dist. |
தமிழாகரன் | tamiḻ-ākaraṉ, n. <>id. + ākara. Saint Sambandha, as the mine of Tamil learning; [தமிழ்க்கு நிலைக்களமானவன்] See திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். தமிழாகரன்றன் புகலி (பதினொ. ஆளுடை. 35). |
தமிழியல்வழக்கு | tamiḻ-iyal-vaḻakku, n. <>id. +. A system of love-marriage set forth in ancient Tamil works; பண்டைக்காலத்துத் தமிழ்நூல்களிற் கூறப்படும் காமக்கூட்டம். தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கு (பெருங். வத்தவ. 17, 67). |
தமிழோர் | tamiḻōr, n. <>id. 1. The Tamils; தமிழ் மக்கள். 2. Tamil poets or scholars; |
தமிளர் | tamiḷar, n. See தமிழர் . |
தமுக்கடி - த்தல் | tamukkaṭi, v. intr. &. tr. <>தமுக்கு +. 1. To tomtom, publish orders by beat of drum; பறைசாற்றிச் செய்தியறிவித்தல். 2. To give unnecessary publicity to a news; |
தமுக்கம் | tamukkam, n. 1. [M. tamukkam.] Place whence elephants are sent together to battle; யானைகளைப் போர்க்கு அனுப்பும் தாவளம். (w.) 2. [T. tamagamu.] Summer house, royal pavilion, as the Nāyak building at Madura; |
தமுக்கு | tamukku, n. <>U. tamk. Drum for publishing orders; செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை. |