Word |
English & Tamil Meaning |
---|---|
தமுக்குப்போடு - தல் | tamukku-p-pōṭu-, v. intr. & tr. <>தமுக்கு +. See தமுக்கடி. . |
தமுக்கை | tamukkai, n. See தமுக்கு. Colloq. . |
தமை 1 | tamai, n. <>T. tami. Passion, desire; ஆசை. அவனுக்கு அதிகத் தமையிருக்கிறது. |
தமை 2 | tamai, n. <>dama. (Vēdānta.) Restraint of āṉēntiriyam and kaṉmēntiriyam; ஞானேந்திரியம் கன்மேந்திரியம் இவற்றை அடக்குகை. தமைதான் புறக்கரண மடக்கல் (வேதா. சூ.11). |
தமையம் | tamaiyam, n. Yellow orpiment. See அரிதாரம். (w.) |
தமையன் | tam-aiyaṉ, n. <>தம் + ஜயன். [M. tamayan.] 1. Elder brother; மூத்த சகோதரன். தமைய னெம்மையன் (திருவாச. 9, 13). 2. Elder male cousin who is the son of a paternal uncle or maternal aunt; |
தமோகுணம் | tamō-kuṇam, n. <>tamōguṇa. The subtle quality of darkness or ignorance manifested in torpor, sleep, lust, anger etc., one of mu-k-kuṇam, q.v.; முக்குணங்களுள் காமம், வெகுளி, மயக்கம் முதலிய தீக்குணங்களுக்குக் காரணமாயிருப்பது. |
தய்க்கா | taykkā, n. <>U. takya. Fakir's residence; பக்கிரியின் இருப்பிடம். Muham. |
தய்க்கால் | taykkāl, n. See தய்க்கா. Tj. . |
தய்யான் | tayyāṉ, n. <>தை-. Tailor; தையற்காரன். தையானொருவனுக்கு ... பங்கு ஒன்றும் (S. I. I. ii, 277). |
தயக்கம் 1 | tayakkam, n. <>தயங்கு-. 1. Glittering, shining; ஒளிவிடுகை. 2. Appearance, manifestation; |
தயக்கம் 2 | tayakkam, n. <>தயங்கு-. 1. Perplexity, hesitation, dejection; கலக்கம். 2. Wavering, flexibility; |
தயங்கு 1 - தல் | tayaṅku-, 5 v. intr. 1. To glitter, shine; ஒளிவிடுதல். தயங்குதாரகை (கம்பரா. வாலிவதை. 53). 2. To be clear, lucid; |
தயங்கு 2 - தல் | tayaṅku-, 5 v. intr. <>தேங்கு-. 1. To be perplexed, agitated in mind, confused; to hesitate, waver; திகைத்தல். தயங்கியே மயங்கி வீழ்வாள் (அரிச். பு. மயான.17). 2. To droop; to lose heart; 3. To sway, move to and fro; |
தயரதன் | tayarataṉ, n. <>Daša-ratha. Dašaratha. See தசரதன். தயரதன் பெற்ற மரகத மணி. (திவ்.திருவாய்.10, 1, 8). . |
தயல் | tayal, n. <>தையல். Woman; பெண். தயல்வளர் மேனியன். (திருக்கோ. 117). |
தயவு | tayavu, n. <>dayā. 1. Grace; mercy; compassion; அருள். கண்டித்தொடையான் தயவுடையான் (சிவரக.நைமிசா. 47). 2. Love, favour, passion; 3. Piety; |
தயனியம் | tayaṉiyam, n. <>dayanīya. That which deserves one's pity; தயை செய்யத் தக்கது. தயனியக்கவி பாடுவோம் (தமிழ்ந. 231) |
தயா | tayā, n. <>dayā. See தயவு. தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் (திருவாச. 13, 3). . |
தயாகரன் | tayākaraṉ, n. <>id. + ākara. Store house of mercy. See கிருபாகரன். |
தயாசமுத்திரம் | tayā-camuttiram, n. <>id. +. Ocean of mercy. See கிருபாசமுத்திரம். |
தயாசீலன் | tayā-cīlaṉ, n. <>id. +. Benevolent, merciful person; கிருபையுள்ளவன். |
தயாதர்மம் | tayā-tarmam, n. <>id. +. Duty of love and mercy towards others; அருளாகிய அறம். அவனுக்குத் தயாதர்மத்தை உபதேசஞ் செய்து (மணி, 11, 70, உரை). |
தயாநிதி | tayā-niti, n. <>id. +. See தயாகரன். இன்னருள்சேர் தயாநிதியே (திருவாலவா. 24, 3). . |
தயாபரன் | tayā-paraṉ, n. <>id. +. 1. God, as All-merciful; [தயைமிக்கவன்] கடவுள். தானேயாகிய தயாபர னெம்மிறை (திருவாச. 2, 96). See தயாசீலன். |
தயாபாரமிதை | tayā-pāramitai, n. <>id. +. (Buddh.) The transcendental virtue of universal love, one of taca-pāramitai; அருண் மிகுகையாகிய பாரமிதை. (மணி. 26, 45, உரை.) |
தயார் | tayār, n. <>U. taiyār. Readiness, preparedness; ஆயத்தம். |
தயாவம் | tayāvam, n. See தயை. (யாழ். அக.) . |
தயாவிருத்தி | tayā-virutti, n. <>dayā1 +. Acts of beneficence, eight in number, viz., piṟarkku-p-poruḷvaravil-uvappu, piṟar-celvampoṟukkai, piṟar-karumattiṟkuṭaṉpaṭal, tīmai-k-kacal, piṟar-karumam-muṭikka-viraikai, piṟaraiyan-tīrkkai, piṟartuyarkkiragkal, or 14 in number, அருளொடு புரியும் செயல்களுள் பிறர்க்குப் பொருள்வரவில் உவப்பு, பிறர்செல்வம்பொறுக்கை, பிறர்கருமத்திற் குடன்படல், தீமைக்கஞ்சல், பிறர்கருமம் முடிக்க விரைவகை, பிறர் ஐயந் தீர்க்கை, |