Word |
English & Tamil Meaning |
---|---|
தயாவீரன் | tayā-viraṉ, n. <>id. +. Buddha, as heroic in acts of grace; [தயையில் மேம்பட்டவன்] புத்தன். (மணி.30, 11, உரை.) |
தயாவு | tayāvu, n. See தயவு. தயாவு தாங்கலால் (கம்பரா. மாரீச. 126). . |
தயாளம் | tayāḷam, n. <>dayālu. See தயவு, 1. . |
தயாளன் | tayāḷaṉ, n. <>id. See தயாசீலன். . |
தயாளு | tayāḷu, n. <>dayālu. See தயாசீலன். குற்றங் குணமாகக்கொள்ளுந் தயாளு (அருட்பா, i, திருவருள்.11). . |
தயித்தியர் | tayittiyar, n. <>dailya. Asuras; அசுரர். தயித்தியர்க் கிறைபால் (கந்தபு. கயமுகனுற். 43). |
தயித்திரியம் | tayittiriyam, n. See தைத்திரியம். . |
தயிர் | tayir, n. <>dadhi. 1. [M. tayir.] Curds, tyre; பிரையூற்றின பால். தயிர்காயம் பெய்தடினும் (நாலடி, 116). 2. Brain matter; |
தயிர்க்கடல் | tayir-k-kaṭal, n. <>தயிர் +. Ocean of curds, one of cḻu-kaṭal, q.v.; எழுகடல்களுள் ஒன்றாய்த் தயிர்மயமான கடல். (பிங்.) |
தயிர்க்காய்ச்சி | tayir-k-kiccaṭi, n. perh. id. +. A species of coconut tree; ஒருவகைத்தென்னை. |
தயிர்க்கிச்சடி | tayir-k-kiccaṭi, n. <>id. +. A kind of fluid relish made of tyre and other ingredients; தயிரிற் செய்த கிச்சடிவகை. |
தயிர்க்குழம்பு | tayir-k-kuḻampu, n. <>id. +. A thick medicine, made chiefly of curds, used for jaundice; காமாலைநோய்க்கு உபயோகிக்கும் தயிர் கலந்த மருந்துவகை. (w.) |
தயிர்க்கோல் | tayir-k-kōl, n. <>id. +. Churning rod; மத்து. (பிங்.) |
தயிர்கடைதறி | tayir-kaṭai-taṟi, n. <>id. +. Fixed post used in churning curds; தயிர் கடைதற்கு உபயோகிக்குத் தம்பம். (திவா.) |
தயிர்கடைதாழி | tayir-kaṭai-tāḻi, n. <>id. +. Pot used in churning; மத்திட்டுக்கடையும் தயிர்ப்பானை. (திவா.) |
தயிர்ச்சாதம் | tayir-c-cātam, n. <>id. +. Rice mixed with curds; ததியோதனம். |
தயிர்வடை | tayir-vaṭai, n. <>id. +. Cake of black-gram pulse soaked in curds; தயிர்ப்பச்சடியில் ஊறிய வடைப்பணிகாரம். |
தயிர்வளை | tayirvaḷai, n. See தைவேளை. (w.) . |
தயிர்வேளை | tayirveḷai, n. A sticky plant. See தைவேளை. (J.) |
தயிரமுது | tayir-amutu, n. <>தயிர் +. Offering of curds as given to idols, devotees, etc.; கடவுட்கு அல்லது அடியார்க்குப் படைக்குந் தயிர். (S. I. I. iii, 116.) |
தயிரமுர்து | tayir-amurtu, n. <>id. +. See தயிரமுது. (S. I. I. iii, 102.) . |
தயிரியம் | tayiriyam, n. <>dhairya. Courage; மனோதிடம். தயிரியமாஞ் சிவபத்தி பூண்டே (சிவரக. ஞானவாலன்கலியாணநி. 20). |
தயிரிற்றிமிரல் | tayiriṟṟimiral, n. <>தயிர் + திமிரல். See தயிர்ச்சாதம். (பிங்.) . |
தயிலக்காப்பு | tayila-k-kāppu, n. <>தயிலம் +. Smearing an idol with oil; கடவுள் திருமேனிக்குத் தைலஞ்சாத்துகை. (கோயிலொ. 8.) |
தயிலபர்ணிகம் | tayila-parṇikam, n. <>tailaparṇika. White sandalwood; வெண்சந்தனம். (மலை.) |
தயிலபீதம் | tayila-pītam, n. perh. taila +. Milk of the fig tree; அத்திப்பிசின். (மலை.) |
தயிலம் | tayilam, n. <>taila. 1. Ointment, medicated oil, balm; வடித்த மருந்தெண்ணெய். (சூடா.) 2. Oil; |
தயிலம்வடி - த்தல் | tayilam-vaṭi-, v, intr. <>தயிலம் +. See தயிலமிறக்கு-. . |
தயிலம்வை - த்தல் | tayilam-vai-, v. tr. <>id. +. See தயிலமாட்டு. (யாழ். அக.) . |
தயிலமாட்டு - தல் | tayilam-āṭṭu-, v. tr. <>id. +. To embalm, preserve in medicated oil, as a corpse; பிரேதத்தை எண்ணெயிலிட்டுக் கெடாமற் காத்தல்.தயிலமாட்டு புடலம் (கம்பரா). |