Word |
English & Tamil Meaning |
---|---|
தருக்கு 2 | tarukku, n. <>தருக்கு-. 1. Pride, arrogance, ostentation, self-conceit, superciliousness; செருக்கு. தருக்கினரர் கெடுவன்றே (கம்பரா. மாரீச. 201). 2. Ability, power, boldness; 3. Elation, exultation; |
தருக்கு 3 | tarukku, n. <>tarka. Disputation; தருக்கம். தருக்கினாற் சமண்செய்து (திவ். பெரியதி. 2, 1, 7). |
தருக்கோட்டம் | taru-k-kōṭṭam, n. <>தரு +. See தருநிலைக்கோட்டம். (சிலப்.5, 145-6, உரை.) . |
தருகு - தல் | taruku-, 5 v. intr. Colloq. 1. To stay; தங்குதல். 2. To continue; |
தருசாப்பள்ளி | tarucā-p-paḷḷi, n. See தரிசாப்பள்ளி. (T. A. S. ii, 67.) . |
தருசாரம் | taru-cāram, n. <>taru + sāra. Camphor, as the essence of a tree; [மரத்தின் ஸார்ரமாயுள்ளது] கருப்பூரம். (சங்.அக.) |
தருசு | tarucu. n. <>T. tarucu. Closely woven texture; நெருங்கிய இழை. |
தருணநாரி | taruṇa-nāri, n. <>taruṇa +. A species of sarsaparilla swallow-wort. See சிறுநன்னாரி. (தைலவ. தைல. 98.) |
தருணம் | taruṇam, n. <>taruṇa. 1. Prime of life, youthfulness; இளமை. கருண வஞ்சிக் கொம்பு (கம்பரா. தைலமாட்டு. 15). 2. Right time, proper season; 3. Good intention; 4. Chinese anise. 5. Castor-plant. |
தருணன் | taruṇaṉ, n. <>taruṇa. Young man; இளைஞன். அறவுந்தருண னறவும் விருத்தன் (சைவச. ஆசா. 16). |
தருணாஸ்தி | taruṇāsti, n. Fat; கொழுப்பு. (யாழ். அக.) |
தருணி | taruṇi, n. <>taruṇī. 1. Young woman; இளமைப் பருவமுடையவள். 2. The period from the 16th to the 30th year in the lifetime of a woman; 3. cf. குமரி. Curacoa aloes. |
தருணை | taruṇai, n. <>taruṇā. Young woman between 16 and 30; 16 முதல் 30 வயது வரையுள்ள பெண். தரித்த வாலை தருணைபிரவுடை விருத்தையாகும் வியன்பருவங்களின் (கந்தபு. இந்திரபுரி. 33). |
தருத்தமனி | taru-t-tamaṉi, n. perh. taru. damanī. Tree turmeric. See மரமஞ்சள். (மலை.) |
தருதல் | tarutal, n. <>தா-. Gift; கொடை. (சூடா.) |
தருநன் | tarunaṉ, n. <>id. 1. Giver; donor; கொடுப்பவன். எல்லைதருநன் (பொருந. 233) |
தருநிலைக்கோட்டம் | taru-nilai-k-kōṭṭam, n. <>தரு +. Temple of the kaṟpaka-taru in Kāviri-p-pūm-paṭṭiṉam; காவிரிப்பூம்பட்டினத்தில் கற்பகதரு நின்று விளங்கிய கோயில் தருநிலைக் கோட்டத்து மங்கல நெடுங்கொடி (சிலப்.5, 145-6) |
தருநிறப்பஞ்சரம் | taru-nirā-p-pacaram n. Magnet; காந்தம். (யாழ். அக.) |
தருப்பகம் | taruppakam, n. perh. darpaka. Inferiority; தாழ்வு (யாழ். அக.) |
தருப்பகன் | taruppakaṉ, n. <>darpaka. Kāma, மன்மதன். (சங். அக.) |
தருப்பசயனம் | taruppa-cayaṉam, n. <>darbha + šayana. A Viṣṇu shrine. See திருப்புல்லாணி. சேதுமூல நயங்கொ டருப்பசயனம் (சேதுபு. சேதுவந். 42) |
தருப்படன் | taruppaṭaṉ, n. Village watchman; ஊர்க்காவற்காரன். (யாழ். அக.) |
தருப்பணம் 1 | taruppaṇam, n. <>tarpaṇa. 1. See தர்ப்பணம். . 2. Food, refreshment; 3. Fried paddy pestled and cleaned; |
தருப்பணம் 2 | taruppaṇam, n. <>darpaṇa. See தர்ப்பணம். (பிங்.) . |
தருப்பம் 1 | taruppam, n. <>darpa. 1. Arrogance, self-conceit; கருவம். தருப்பமிகு சலந்தரன் (தேவா. 575, 8). 2. Musk; |
தருப்பம் 2 | taruppam, n. See தருப்பை. . |
தருப்பாக்கிரம் | taruppākkiram, n. <>dar. bhāgra. Spike of darbha grass; தருப்பை நுனி. நெய்க்குள்ளே விடுகிற தருப்பாக்கிரத்தை (சீவக. 2465, உரை). |
தருப்பி 1 - த்தல் | taruppi-, 11 v. intr. <>tṟp. See தர்ப்பி. நீராடித் தருப்பித்து நியமங்கள் செய்வார் (பெரியபு. திருஞான. 60). . |