Word |
English & Tamil Meaning |
---|---|
தருமசாஸ்திரம் | taruma-cāstiram, n. <>id. +. See தருமநூல். . |
தருமசிந்தை | taruma-cintai, n. <>id. +. Charitable or virtuous disposition; அறம்புரியுங் கருத்து. |
தருமசீலன் | taruma-cīlaṉ, n. <>id. +. See தருமசாலி. . |
தருமசீலி | taruma-cīli, n. <>id. +. Fem. of தருமசீலன். Charitable woman; அறம்புரிபவள். |
தருமசூட்சுமம் | taruma-cūṭcumam, n. <>id. +. A subtle point in ethics; நுணுகி அறிதற்குரிய தருமம் |
தருமணல் | taru-maṇal, n. <>தா-+. Sand newly spread, as on festive occasions; திருவிழா முதலியவற்றிற் புதிதாகக்கொண்டுவந்து பரப்பும் மணல். தருமணன் முற்றம் (மதுரைக். 684). |
தருமத்தியானம் | taruma-t-tiyāṉam, n. <>dharma + dhyāna. (Jaina.) Knowledge of the nature of the soul, its experiences of good and evil, the impediments in its progress, and its final attainment of eternal bliss; ஆன்மாவின் இயல்பு. அதன் சுகதுக்கானுபவம், அது நல்வழியடை தலைத் தடுக்கும் தடைகள், அது முடிவில் நித்தியசுகத்தையெய்துகை ஆகிய தத்துவங்களைப் பற்றிய உணர்வு. இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப (குறள், 286, உரை). |
தருமதலைவன் | taruma-talaivaṉ, n. <>id. +. Buddha, as supreme in virtue; [தருமத்திற்கு உரிய தலைவன்] புத்தன், தருமதலைவன் றலைமையி னுரைத்த (மணி. 11, 30). |
தருமதாயம் | taruma-tāyam, n. <>id. +. Inam granted for any charitable purpose; property or funds bequeathed and dedicated to pious uses; அறத்திற்காக விடும் இறையிலிநிலம். (W. G. 137.) |
தருமதானம் | taruma-tāṉam, n. <>id. +. Charity according to prescribed texts; சமய தருமப்படிசெய்யும் தானம். எங்கோன் முற்பவத்திற் புண்ணியத்தையுந் தருமதானத்தையுந் செய்தோ னாதலின் (சிலப். 15, 30, உரை). |
தருமதி | tarumati, n. <>தா-. That which is due in money or goods, balance due; நிலுவை. (J.) |
தருமதேவதை | taruma-tēvatai, n. <>dharma+. 1. Hindu deity of Justice and righteousness, described as placing 4 feet on the brazen, and 1 in the iron age; கிருதயுகத்தில் நான்கு கால்களையும், திரேதாயுகத்தில் மூன்று கால்களையும், துவாபரயுகத்தில் இரண்டு காலகளையும் கலியுகத்தில் ஒரு காலையும் பூமியில் ஊன்றி நிற்பதாகக் கருதப்படும் அறக்கடவுள். (சிலப்.18, 41, அரும்.) 2. Jaina Goddess of Benevolence; 3. Yama; |
தரும நாள் | taruma-nāḷ, n. <>id. +. The second nakṣatra; பரணிநாள். (பிங்.) |
தரும நியாயம் | taruma-niyāyam, n. <>id. +. See தருமநீதி. . |
தருமநீதி | taruma-nīti, n. <>id. +. Justice, as based on the legal codes; தரும சாஸ்திரங்களிற் கூறும் நீதி. |
தருமநூல் | taruma-nūl, n. <>id. +. Ancient text-books on Hindu law, in Sanskrit, 18 in number, viz., Maṉu, Attiri, Viṇṭu, Vāciṭṭam, yamam, Apattampam, Yāavaṟkiyam, Parācaram, Aṅkiracam, Ucaṉam, Kāttiyāyaṉam, Camvarttam, Viyācam, Pirakaṟpati, Caṅkalitam, Cātātapam, Kautamam, Takkam; மனு, அத்திரி, விண்டு, வாசிட்டம், யமம், ஆபத்தம்பம், யாஞ்ஞவற்கியம், பராசரம், ஆங்கிரசம், உசனம், காத்தியாயனம், சம்வர்த்தம், வியாசம், பிரகற்பதி, சங்கிலிதம், சாதாதபம், கௌதமம், தக்கம் எனப் பதினெண்வகைப்பட்ட அறநூல். (பிங்.) |
தருமநூற்பிரிவு | taruma-nūṟ-pirivu, n. <>id. +. Sections in the legal treatise, numbering three, viz., ācāram, vivakāram, pirāyaccittam; ஆசாரம், விவகாரம், பிராயச்சித்தம் எனத் தரும சாத்திரம் கூறும் மூன்றுபகுதிகள். |
தருமப்பள்ளி | taruma-p-paḷḷi, n. <>id. +. Charity school; அறப்புறமான கல்விச்சாலை. |
தருமப்பிரபு | taruma-p-pirapu, n. <>id. +. Benefactor, benevolent lord; மிகுதியாக அறம் புரிவோன். |
தருமப்பிள்ளை | taruma-p-piḷḷai, n. <>id. +. One brought up by public charity in the profession of pole-dancing; கழைக்கூத்தரின் வளர்ப்புப்பிள்ளை. (w.) |
தருமப்பூணூல் | taruma-p-pūṇūl, n. <>id. +. Investiture of a poor Brahmin boy with the sacred thread, performed in charity; ஏழைப் பார்ப்பனப்பிள்ளைக்குத் தருமமாகச் செய்விக்கும் உபநயனம். |
தருமப்பெட்டி | taruma-p-peṭṭi, n. <>id. +. Charity-box, contribution boxes; தருமக் காணிக்கையிடும் பெட்டி. |
தருமபத்தினி | taruma-p-pettiṉi, n. <>id. +. Legitimate wife entitled to take part along with her husband in all rituals; கணவனோடு உடனிருந்து வைதிக கருமங்களை நடத்ததற்குரிய இல்லறக்கிழத்தி. |