Word |
English & Tamil Meaning |
---|---|
தருப்பி 2 - த்தல் | taruppi-, 11 v. tr. <>arpi. To dedicate oneself to God by daily japa and dhyāna; செபத்தியானங்களால் கடவுளுக்குத் தன்னை அர்ப்பித்தல். (J.) |
தருப்பி 3 | taruppi, n. See தருவி. (யாழ். அக.) . |
தருப்பு | taruppu, n. [T. K. tarupu.] A white stone of inferior value; குறைந்த விலையுள்ள ஒரு வகை வெள்ளைக்கல். (S. I. I. ii, 214, 18.) |
தருப்பை | taruppai, n. <>darbha. Kaus, the sacred grass, Poa cynosuroides; குசைப்புல். வசிட்டன் றருப்பையோ டினிதி னெய்தினான் (கம்பரா. கடிமண. 84). |
தருமக்கட்டு | taruma-k-kaṭṭu, n. <>தருமம்+. A sub-division of the Kāppiliya caste; காப்பிலியர் பிரிவுவகை. (E. T. iii, 216). |
தருமக்கட்டை | taruma-k-kaṭṭai, n. <>id. +. Loc. 1. Orphan, as supported by charity; [பிறர்தருமத்தால் வாழும் சரீரம்] அநாதப்பிள்ளை. 2. Rubbing post for cattle, set up as a charity; |
தருமக்கல் | taruma-k-kal, n. <>id. +. Memorial slab inscribed with the charitable deeds of a person; ஒருவன் செய்த தருமச்செயல் வரையப்பட்ட கல்வெட்டு. Loc. |
தருமக்கிழத்தி | taruma-k-kiḻatti, n. <>id. +. See தருமதேவதை, (சங். அக.) . |
தருமக்கிழவர் | taruma-k-kiḻavar, n. <>id. +. 1. Guardians of virtue; தருமத்தைக்காப்பவர். (சங். அக.) 2. Vaišya caste, as enjoined to do charity; |
தருமக்குரல் | taruma-k-kural, n. <>id. +. See தருமக்கூச்சல். Loc. . |
தருமக்கூச்சல் | taruma-k-kūccal, n. <>id. +. General call or invitation, as in a free distribution of food; பொதுப்படக் கூவும் அழைப்புச் சத்தம். |
தருமக்கொள்ளி | taruma-k-koḷḷi, n. <>id. +. Cremation, in charity, of a person who dies homeless; அறவைப்பிணஞ்சுடுகை. |
தருமக்கோள் | taruma-k-kōḷ, n. <>id. +. Indirect information as to a secret crime; இரகசியத்திற் செய்த குற்றத்தைச் சாடையாகச் சொல்லுகை. (J.) |
தருமகர்த்தா | taruma-karttā, n. <>id. +. 1. Manager or trustee of a Hindu temple; கோயிலதிகாரி. 2. Judge, arbitrator, magistrate; |
தருமகாரியம் | taruma-kāriyam, n. <>id. +. Act of charity; அறச்செயல். |
தருமச்செல்வி | taruma-c-celvi, n. <>id. +. (பிங்.) 1. See தருமதேவதை, . 2. Pārvatī; |
தருமச்செலவு | taruma-c-celavu, n. <>id. +. Expenditure on charity; அறத்திற்காகச் செலவிடுஞ் செலவு. |
தருமச்சேட்டை | taruma-c-cēṭṭai, n. <>id. +. Corn set apart in a winnowing fan at the threshing-floor to be given to the poor; நெற்களத்தில் ஏழைகட்குக் கொடுக்கவேண்டி முறத்தில் தனியே வைக்கப்பட்டுள்ள தானியம். |
தருமசக்கரம் | taruma-cakkaram, n. <>id. +. (Buddha and Jaina.) The wheel of Dharma; அறவாழி. தருமசக்கர முருட்டினன் வருவோன் (மணி. 10, 26). |
தருமசங்கடம் | taruma-caṅkaṭam, n. <>id. +. Difficulty of discerning which of two contradictory duties is proper; மாறுபட்ட இரண்டு கடமைகளுள் எதனை முடிப்பது என்று தெரியாத நிலைமை. |
தருமசத்திரம் | taruma-cattiram, n. <>id. +. Rest-house for travellers with free provision for food; அன்னசத்திரம். |
தருமசபை | taruma-capai, n. <>id. +. Council of arbitrators, court of justice, tribunal; நியாயஸ்தலம். Loc. |
தருமசமஸ்காரம் | taruma-camaskāram. n. <>id. +. See தருமக்கொள்ளி. . |
தருமசாட்சி | taruma-cāṭci, n. <>id. +. 1. King's evidence, court witness; நியாயஸ்தலத்தாரால் அழைக்கப்பட்டுக் கேட்கப்படும் சாட்சி. Loc. 2. Testimony given in the name of the Goddess of Virtue; |
தருமசாடி | taruma-cāṭi, n. <>id. + சாடை. See தருமக்கோள். (w.) . |
தருமசாத்திரம் | taruma-cāttiram, n. <>id. +. See தருமநூல். . |
தருமசாதனம் | taruma-cātaṉam, n. <>id. +சாதனம்3. Deed of endowment inscribed on a copper-plate; அறச்செயலைக் குறிக்குந் தாமிரப் பட்டயம். |
தருமசாலி | taruma-cāli, n. <>id. +. Charitable person; தருமவான். |
தருமசாலை | taruma-cāla, n. <>id. +. 1. See தருமசத்திரம். . 2. Almonry where the 32 kinds of aṟam are performed; |