Word |
English & Tamil Meaning |
---|---|
தருமபீடிகை | taruma-pīṭikai, n. <>id. +. Pedestal bearing Buddha's feet, worshipped in many places; புத்தரது பாதங்கள் அமைந்த பீடம். புரையோ ரேத்துந் தருமபீடிகை தோன்றியது (மணி. 8, 63). |
தருமபுத்திரன் | taruma-puttiraṉ, n. <>id. + putra. 1. Yudhiṣṭhira, the son of yamadharma, and eldest of the Pāṇdu princes, one of Paca-pāṇṭavar, q.v.; யமதருமன் புத்திரனும் பாண்டவருள் மூத்தவனுமான யுதிஸ்டிரன். 2. Lawful son, son begotten of one's taruma-pattiṉi (R. F.); |
தருமபுரம் | taruma-puram, n. <>id. +. 1. City of yama; யமபுரி. 2. A šiva shrine near Māyavaram in Tanjore district, famous for its šaiva mutt; |
தருமம் | tarumam, n. <>dharma. 1. Virtuous deed; நற்செயல். (பிங்.) 2. Statute, ordinance, law, sacred, law; 3. See தருமநூல். (உரி. நி.) 4. Usage, practice, customary observance or prescribed conduct; 5. Duty; 6. Justice, righteousness; 7. Charity, benevolence; 8. Nature; inherent qualities; characteristics; instinct; |
தருமமன்று | taruma-maṉṟu, n. <>தருமம் +. See தருமசபை. ஓரடியிடாமற் றடுத்துவா தரும மன்றுள் (திருவாலவா. 41, 10). . |
தருமமுதல்வன் | taruma-mutalvaṉ, n. <>id. +. Arhat; அருகக்கடவுள். சித்தன் பகவன் தருமமுதல்வன் (சிலப்.10, 178). |
தருமமூர்த்தி | taruma-mūrtti, n. <>id. +. Embodiment of Dharma; தருமமே உருவானவன். நந்த மாலவாய்த் தருமமூர்த்தி (திருவாலவா. 20, 8). |
தருமமைந்தன் | taruma-maintaṉ, n. <>id. +. See தருமபுத்திரன். (பிங்.) . |
தருமராச்சியம் | taruma-rācciyam, n. <>id. +. Country of righteous rule or charity, as Travancore state; திருவிதாங்கோடுபோன்ற தருமம் பெருகிய நாடு. |
தருமராசன் | taruma-rācaṉ, n. <>id. +. 1. See தருமன். (சூடா.) விண்ணிடைத் தருமராசன் விரும்பினால் விலக்குவாரார் (தேவா. 523, 2.) . 2. Silvery-leaved ape flower. |
தருமராசாக்கல் | taruma-rācā-k-kal, n. <>dharma-rāja +. Adam's peak in ceylon. See சமந்தகூடம். |
தருமரேகை | taruma-rēkai, n. <>dharma +. (Palmistry.) A line in a person's palm indicating his benevolent disposition; அறஞ் செய்குணத்தைக் குறிக்கும் கை வரை. (திருவாரூ. குற. MSS.) |
தருமலோபம் | taruma-lōpam, n. <>id. +. Omission to do one's duty; அறக்கடமை தவறுகை. |
தருமவட்டி | taruma-vaṭṭi, n. <>id. + vṟddhi. Equitable, fair rate of interest; நியாய வட்டி. |
தருமவதி | tarumavati, n. <>dharma-vatī. Charitable and virtuous woman; அறச்செயலுள்ள பெண். |
தருமவந்தன் | tarumavantaṇ, n. <>dharma-vantah masc. pl. of. dharma-vat. See தருமவான். . |
தருமவாகனன் | taruma-vākaṉaṉ, n. <>dharma + vāhana. šiva, as riding on bull which is dharma personified; [தருமரூபியான இடபத்தை வாகனமாகக்கொண்டவன்] சிவன். (யாழ். அக.) |
தருமவாசனம் | taruma-v-ācaṉam, n. <>id. + āsana. See தருமசபை தருமவாசனத்தி லேற (திருவாலவா. 41, 13). . |
தருமவாட்டி | taruma-v-āṭṭi, n. <>id. + ஆள்-. Fem of தருமவாளன். See தருமவதி. |
தருமவாடி | taruma-vāṭi, n. <>id. + vāṭi. Place in which alms are given; பிச்சைவழங்கும் இடம். |
தருமவாளன் | taruma-v-āḷaṉ, n. <>id. + ஆள்-. See தருமவான். . |
தருமவாளி | taruma-v-āḷi, n. <>id. +. See தருமவான். . |
தருமவான் | taruma-vāṉ, n. <>dharma-vān masc. nom. sing. of dharma-vat. Charitable and virtuous man; தருமசிந்தை யுள்ளோன். தணிகைவாழ் தருமவானையே (அருட்பா, பணித்திறஞ் சாலாமை, 1). |
தருமவியாதன் | taruma-viyātaṉ, n. <>dharma + vyādha. A hunter-sage of great spiritual wisdom; ஞானமிக்க ஒரு வேடன். (அஷ்டாதச. ஸ்ரீவசன. 231.) |
தருமவினைஞர் | taruma-viṉaiar, n. <>id. +. Officers in charge of charities; அறப்புறங்களைப் பரிபாலிக்கும் அர்ரசாங்க அதிகாரிகள். தரும வினைஞருந் தந்திரவினைஞரும் (சிலப். 26, 41). |