Word |
English & Tamil Meaning |
---|---|
தரைத்தேவர் | tarai-t-tēvar, n. <>id. +. Brahmins, as gods on earth; [பூசுரர்] பிராமணர் தரைத்தேவர் பணிசண்பை (தேவா. 145, 5). |
தரைதட்டு - தல் | tarai-taṭṭu- v. intr. <>id. +. To run aground, as a ship; கப்பல் தரையில் மோதுதல். தரைதட்டின கப்பல்போல. |
தரைப்பங்கு | tarai-p-paṅku, n. <>id. +. See தரைவாரம். (J.) . |
தரைப்படு - தல் | tarai-p-paṭu-, v. intr. <>id. +. 1. To prostrate; to fall on the ground; கீ«ழு வீழ்தல். தரைப்படுமளவிற் றத்தா நமரெனத் தடுத்து வீழ்ந்தார் (பெரியபு. மெய்ப்பொரு. 16). இவ்வுக்தியோடே தரைப்பட்டு (ஈடு, 7, 4, 10). 2. To be immersed; |
தரைப்படுத்து - தல் | tarai-p-paṭuttu-, v. tr. Caus. of தரைப்படு-. To make one fall flat on the ground; to defeat; தோற்கச் செய்தல். கசதுங்க பலத்தையுந் தரைப்படுத்தி (பாரதவெண். 785). |
தரைப்பற்று | tarai-p-paṟṟu, n. <>தரை +. Plains; சமபூமி. Loc. |
தரைமகன் | tarai-makaṉ, n. <>id. +. Mars, as son of Earth; [பூமியின் மகன்] செவ்வாய். (விதான. பஞ்சாங்க. 17.) |
தரையர் | taraiyar, n. <>id. People on the earth, earthly beings; பூமியிலுள்ளோர். வானத்தருமானத் தரையரை வைப்பர் (மருதூ. 98). |
தரையாணி | tarai-y-āṇi, n. <>தரை-+. A double-headed spike, clinched and headed at the smaller end after being driven in; ஆணிவகை. (w.) |
தரையாமை | tarai-y-āmai, n. <>தரை + ஆமை. Land-tortoise, Testudo elegans; ஆமைவகை. |
தரையிடு - தல் | tarai-y-iṭu-, v. tr. <>தரை +. To rivet a nail at both ends after fixing it; அடித்த ஆணியின் இருபுறத்தையும் மடக்குதல். Loc. |
தரையில்லாக்குருவி | tarai-y-illā-k-kuruvi, n. <>தரை +. 1. Swallow, Hirundinidae; தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்குங் குருவிவகை. (w.) 2. Swift, Cypselinae; |
தரையோடு | tarai-y-ōṭu, n. <>id. +. Flooring tiles; தரையிற் பாவுதற்குரிய ஓடு; |
தரைவாரம் | tarai-vāram, n. <>id. +. Owner's share of agricultural produce; மேல்வாரம். (J.) |
தரோகா | tarōkā, n. <>U. darōgh. Lie, falsehood; பொய் |
தரோபஸ்து | tarōpastu, adv. <>U. dar-ō-bast. Entire, whole; முழதும். (C. G.) |
தல்லம் | tallam, n. (யாழ். அக.) 1. Pit; குழி. 2. Pond; |
தல்லி | talli, n. <>T. talli. Mother தாய். (அக. நி.) டில்லிக்குப் பாச்சாவானாலுந் தல்லிக்குப் பிள்ளை தான். |
தல்லு | tallu, n. cf. talla. Sexual intercourse; புணர்ச்சி. (J.) |
தல்லு - தல் | tallu-, 5 v. tr. To beat, crush; இடித்து நசுக்குதல். இஞ்சியைத் தல்லிப் பிழிந்து சாறெடுத்தான். Nā. |
தல்லுமெல்லு | tallu-mellu, n. Scuffle; இழபறி. (யாழ். அக.) |
தல்லை | tallai, n. (யாழ் அக.) 1. Young woman; இளம் பெண். 2. Float; |
தலக்கம் | talakkam, n. cf. தலக்கு. Base conduct; இழிசெயல். தலக்கமேசெய்து வாழ்ந்து (தேவா. 523, 5). |
தலக்காவல் | tala-k-kāval, n. <>tala +. 1. System of guarding a tract of country against open marauders; கொள்ளைக்காரர்களுக்கு இடங்கொடாது செய்யுந் தேசக்காவல். 2. Office of watching produce and performing general duties, as collecting revenue; |
தலக்கு | talakku, n. [T. talaku.] Sense of shame; இலச்சை. தலக்கற்றுச் சொல்லும்படியான ஆற்றாமை (ஈடு, 10, 10, ப்ர.). |
தலகாணி | talakāṇi, n. Corr. of See தலையணை. . |
தலசம் | talacam, n. <>sthala-ja. Pearls produced in the earth; பூமியிற்றோன்றிய முத்து. (திருவாலவா. 25, 16, அரும்.) |
தலசயனம் | tala-cayaṉam, n. <>sthala + šayana. Shrine where the image of Viṣṇu is in the sleeping posture, as at Mahabalipuram; மகாபலிபுரம் முதலியவற்றிற்போலத் திருமால் நிலத்திற் பள்ளகொண்ட திருகோலமுள்ள தலம். கடன் மல்லைத் தலசயனம் (திவ். பெரியதி. 2, 5, 1). |
தலசுத்தி | tala-cutti, n. <>id. + šuddhi. 1. Cleansing the place where leaves are spread for serving food; உண்கலஞ் சேர்ப்பதற்குமுன் அது வைக்குமிடத்தை நீரிட்டுச் சுத்திசெய்கை. 2. Ceremonial purification of a house, as after a death or birth; |