Word |
English & Tamil Meaning |
---|---|
தலைக்குமேலே | talaikku-mēlē, adv. <>id. +. Exceeding all bounds, as price, anger, shame, pride, etc.; அளவுக்கு மிஞ்சி. |
தலைக்குலை | talai-k-kulai, n. <>id. +. 1. First bunch of the season; முதற்குலை. (w.) 2. Tip of a bunch of fruit; |
தலைக்குறை | talai-k-kuṟai, n. <>id. +. (Gram.) Aphaeresis; சொல்லின் முதற்குறை. (சீவக. 365, உரை.) |
தலைக்கூட்டு 1 - தல் | talai-k-kūṭṭu-, v. tr. Caus. of தலைக்கூடு-. 1. To unite; கூட்டுவித்தல். 2. To accomplish an object; |
தலைக்கூட்டு 2 | talai-k-kūṭṭu-, v. tr. Caus. of தலைக்சூடு. 1. Principal partner in a business; வியாபாரத்தின் தலைமைக்குட்டாளி. Colloq. 2. See தலைக்கட்டியமொழி. (சூடா.) |
தலைக்கூடு - தல் | talai-k-kūṭu-, v. intr. <>தலை +. 1. To assemble, join, come into association; ஒன்று சேர்தல். உவப்பத் தலைக்கூடி யுள்ளப்பிரிதல் (குறள், 394). 2. To be accomplished to succeed; |
தலைக்கெண்ணெய் | talai-k-keṇṇey, n. <>id. +. Distributing oil for the head, one of muppattiraṇṭaṟam, q. v.; முப்பத்திரண்டறங்களுள் சிரத்தில் தேய்த்துக்கொள்ள எண்ணெய் உதவும் அறச்செயல். (திவா.) |
தலைக்கை | talai-k-kai, n. <>id. +. Most eminent person; தலைமையானவன்.ள். தூப்பாலமைச்சர் மேற்பாலறிவிற், றலைக்கையாகிய... சாலங்காயன் (பெருங். நரவாண. 7, 83). |
தலைக்கைதா - தல் [தலைக்கைதருதல்] | talai-k-kai-tā, n. <>id. +. To show one's great love, as to a woman, by clasping in the arms; கையால் தழுவி அன்புகாட்டுதல். எல்வளை மகளிர்க்குத் தலைக்கை தரூஉந்து (புறா. 24, 9). |
தலைக்கொம்பு | talai-k-kompu, n. <>id. +. 1. The bent front of a palanquin pole; பல்லக்குத் தண்டின் வளைந்த முன்பாகம். 2. Front place among palanquin-bearers; 3. Superior person; |
தலைக்கொள் (ளு) - தல் | talai-k-koḷ-, v. <>id. + intr. 1. To rise to the head, after the head, as poison, bile, liquor; தலைக்கேறுதல். 2. To overflow, as a torrent; to grow in abundance; 3. To die; 1. To overcome; 2. To undertake; 3. To approach, go near; 4. To capture, oke possession of; 5. To commence; 6. To destroy; |
தலைக்கோடை | talai-k-kōṭai, n. <>id. +. See தலைச்சோழகம். (w.) . |
தலைக்கோதை | talai-k-kōtai, n. <>id. +. Wreath worn by women on their foreheads; நெற்றிக்கட்டுமாலை. தார்கொண்டா டலைக்கோதை (கலித். 66, 15). |
தலைக்கோல் | talai-k-kōl, n. <>id. +. Title given to a dancing-girl who is an adept in her profession; ஆடற்கணிகையர்பெறும் பட்டம். மலைப்பருந் சிறப்பிற் றலைக்கே லரிவையும் (சிலப். 14, 154). |
தலைக்கோலம் | talai-k-kōlam, n. <>id. +. A kind of head-ornament worn by women; மகளிர் தலையணிவகை. (பிங்.) தலைக்கோலமாகிய முத்தும் (சீவக. 349, உரை). |
தலைக்கோலாசான் | talai-k-kōl-ācān, n. <>தலைக்கோல் +. One who gives training in dancing, dancing-master; நட்டுவன். தலைக்கோலாசான் பின்னுள னாக (சிலப். 30, 20). |
தலைக்கோலி | talai-k-kōli, n. <>id. +. Dancing woman who is an adept in her profession; ஆடிமுதிர்ந்த கணிகை. கூத்தன் நம்பிராட்டியான மனஞ்செய்த பெருமாள் தலைக்கோலி (S. I. I. v, 145). |
தலைக்கோழி | talai-k-kōḻi, n. <>id. +. Cock that crows first in the early morning; வைகறையில் முதலிற் கூவுங் கோழி.தலைக்கோழி கூவும் நேரம். |
தலைக்கோற்றானம் | talai-k-kōṟṟāṉam, n. <>தலைக்கோல் +. Stage for dancing; நாடகவரங்கு. தலைக்கோற்றானத்துச் சாபநீங்கிய ... மாதவி (சிலப். 3, 3, அரும்.). |
தலைகட்டு - தல் | talai-kaṭṭu-, v. intr. <>தலை +. 1. To dress the hair; மயிர்முடித்தல். 2. To make selvage for a mat, a cloth, etc.; 3. To write headings, as in books, accounts; |
தலைகவிழ் - தல் | talai-kaviḻ-, v. intr. <>id. +. 1. To hang down one's head, as through shame discomfiture, etc.; நாணம் முதலியவற்றால் தலைசாய்த்தல். 2. To be turned upside down topsy-turvy; 3. To be proud; |