Word |
English & Tamil Meaning |
---|---|
தலைகழி - த்தல் | talai-kaḻi-, v. tr. <>id. +. 1. To discharge fully, as one's duty, debt; கடமை முதலியவற்றைச் செய்து தீர்த்தல். கழிந்தோர்க்கொத்த கடந் தலைகழிக்கென (பெருங். வத்தவ. 1. 29). 2. To get one's head shaved; |
தலைகாட்டு - தல் | talai-kāṭṭu-, v. intr. <>id. +. 1. To attend for a short time, give attendance; சிறிதுநேரம் வந்து தங்கியிருத்தல். 2. To appear in public; 3. To rise to prominence; |
தலைகாண்(ணு) - தல் | talai-kāṇ-, v. tr. <>id. +. To patronize, protect, maintain; பரிபாலித்தல். தண்டமிழ்நூல் கலங்காமற் றலைகண்டானே (பாரத. சிறப்புப். 18) |
தலைகிழக்கா - தல் | talai-kiḻakkā-, v. intr. <>id. +. To perish; அழிவடைதல். (குறாள்,488.) |
தலைகீழாய் | talai-kīḻ-āy, adv.. <>id. +. 1. Upside down; நேர்நிலை தவறி. அவனிலைமை தலைகீழாய்ப் போய்விட்டது. 2. Perfectly, through and through, as from top to bottom; |
தலைகீழாய்நில் - தல் [தலைகீழாய்நிற்றல்] | talai-kīḻay-nil-, v. intr. 1. To be arrogant; மிகக் கருவங்கொள்ளுதல். 2. To take pains; |
தலைகுலை - தல் | talai-ku;ai-, v. intr. <>id. +. To be routed; நிலைகெடுதல். உளைந்தமார்... தலைகுலைந்தோடி (சேதுபு. தேவிபு. 15). |
தலைகுனி - தல் | talai-kuṉi-, v. <>id. +. tr. To bow one's head in respect; தலையால் வணங்குதல்.--intr. See தலைகவிழ்-, 1. |
தலைகொட்டினமாறி | talai-koṭṭiṉa-māṟi, n. [T. talakoṭlamāri.] See தலைக்கட்டுமாறி. . |
தலைகொடு - த்தல் | talai-koṭu-, v. intr. <>தலை +. 1. To undertake entire responsibility; காரியத்தை நிர்வகித்தல். 2. To interfere unnநcessarily in another's affairs; 3. To help another in an emergency even at one's own risk; |
தலைகொழு - த்தல் | talai-koḻu-, v. intr. <>id. +. To be haughty; to have a swelled head; அகங்கரித்தல். |
தலைச்சங்கம் | talai-c-caṅkam, n. <>id. +. The earliest Sangam, first of the three ancient Tamil academies, said to have flourished at South Maturai now under sea; கடல்கொள்ளப் பட்ட தென்மதுரையில் இருந்ததாகச் சொல்லப்படும் முதலாந் தமிழ்ச்சங்கம். (இறை. 1, உரை.) |
தலைச்சவரம் | talai-c-cavaram, n. <>id. +. Shaving of the head. See சவரம். தலைச்சவரம் பண்ணுவதேன் (தமிழ்நா.). |
தலைச்சன் | talaiccaṉ, n. <>id. First born; முதற்பிள்ளை. Colloq. |
தலைச்சாத்து | talai-c-cāttu, n. <> id. +. Head-dress, turban; தலைப்பாகை. மென்றலைச் சாத்தணிந்து (பிரபுலிங். பிரபுதே. 7). |
தலைச்சாமான் | talai-c-cāmāṉ, n. <>id. +. Set of jewels consisting of a central piece lying along the parting of the hair, a left limb in the form of the crescent moon and a right limb in the form of the sun; இடப்பக்கம் மதிப்பினறபோலவும், வலப்பக்கம் சூரியன்போலவும் உள்ளதும் நடுக்கோடு வகிர்மேற் செல்வதுமான மகளிர் தலையணிவகை. |
தலைச்சாவகன் | talai-c-cāvakaṉ, n. <>id. + šrāvaka. Chief pupil; முதல்மாணாக்கன். பெரியோன்றனக்குத் தலைச்சாவகனாய். (மணி. 21, 179) . |
தலைச்சாவிவெட்டு - தல் | talai-c-cāvi-veṭṭu-, v. intr. <>id. +. To poll the plants preventing overgrowth; பயிர் மதர்த்துப்போகாதபடி நுனியை வெட்டுதல். செருக்குக்குத் தலைச்சாவிவெட்டியாடினபடி (ஈடு, 2, 7, 4). |
தலைச்சிரங்கு | talai-c-ciraṅku, n. <>id. +. Eczema, scald head, Taenia capitis, தலையில் வரும் புண். |
தலைச்சிற - த்தல் | talai-c-cṟa-, v. intr. <>id. +. 1. To increase; மிகப்பெருகுதல். நன்முனிவரின்பந் தலைச்சிறப்ப (திவ். திருவாய். 10, 7, 5). 2. To become prominent; |
தலைச்சீரா | talai-c-cīrā, n. <>id. +. Helmet, head-piece; தலைக்கவசம். (சூடா.) |
தலைச்சீலை | talai-c-cīlai, n. <>id. +. 1. See தலைச்சாத்து. . 2. Upper cloth; |
தலைச்சுண்டு | talai-c-cuṇṭu, n. <>id. +. Scurvy head, dandruff; பொடுகு. |
தலைச்சுமடு | talai-c-cumaṭu n. <>id. +. See தலைச்சுமை. . |
தலைச்சுமை | talai-c-cumai, n. <>id. +. 1. See ¢சுமை, 2, 4. . 2. Head load; |