Word |
English & Tamil Meaning |
---|---|
தலைத்திண்ணை | talai-t-tiṇṇai, n. <>id. +. Front pial; முகப்புத்திண்ணை. |
தலைத்திமிர் | talai-t-timir, n. <>id. +. 1. Heaviness of the head, as through cold; தலைக்கனம். (w.) 2. Arrogance, headstrongness; |
தலைத்திராணம் | talai-t-tirāṇam, n. <>id. + trāṇa. See தலைச்சீரா. (சூடா.) . |
தலைத்திருப்பம் | talai-t-tiruppam, n. <>id. +. See தலைச்சுற்றல். . |
தலைத்திருப்பு | talai-t-tiruppu, n. <>id. +. See தலைச்சுற்றல். . |
தலைத்திவசம் | talai-t-tivacam, n. <>id. +. The first annual ceremony of a deceased person; இறந்தவர்பொருட்டு முதலாமாண்டு முடிவில் நடத்துஞ் சிராத்தம். |
தலைத்தீபாவளி | talai-t-tīpāvaḷi, n. <>id. +. The first tīpāvali festival after marriage, celebrated at the bride's house; கல்யாணமானபின் மணமகள்வீட்டில் முதன்முதற் கொண்டாடுந் தீபாவளிப் பண்டிகை. |
தலைத்தோற்கழலை | talai-t-tōṟ-kaḻalai, n. <>id. +. Wen on the scalp; தலையில் உண்டாம் தசைத்திரளை. (M. L.) |
தலைத்தோற்றம் | talai-t-tōṟṟam, n. <>id. +. (Puṟap.) Theme describing the exultation of a warrior's kinsmen over his exploits in capturing his enemy's cattle; வீரனொருவன் பகைவர் பசு நிரையைக் கைப்பற்றி வருதலறிந்து அவனுறவுமுறையார் மனமகிழ்தலைக்கூறும் ஒரு புறத்துறை. (புறநா.262) தலைநகர்தல்ந் முனைமுறிதல். குன்றிமேற் கொட்டுந் தறிபோற்றலை தகர்ந்து (நாலடி.257) |
தலைதகர் - தல் | talai-takar-, n. <>id. +. To be broken at the top, as an instrument; முனைமுறிதல். குன்றின்மேற் கொட்டுந் தறிபோற் றலைதகர்ந்து (நாலடி, 257). |
தலைதட்டு - தல் | talai-taṭṭu-, v. tr. <>id. +. 1. To strike off the excess of grain at the top of measure, in measuring; அளவுப் படியின் தலை மீதாகவுள்ள தானியத்தை வழித்தல். 2. To put down; |
தலைதடவு - தல் | talai-taṭavu-, v. tr. <>id. +. Lit., to stroke the head. to ruin a person by deceit; [தலையைத் தடவுதல்] வஞ்சித்துக் கெடுத்தல். தலைதடவி மூளைதனை யுறிஞ்சவார் (விறலிவிடு.750). |
தலைதடுமாற்றம் | talai-taṭu-māṟṟam, n. <>id. +. Utter confusion; பெருங்குழப்பம். |
தலைதடுமாறு - தல் | talai-taṭu-māṟu-, v. intr. <>id. +. 1. To be bewildered; கலங்குதல். தலைதடுமாறா வீழ்ந்து புரண்டலறி (திருவாச. 3, 152). 2. To be thrown into confusion; |
தலைதடுமாறு | talai-taṭu-māṟu, n. <>id. +. Daze, bewilderment; மயங்குகை. தையனல்லா ரொடுந் தலைதடுமாறாகி (திருவாச. 41, 2). |
தலைதா - தல் [தலைதருதல்] | talai-tā-, n. <>id. +. tr. To raise one to eminence; முதன்மை அளித்தல். தாடந்தபோதே தலைதந்த (திருமந். 1591). --intr. See தலைகொடு-. |
தலைதாழ் - தல் | talai-tāḻ-, v. intr. <>id. +. 1. To show reverence by bowing one's head; வணங்குதல். 2. To show modesty by inclining one;s head, become shame-faced; 3. To be reduced in circumstances; |
தலைதின்(னு) - தல் | talai-tiṉ-, v. tr. <>id. +. Lit., to eat one's head. to destroy utterly; [தலையைத் தின்று விடுதல்] முற்றுங்கெடுத்தல் |
தலைதுலுக்கு - தல் | talai-tulukku-, v. intr. <>id. +. To nod one's head in agreement or approbation; தலையை அசைத்துச் சம்மதக்குறி காட்டுதல். அவன் செய்கிறோமென்று தலைதுலுக்கினால் (ஈடு, 10, 1, ப்ர.). |
தலைதுவட்டு - தல் | talai-tuvaṭṭu-, v. intr. <>id. +. To wipe and dry one's head after bath; தலைமயிரின் ஈரந்துடைத்தல். |
தலைதெறிக்க | talai-teṟikka, adv. <>id. +. Headlong, impetuously; பொறிகலங்கும்படி. தலைதெறிக்க வோடினான். |
தலைதொடு - தல் | talai-toṭu-, v. intr. <>id. +. 1. To take an oath by touching one's head; தலையைத் தொட்டு ஆணையிடுதல். தலைத்தொட்டேன் தண்பரங்குன்று (பரிபா.6, 95). 2. To become sponsor for a child in baptism; |
தலைதோய் - தல் | talai-tōy-, v. intr. <>id. +. To bathe for ceremonial purification or for health; நீரில் தலைமுழகுதல். (J.) |
தலைநகரம் | talai-nakaram, n. <>id. +. Capital city; பிரதான நகரம். Mod. |
தலைநகை | talai-nakai, n. <>id. +. See தலைச்சாமான். . |
தலைநடுக்கம் | talai-naṭukkam, n. <>id. +. See தலைநடுக்குவாதம். . |
தலைநடுக்கு | talai-naṭukku, n. <>id. +. See தலைநடுக்குவாதம். . |